#செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்)
பங்கேற்று உரையாற்றிகிறேன். அனைவரும் வருக! •••• ச.பென்னிகுயிக் பாலசிங்கத்தின் பதிவு (ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்) *செண்பகவல்லி கால்வாய்---தாகம் தீர்க்குமா...!!!* 60 ஆண்டு காலங்களுக்கு மேலாக செண்பகவல்லி கால்வாய் தண்ணீருக்காக காத்துக் கிடக்கிறது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள். மானாவாரி காடுகளுக்கு பெயர் பெற்ற கரிசல் காடுகளினூடாக ஏழெட்டு தலைமுறைகளாக பாய்ந்தோடி வந்த செண்பகவல்லி கால்வாய்த் தண்ணீர்,வேறு வழியேயின்றி இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 1965 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட நாளில் தொடங்கிய,விவசாயிகளின் போராட்டங்கள் இன்று வரை ஓயல்லை. இயல்பாகவே உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல,அது எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் அதை ஒருபோதும் மதித்து நடைமுறைப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு கேரளாவின் மீது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வரக்கூடிய குற்றச்சாட்டாகும். அது முல்லைப் பெரியாறாக இருக்கட்டும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, மலம்புழா, நெய்யாற்றின்கரை அணை என எல்லாவற்றிலும் அவர்களுடைய ஆதிக்கம் சுதந்திரத்திற்கு பின்னால் கொடிகட்டிப் பறக்கிறது. 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இன்னமும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்திலுள்ள பரணில் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அந்த அடிப்படையில் தான் அது செண்பகவல்லி கால்வாயியையும் அணுகுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 40 ஆண்டு காலம் தொடர் சட்டப் போராட்டங்கள் நடத்தியும்கூட முல்லைப் பெரியாறு அணையில் அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறோம் ஐந்து மாவட்ட விவசாயிகள். ஒருவேளை செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழ்நாடு உரிமை கோருமோ என்கிற கவலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கோட்டமலை டிவிசன், மணலாறு டிவிஷன், மாவடி மற்றும் சுந்தரமலை டிவிஷன்களை பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனாக அறிவித்தது கேரள மாநில அரசு. சிவகிரியையொட்டி இருக்கும் இந்த சுந்தரமலை டிவிசன்தான், செண்பகவல்லி கால்வாயின் மையப் பகுதியாகும். அது இன்றைக்கு ஒரு புலிகள் காப்பகத்தின் அங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டு, வாசுதேவநல்லூர் அருகே இருக்கும் தரணி சர்க்கரை ஆலையிலிருந்து தலையணை செல்லும் வழியில் நிறுவனமயமாக்கப்பட்டிருப்பதும் நிதர்சனமான உண்மை. கிட்டத்தட்ட 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட பெரியார் புலிகள் காப்பகத்தில், செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கிழக்கு டிவிஷன் மட்டும் சுமார் 620 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. கொடுமை என்னவென்றால் இவையெல்லாம் முறையாக 1956 மொழிவழிப் பிரிவினையின் போது அளவீடு செய்யப்படாத பகுதிகளாகும். செண்பகவல்லி கால்வாய் இருக்கும் பகுதி தற்போது புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்கிற நிலையில் மறுபடியும் அதற்குள் சென்று நம்மால் கால்வாயை சீரமைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உலகமெல்லாம் நடக்கும் போர் அத்துமீறல்களால் கான்கிரீட் கட்டிடங்கள் எல்லாம் உடைந்து சிதறும் நிலையில், கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் பாசனப்பரப்புக்காக நாம் சீரமைக்கச் சொல்வது மொத்தமுள்ள 1603 மீட்டரில், வெறும் 400 மீட்டர் நீள கட்டுமானம் மட்டுமே. தென்காசி மாவட்டத்தில், மேற்குப் பகுதியில் மட்டும் செழித்துக் கிடக்கும் வாசுதேவநல்லூரை உள்ளடக்கிய சிவகிரி தாலுகா, எப்போதும் வறண்டு கிடக்கும் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகாக்கள்... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் தாலுகாக்கள்... எப்போதும் வறண்டு கிடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்கள்... என செழித்து கிடக்கும் மக்கள் தொகையும், பரப்பளவும் எதிர்காலத்தை நினைத்து பயந்து கிடக்கிறது. நிலத்தடி நீரே குதிரைக் கொம்பாகியிருக்கும் காலகட்டத்தில், செண்பகவல்லி கால்வாய் தண்ணீர் மறுபடியும் பாய்ந்தோடி வந்தால் அத்தனை ஊரும் கூமாபட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கேரளா இந்த செண்பகவல்லி கால்வாய் உடைப்பை சரி செய்வதற்கு அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நம்முன் எழுந்து நிற்கிறது. வருடத்திற்கு 2,700 டிஎம்சி தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேரளா, போகிறபோக்கில் இந்த தமிழகத்திற்கு 100 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்துக் கொண்டே1/2
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment