அன்பிற்குரிய டி ஆர் பாலு அவர்களே!
ஆர். டி. சீத்தாபதிக்கு பின்பு,1980 களில் நீங்கள் சென்னை மாவட்ட செயலாளர் ஆனதிலிருந்து உங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன்.ஒரு காலத்தில் நீங்கள் ஒயிட் அண்ட் ஒயிட் சபாரி அணிந்து கொண்டு பியட் காரில் வருவீர்கள். அதற்கு முன் 1977 வரை புள்டட் பைக்கில் பேசின் பிரிஜ் மின் உற்பத்தி நிலையம் வரை செல்வீர்கள . என் வீடு இருந்த திருவல்லிகேணி சைடோஜி தெருவில் குடியிருந்த போது தங்களை பார்த்துள்ளேன்.
இப்போது நீங்கள் மத்திய அரசிடம் கீழடி அகழாய்விற்கு மட்டும் அழுத்தம் கொடுத்து அதை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்கள். தமிழின் தொன்மைகளை முதலில் தெரிய படுத்தியது ஆதிச்சநல்லூர் அகழாய்வு தானே. அவற்றை எடுத்து ஏன் பேச மறுக்கிறீர்கள். அல்லது உங்களுக்கு அது பற்றி தெரியாதா
1987 இல் நீங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகி முதன்முதலாகபதவி ஏற்கச் செல்லும் பொழுது உங்களை வைகோ அழைத்துச் சென்றார்.அப்போது கம்யூனிஸ்கள் போட்ட சிவப்புத் உள்ளன் சால்வை அவர்கள் வாக்களித்தார்கள் என்கிற முறையில் மேலே போட்டுக் கொண்டிருந்தீர்கள். நான் அப்போது டில்லியில் இருந்தேன் . அதற்குப் பிறகு சிவப்பு கருப்பு துண்டு போட ஆரம்பித்தீர்கள். துண்டு போடுவது எப்போதும் தமிழருடைய வழக்கம் தான். எல்லாவற்றையும் துண்டு துண்டாகப் போடுங்கள். அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையாபுரி பிள்ளை குறிப்பிட்டபடி தமிழர் நாகரீகம் சார்ந்த தொன்மை ஆய்வுகளில் ஆதிச்சநல்லூர் தான் முதன்மையானது என்று அவர்நிரூபித்திருக்கிறார். இந்த ஆய்வு பிரிட்டிஷ் காலத்திலே தொடங்கப்பட்டது. அதை வலியுறுத்த ஏன் உங்களுக்கு வாய் வர மறுக்கிறது. கீழடி கீழடி என்றே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லா அகழ்வாராய்ச்சியும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சத்தியமூர்த்தி அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்று திமுக இதுவரை வலியுறுத்தித் தீவிரமாக ஒன்றும் செயல்படவில்லையே. பிறகென்ன தமிழர் பண்பாடு? தமிழர் தொன்மை? தமிழர் தமிழர் என்று சொல்லிக்கொண்டே காலத்தை கடத்துவது தானே உங்கள் திட்டம். உங்களுக்கு எது தேவையோ அதற்கு முதன்மை கொடுக்கிறீர்கள். கீழடி ஆய்வைச் செய்தீர்கள் சரிதான். ஆதிச்சநல்லூரை கிடப்பில் போடுவீர்கள்.இதுதான் திமுகவின் இன்றைய நிலைமை. உங்களுக்கு தமிழர் தொன்மையும் தெரியாது! அவர்களது வரலாறும் தெரியாது!. ஆதிகாலத்தில் இருந்து ஆய்வு செய்து சேகரிக்கப்பட்ட தமிழர் கலாச்சாரத்தை தொடர்ந்து வாசித்து வந்ததும் கிடையாது.
இதைப்பற்றி யாராவது எங்கேயாவது சொன்னால் அதைப் போய் சபையில் பேசிவிட்டு வர வேண்டியது! அவ்வளவுதான்!. இந்த விஷயத்தில் நீங்களும் சரிதான்.! கனிமொழியும் சரிதான்.!

No comments:
Post a Comment