Thursday, July 17, 2025

சட்டக் கல்லூரியில் படித்த போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் மாணவி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

 சட்டக் கல்லூரியில் படித்த போது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த காதலனுடன் மாணவி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து படிப்பை முடித்து நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் அவரது நண்பர்கள், அவரது வீடியோ ஒன்று இணையதளங்களிலும், ஆபாச வலைதளங்களிலும் வலம் வருவதாக அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.


இந்த வீடியோக்களை முடக்கி, இணையதளத்தில் இருந்து நீக்கவும், எதிர்காலத்தில் அந்த வீடியோ பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் மத்திய அரசுக்கு புகார் மனு அளித்துள்ளார். 


மத்திய அரசுக்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட அவர் மனு தாக்கல் செய்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


மேலும் அந்த உத்தரவில், குடிமக்கள் அத்தனை பேரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என தெரிவித்த நீதிபதி, 


இதே போன்ற வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இது போன்ற வழக்குகளில் தமிழ்நாடு காவல் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் டிஜிபியையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். 


இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணையை ஜூலை 14ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். 


அந்த பெண் வழக்கறிஞரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாகக் கூறிய நீதிபதி, கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். 


நீதிபதியே உணர்ச்சிவயப்பட்டது, நீதிமன்ற அறையில் இருந்தவர்களை சற்று கண் கலங்கச் செய்தது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்