ஸ்டாலினுடைய அன்பு மருமகன் சபரீசனுக்குத் திமுகவினர் முழுக்கப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கி விட்டார்கள். சரிதான்!
ஆனால் கலைஞர் அவர்களின் மருமகன் வாழ்நாள் முழுக்க அவருக்குத் தொண்டாற்றியவர் கலைஞர் கண்ணால் இட்ட வேலைகளைக் கையால் செய்த நணன முரசொலி செல்வத்திற்கு ஏன் இத்தனை பிறந்தநாள் வாழ்த்துகளும் பாராட்டு மழைகளும் இல்லை! உண்மையைச் சொன்னால் முரசொலிசெல்வம் சாத்வீகமான முறையில் கட்சி சார்ந்த பல்வேறு தலைவர்களுடன் சுமூகமான உறவைப் பேணி அதன் அடிப்படைக்காக ஒருங்கிணைப்பிற்காக உழைத்தவர்.
அதையெல்லாம் மறந்துவிட்டு ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்காக ஒரே குரலில் எல்லோரும் பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வது காக்கா பிடிப்பதற்கா? இல்லை குடை பிடிப்பதற்கா?
என்று தெரியவில்லை. இதுதான் இன்றைய ஸ்டாலின் திமுகவில் நடந்து கொண்டிருக்கிறது. கழகத்தின் வரலாறும் அதன் போராட்டங்களையும் அறிந்தவர்களுக்கு இதை எண்ணிச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

No comments:
Post a Comment