கீழ்க்கண்ட பட்டியலில் இருப்பவர்கள் திமுகவிலிருந்து வைகோ வெளியேறறிய போது தமிழகமெங்கும் அவரை ஆதரித்து அவருக்கு உறுதுணையாக இருந்த மிக முக்கியமான செயல்வீரர்கள்.. வெவ்வேறு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். தங்கள் சொந்த வாழ்க்கையும் பாராது வைகோவைச் சுமந்தவர்கள். 1970 -80 ஏன் 98 -2000வரை இவர்களெல்லாம் தொடர்ந்து வைகோ உடன் 30 ஆண்டுகள் இருந்தவர்களும் கூட.. அப்படி இருந்த பலரையும் இங்கு ஆவணப்படுத்த விரும்பினேன். அப்போது வைகோவை சேர்மன் பின் எம்பி என அழைப்பார்கள அப்படி அழைத்தவர்களின் பட்டியல் தான் இது. மதிமுக துவங்கும் போது வைகோ சொன்னது “நாம்தான் இனிமேல் திமுக அண்ணாவின் கொள்கைகளை நாம் தான் இருந்து தொடர்ந்துநிறைவேற்றுவோம்” என்றெல்லாம் சொன்னார். நாமே திமுக என்று சொல்லுவோம் அதன் பொதுக்குழு-செயற்குழுவைக் கூட்டுவோம் என்றெல்லாம் கூட தீவிரமாகச் சொன்னார். அந்த கால கட்டத்தில்தான் திமுக செங்குத்துப் பிளவானது.
இந்தக் கட்டத்தில் எல்லாவற்றையும் இணைத்து எப்படி நடத்துவது எதிர்காலத்தை எப்படி தீர்மானிப்பது என்கிற கலந்தாலோசனை நடைபெற்ற வேளையில் இனி சகவாழ்வு வேண்டாம் தனி வாழ்வே முறையில் நாம் கட்சியை பலப்படுத்தி நடத்துவோம் என்கிற அறிக்கையில் முதலில் கையெழுத்து விட்டவர் வைகோ. அடுத்து மதுரை பொன் முத்துராமலிங்கம் அதற்கடுத்து
கோவை மு கண்ணப்பன் எல் கணேசன் செஞ்சி ராமச்சந்திரன் ஈரோடு மாவட்ட செயலாளர் கணேச மூர்த்தி வேதாரண்யம் மீனாட்சிசுந்தரம் திருச்சி செல்வராஜ் திருநெல்வேலி டி ஏ கே லக்குமணன் கன்னியாகுமரி ரத்தினராஜ் போன்றவர்கள் கையெழுத்திட்டார்கள்.(இவர்களெல்லாம் மாவட்ட செயலாளராக திமுகவில் இருந்தவர்கள்) அதற்குப் பிறகு அடியேன் நானும் திருச்சி மலர்மன்னன் முன்னாள் அமைச்சர்களாக இருந்த சங்கரன்கோவில் தங்கவேலு புதுக்கோட்டை சந்திரசேகரன் ஆர் டி மாரியப்பன் சேலம் கந்தசாமி (எக்ஸ் எம் பி )பாலை குருநாதன் இவர்கள் எல்லாம் சேர்ந்து கையெழுத்திட்டு முடிவுகளை மேற்கொண்டோம். இதுதான் மதிமுகவின் துவக்க காலம். அன்று பதிவு செய்த மினிட் புக் மற்றும் பேரேடு அதன் ரெக்கார்டு அனைத்தையும் நான் வாங்கிச் சென்றேன்.
அதன் பிறகு தொடர்ந்து கீழ்க்கண்ட பட்டியலில் உள்ளவர்கள் மதிமுகவில் 1998 வரை பயணித்தார்கள். அப்புறம்தான் இந்த மல்லை சத்யா போன்றவர்கள் வந்தார்களே ஒழிய……இப்படிப்பட்ட புதியவர்களை வைகோ வெளிச்சமிட்டு தூக்கி வைத்தார்.
திமுகவில் இருந்த போது வைகோவுக்கு கலைஞர் குடும்பம் செய்த இடைஞ்சல்களுக்கு இடையே கீழ்க்கண்டவர்கள்தான் அவருக்கு உதவி செய்து துணையாக இருந்தார்கள். அத்தகைய வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம். வை. கோபால்சாமி என்ற பெயரை திமுக ஆட்சியில் 1998இல், வைகோ என பெயரை ஒரு கால மேல் ஆகும். ஆனால் மிக கமுக்கமாக ஒரே நாளில் நான் வட சென்னை உள்ள அரசு அச்சகத்தில் மாற்றிக்கொடுத்தேன்,
1996 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு குடை சின்னம் வழங்கப்பட்டது. பின் டில்லியில் பல நாட்களாக தங்கி நான் அழைந்து திரிந்து பெற்ற பம்பரம் சின்னத்தில் எனக்கு பெற்ற வட சென்னை நாடாளுமன்றம் தொகுதி மறுக்கப்பட்ட வரலாறும் உள்ளது .
திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் செல்வராஜ் 1996 தேர்தலில் இருந்து இனி மதிமுக தேறாது என்று முடிவுக்கு வந்து மதிமுகவிலிருந்து விலகினார். அதேபோல தஞ்சை மாவட்ட மதிமுக செயலாளர் மீனாட்சிசுந்தரம் 1997 தேர்தலுடன் வைகோ அரசியல் நடத்த தெரியவில்லை என்பதால் மதிமுகவிலிருந்து விலகினார். முன்னாள் அமைச்சரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருமான சங்கரன்கோயில் தங்கவேலு 1998 தேர்தலுக்கு முன்பே இயக்கத்தைக் கை கழுவினார். மதுரை மாவட்ட மதிமுக செயலாளர் பொன் முத்துராமலிங்கத்திற்கு அதிமுக கூட்டணியின் போது தொகுதி வாங்கி கொடுக்காமல் வைகோபால்சாமி சதி செய்ததால் 1998 தேர்தலுக்கு முன்னாடி அவர் இயக்கத்தை விட்டு வெளியேறினார். செங்கை மாவட்ட மதிமுக செயலாளர் மதுராந்தகம் ஆறுமுகம் அதிமுக கூட்டணியின்போது தொகுதி வாங்கித் தருவதில் வைகோபால்சாமி நம்ப வைத்து கழுத்து அறுத்ததால் 1998 தேர்தலுக்கு முன்பே இயக்கத்தை விட்டு வெளியேறினார்.செய்தி தொடர்பாளர் கே எஸ் ராதாகிருஷ்ணன் 2001 பொதுத் தேர்தலில் முதலில் திமுகவுடன் கூட்டணி கண்டுவிட்டு இறுதியில் திமுக கூட்டில் இருந்து வெளியேறியதற்கு காரணமான வைகோ அணுகுமுறை பிடிக்காமல் 2001 தேர்தலுக்கு முன்பே இயக்கத்தை விட்டு வெளியேறினார்.
இவர்களைத் தவிர கே சி பழனிச்சாமி போடி முத்து மனோகரன் மதுரை செ.மேயர் ராமச்சந்திரன் தொழிற்சங்கத் தலைவர் மா வெ நாராயணசாமி கரூர் கே வி ராமசாமி நடிகர் ராதாரவி பெருநாழி போஸ் பிரணவநாதன் மணவை பெந்தலின் மதுரை முனியாண்டி விளாத்திகுளம் பொன்ராஜ் சிவகாசி பூபதி ராஜாராம் நாகர்கோவில் சேர்மன் தர்மராஜ் கள்ளக்குறிச்சி சித்தார்த்தன் கடலூர் கிள்ளிவளவன் ஒட்டன்சத்திரம் மோகன், புதுக்கோட்டை வழக்கறிஞர் உடையப்பன் சிவகங்கை வழக்கறிஞர் சண்முகம் அபிராமி மோகன் அதற்கடுத்தார் போல் புதுக்கோட்டை மதியழகன் நாமக்கல் வழக்குரைஞர் இளங்கோவன் மதுரை பசும்பொன் பாண்டியன் மதுரை திரவிய பாண்டியன் மண்ணடி டி எஸ் சேகரன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருவண்ணாமலை முருகையன் (திருச்சியில் அன்றைய வை கோபால்சாமி பொதுக்குழுவுக்குத் தலைமை தாங்கியவர்) சென்னை டாக்டர் ராஜாஜி சிவகிரி இளஞ்செழியன் கருங்குழி வெற்றிச்செழியன் தூத்துக்குடி மைண்ட் பால் பாண்டியன் சென்னை ஆர்டி சேகர் கரூர் வழக்கறிஞர் மணிராஜ் புதுக்கோட்டை முன்னாள் அமைச்சர் பாலாபழனூர் முன்னாள் அமைச்சர் எஸ் ஆர் ராதா மேலும் முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு வேலூர் விஸ்வநாதன் இனியன் சம்பத் வேளாச்சேரி ஜிபிஎஸ் மணியன் விருத்தாச்சலம் ஏ எஸ் ராஜு இராவணன் விடுதலை தூத்துக்குடி அந்தோணிசாமி செங்கல்பட்டு வழக்கறிஞர் ஆதிகேசவன் நாகை வழக்குரைஞர் சிங்காரவேலன் வால்பாறை வழக்குரைஞர் சிங்காரவேலன் வாலாஜா உபேசன் அரசூர் பாலு தர்மபுரி சின்னச்சாமி வேடசந்தூர் முத்துச்சாமி ஏவி கிருஷ்ணமூர்த்தி சென்னை சேகர் கோவை ராமு தமிழில் எண் தஞ்சை வீரக்கனல் மாரிமுத்து ஆவே பாலசுப்பிரமணியம் தூத்துக்குடி ராஜா மண்ணை அய்யா தமிழரசன் சிவகங்கை கமலம் செல்லதுரை உவரிராயர் தொண்டர் படை முத்துப்பாண்டியன் ரோகினி நாராயணன் கடலூர் பாஸ்கரன் வடவள்ளி துரைச்சாமி வடவள்ளி சண்முகசுந்தரம் கோவை பத்மாலயா சீனிவாசன் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் மயிலை ரவி அம்பை மீனா சர்க்காரியாஸ் நடிகை சிஆர் சரஸ்வதி ஆலங்குளம் முருகையா மைதீன் கான் (அவர் இன்றைய திமுக எம்எல்ஏவாக இருக்கிறார்) ஆலந்தூர் செல்வராஜ் சென்னை காத்தா பிள்ளை கோ அய்யாவு தாரை மணியன் திருமதி கண்மணி தமிழரசன் டி நகர் தமிழரசன் மெரினா செல்வம் வைகை சேகர் சோழவந்தன் அப்பாசாமி அறந்தாங்கி சேர்மன் ஜனார்த்தனன் கீரப்பாளையம் கோ வீரமணி சென்னை திராவிட நாடு முனுசாமி மாணவரணியைச் சேர்ந்த தமிழ்மாறன் தஞ்சை கூத்தரசன் இவர்களெல்லாம் போக வைகோவுக்கு பெரும் உதவியாக இருந்த ராஜபாளையம் கலைச்செல்வன் ஒத்தக்கடை காளிராஜ் கோவில்பட்டி எம் டி ஏ காளியப்பன், ஊட்டி ஹச் நடராஜ் தீப்பொறி திருமலை கடையநல்லூர் டாக்டர் சஞ்சீவி அந்தியூர் ராதா ருக்மணி தஞ்சை நகர செயலாளர் தர்மராஜ் மயிலாடுதுறை செங்குட்டுவன் தர்மபுரி வழக்குரைஞர் கோவிந்தராஜன் மத்தூர் குணசேகரன் விழுப்புரம் பன்னீர்செல்வம் விழுப்புரம் பாண்டியன் கரூர் சேர்மன் நந்தினி தமிழரசன் புதுக்கோட்டை km ஷெரிப் குளச்சல் ஜே ஜேசையா காட்பாடி மஜீத் படப்பை புலவர் ஜானகிராமன் கோவை உமாபதி பெரம்பூர் கந்தன் விக்கிரமசிங்கபுரம் ராஜம் ஜான் கீரை எம் எஸ் விஸ்வநாதன் கள்ளக்குறிச்சி வழக்குரைஞர் வேங்கடபதி பம்மல் நல்லதம்பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
புஞ்சை புளியம்பட்டி பிஏ சாமிநாதன் சிதம்பரம் டாக்டர் துரை கிருஷ்ணமூர்த்தி சிதம்பரம் துரை சரவணன் (இன்றைய திமுக எம்எல்ஏவாக இருக்கிறார்) விளாச்சேரி பழனி கரூர் கணேசன் முன்னாள் சபாநாயகர் முழுமதி வேலூர் சேர்மன் தேவராஜன் காரைக்குடி பல கருப்பையா சிதம்பரம் ஜெயவேல் ராஜபாளையம் மு குருசாமி, பாண்டிச்சேரி பேரவைத் தலைவர் சிவக்குமார் பாண்டியன் லூயி கண்ணையா பாண்டி ராமநாதன் கழிஞ்சூர் மு கோதண்டம் கத்திவாக்கம் வீரச்சந்திரன் தரங்கம்பாடி சம்சுதீன் கடலூர் மு. சீனிவாசன் பீடம் பள்ளி செல்வராஜ் குத்தாலம் செந்தாமரை நடிகர் சத்யராஜ் நடிகர் மணிவண்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் உறுப்பினர் அண்ணா நம்பி திண்டிவனம் காமு இஸ்மாயில் கவிஞர் நா காமராசன் சைதே மு. காளியப்பன், சேப்பாக்கம் பா தணிகாசலம் செங்குன்றம் இரா ஏழுமலை லத்தூர் கே ஆர் வீரராகவன் காட்டாங்குளத்தூர் தண்டபாணி செங்கல்பட்டு ராதாகிருஷ்ணன் குறிஞ்சிப்பாடி சூரியமூர்த்தி விருத்தாசலம் முத்து சீனிவாசன் திண்டுக்கல் முத்து காமாட்சி ஆண்டிபட்டி மணிமாறன் தேவகோட்டை கே கே பரமசிவம் குற்றாலம் ராஜாராம் அம்பை ஆறுமுகம் கடையம் சீனிப்பாண்டியன் காரைக்குடி எம் என் எல் வைரவன் காரைக்குடி பா கணேசன், பாளையங்கோட்டை அருண் என்ற ராஜகோபால் சிங்கம்பட்டி ஆறுமுகம் தூத்துக்குடி ஸ்டான்லி வேதமாணிக்கம் விளாத்திகுளம் பாபு ரெட்டியார் குமரி ஜார்ஜ் வேலூர் பூபாலன் கர்நாடக அமைப்பாளர் ஜெ ஜலீல் சித்தர் எஸ் எஸ் பக்தவச்சலம் திருவல்லிக்கேணி தென்பாண்டியன் நடிகர் எஸ் எஸ் சந்திரன் ஆலங்குளம் சந்திரசேகர் சிதம்பரம் ராஜேந்திரன் வள்ளியூர் ஒன்றிய செயலாளர் சுடலையாண்டி. இது கோர் திமுகவில் இருந்து வைகோவுடன வந்து 2001 மார்ச் வரை வெளியேறவர்களின் கணக்கு . இன்னும் பலர் இந்த பட்டிலில் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள் அவர்களுக்கும் சேர்த்து தான் இந்த பதிவு. பழைய நினைவுகள்

No comments:
Post a Comment