இது தானே தேடிக் கொண்டதுதான். இதற்குக் காரணம் யாரும் இல்லை. எழுபது எண்பதுகளில் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தோம். நானும் பொன் முத்துராமலிங்கம் போன்றோர் எந்த ஒன்றையும் எதிர்பார்க்காமல் உங்களுடைய லட்சியத்திற்கு உடனிருந்து பாடுபட்டோம். முடிந்த அளவு இறுதிவரைத் துணையாக நின்றோம். ஆனால் நீங்கள் நன்றியற்று, எங்களை நடத்தியது உங்கள் மனசாட்சிக்கு தெரியும் ,கண்ணப்பனுக்கு எல் கணேசனுக்கு செஞ்சி ராமச்சந்திரனுக்கும் எங்களைக் கூட ஓரம் கட்டி விட்டு அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தீர்கள். உங்கள் மகன் 1998 லேயே இணைந்து உங்களுக்கு ஆலோசனை சொல்லத் துவங்கி விட்டார். இதில் யாரைக் குறை சொல்ல! 1998 பினபு மல்லை சத்யாவை (சத்தியசீலனை)நீங்கள் உருவாக்கினீர்கள். அவருக்கு அதிகம் வெளிச்சம் கொடுத்தீர்கள் .ஆனால் நாங்கள் எல்லாம் உங்களால் உருவானவர்கள் அல்ல. அதையெல்லாம் மீறி உங்களுக்கு ஒரு மாற்றுகளுக்கு ஆதரவாகஇருந்தோம். என்னுடைய அரசியல் தளம் 1972முதல் ஆரம்பித்துவிட்டது.
இடையில் மல்லை சத்யாவை நீங்கள் தான் கொண்டு வந்தீர்கள் அவருக்கு பல வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தீர்கள். இப்போது அவரை நீக்குகிறீர்கள். உங்கள் மகனையும் நீங்கள் தான் கொண்டு வந்தீர்கள் வாய்ப்பும் கொடுக்கிறீர்கள் . 1998 இல் என்னைப் போன்றவர்களை மனதில் கொள்ளாமல் குறிப்பாகச் சொன்னால் எனக்கான வாய்ப்புகளை நீங்கள் மறுத்தபோது அதை எல்லாம் பொருட்படுத்தாமல் 2001 வரை உங்களுடன் இருந்தேன். அதன் பிறகு அந்த உதாசீனத்தை பொறுத்துக் கொண்டு என்னால் இருக்க முடியவில்லை. ஒருவரின் தகுதியை உற்ற நட்பே மறுக்கும்போது வேறு என்னதான் செய்வது. இன்று உங்களுக்கு நடப்பதெல்லாம் நீங்களே தேடிக் கொண்டதுதான். இதில் யாரைக் குறை சொல்ல முடியும். நாங்கள் 1980 முதல் 1996 வரை பார்த்த வைகோ இன்றைக்கு இருக்கிறாரா?
எழுபது எண்பதில் பார்த்த வைகோ 1998 இல் நிறம் மாறிவிட்டாரே. இப்போது வந்து யாரையும் குறை கூறிக் கொண்டிருப்பதில் என்ன பயன்.? நீங்கள் தேடிக் கொண்டதை நீங்கள் விரும்பியதை இப்போது அனுபவிக்கிறீர்கள் இதில் வேறு என்ன சொல்ல இருக்கிறது.! திமுகவிலிருந்து வைகோவை நம்பி இவருக்காக வெளியே வந்து இவரால் பாதிக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போனவர்களுடைய பட்டியல் நாளை வெளிவரும்.
No comments:
Post a Comment