Thursday, July 17, 2025
தமிழ்நாட்டில் 1980 90களில் எல்லா அரசியல்வாதிகளும் அறிந்தது தான்.
——————————————
தமிழ்நாட்டில் 1980 90களில் எல்லா அரசியல்வாதிகளும் அறிந்தது தான். நான் திமுகவில் இல்லாமல் இருந்த போதும் அப்போது காங்கிரஸில் இருந்த நிலையில் கூட வை கோவை ஆதரித்தவன் தான். அவர் ராஜ்யசபா எம்பி ஆகி டெல்லி சென்றபோது . அவருக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் ஏ எஸ் பொன்னம்மாள் பாரமலை போன்றவர்களிடம் சக்தி மிக்க MLA’s single preference voteகளை ஆதரவு பெற்றுதான் அவர் ராஜ்ய சபா மூலம் நாடாளுமன்றம் சென்றார் என்பதும் உண்மை. நான் திமுகவில் சேர்வேன் வைகோவுடன் பணியாற்றுவேன் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. அதேபோல் பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு வந்து என்னுடன் தங்கி இருந்தபோது வைகோவுக்கு அவரை நான் தான் அறிமுகப்படுத்தினேன் என்பதை யாரும் மறுக்க இயலாது. உண்மையைச் சொன்னால் 70 80களில் வைகோ என்னிடம் நெருக்கமாகவும் பாசமாகவும் இருந்தார்.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1989இல் நான் நிற்பதற்கு கலைஞர் ஒரு பக்கம் ஆதரவு தெரிவித்தாலும் வைகோ அதில் முக்கிய பங்காற்றினார் என்பதற்காக அவருக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். இன்றைக்கும் அவர் எனக்குத் தந்த மதிப்பை நான் மறுக்கவில்லை. அதெல்லாம் எப்படி நிகழ்ந்தது. அக்காலங்களில் வைகோ விற்கு எந்த ஒரு பிரச்சினை இருந்தாலும் கிட்டத்தட்ட நானும் பொன் முத்துராமலிங்கம் இருவரும் தான் அவருக்கு அதை தீர்த்து கொடுப்பதில் இணக்கமாக இருந்தோம். அதை அவரும் மறந்திருக்க மாட்டார்.
கோசி மணி தஞ்சாவூரில் மாவட்டச் செயலாளர் ஆன பின் அங்கு கழகத்திற்காக ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருந்த எல் கணேசன் ஓரம் கட்டப்பட்டு திமுகவில் வெறுமனே அமைதியானார் . அதேபோல் செஞ்சி ராம சந்திரன் பொன்முடியால் ஓரம் கட்டப்பட்டு திமுகவில் அமைதியாகிவிட்டார். கண்ணப்பனுக்கும் சிபி தண்டபாணிக்கும் பிரச்சனை. டி ஆர் பாலு தேர்தல் கண்காணிப்பாளராக கோவை செல்லும்போது கண்ணப்பனுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டது. அந்த வகையில் அவரும் நாளடைவில் ஒதுங்கி இருந்தார். இதற்கிடையில் மதுரை பொன் முத்துராமலிங்கமும் நானும் தான் வைகோ அவர்களுக்கான அடிப்படைப் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம். குறிப்பாக பத்திரிக்கைத் துறையில் நாளிதழ் வார இதழ்கள் போன்றவற்றிற்கான தகவல்களை அதாவது வைகோவுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு எழுத்துப்பூர்வமான பணியில் நான் தான் அப்போது இருந்தேன். அந்த சமயங்களில் எல்லாம் கலைஞர் என் மீது கடுமையான கோபத்தில் இருந்தார். என்னைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றெல்லாம் கலைஞர் சொல்லிக் கொண்டிருந்தார். அதேபோல் பொன் முத்துராமலிங்கமும் வைகோவை அழைத்து தனியாக கூட்டங்கள் நடத்தி திமுகவில் அதிகம் கலைஞர் உட்பட எதிரிகளை சம்பாதித்ததும் உண்டு. அப்போது திமுக பொதுக்குழுவில் மெரினா செல்வத்தை சிலரிள உத்தரவின் பேரில் குண்டர்களை வைத்து கடுமையாகத் தாக்கிய போதெல்லாம் அவரை காப்பாற்றிக் கொண்டு வந்த வேலையையும் வைகோவிற்காக நான் செய்தேன். பின் வைகோ நீக்கம்.
அதற்குப் பிறகு ஆற்றலார் வைகோ பக்கம் திமுகவின இளைஞர்கள் கூடினார்கள். அன்றைய வைகோவின் நேர்மை, இலட்சியம், வேகம் யாரிடமும் இல்லை. ஒரு ஆபூருவ மனிதராக அன்று இருந்தார்.அதுவேகம் எடுத்தது தமிழ்நாட்டில் ஒரு மாற்று அரசியல் இயக்கம் உருவாகி வந்ததை அது கட்டியம் கூறியது. வைகோ துடிப்பானவர் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்காக நாடாளுமன்றத்தில் கடுமையாக விவாதம் செய்து அதற்கான நியாயங்களை கோரிப் போராடுகிறார் என்கிற அளவில் அவர் தமிழகத்தில் 1990 -96 வரை புகழில் உச்சம் பெற்றது. அன்றளவில் அவருக்கான மக்கள் செல்வாக்கு அபரிமிதமாகக் கூடிக் கொண்டு வந்தது. அதே நேரத்தில் கலைஞர் தனது மகன் ஸ்டாலினை தனது வாரிசாக அரசியலில் உருவாக்குகிறார் என்கிற நிலை மறைமுகமாக மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதன் அடிப்படையிலேயே வைகோவிற்கு மக்கள் மத்தியில் ஒரு சனநாயகப்பூர்வமான ஆதரவு இருந்தது. அதன் அடிப்படையில் வைகோ ஒரு மாபெரும் தலைவராக தமிழ்நாட்டில் உருவாவார் என்கிற எதிர்பார்ப்புக் கூடிக் கொண்டிருந்தது. அந்த அடிப்படையை நம்பிக்கையாகக் கொண்டு 96 வரையில் அவருக்கு பின்னால் நின்று நாங்கள் கடுமையாக அவருக்குப் பாடுபட்டோம். 96 க்குப் பிறகு ஏனோ என் சொல் அவரிடம் எடுபடவில்லை. அதை விட்டு 1998 நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு தரவிருந்த வட சென்னை நாடாளுமன்ற தொகுதியை (அதிமுகவில் ஜெயக்குமாருக்கு ஒதுக்கி இருந்து அதை மாற்றி ஜெயலலிதா எனக்கும் மட்டுமே வழங்கியது) ஆனால் வைகோ தராமல் ,கவனமாக இருந்தார். காரணம் கேட்கும் போது இரண்டு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவருக்கு ஒரு கட்சியில் இடம் ஒதுக்குவது நியாயமாகாது என்று சொன்னார். அதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் என்னைப் போட்டியிட விடாதவாறு செய்தார். அதாவது அவர் ஒரு நாயுடு நான் ஒரு நாயுடு. வேடிக்கையை பாருங்கள்!1/3
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment