Thursday, July 17, 2025

காது கொடுத்து கேட்கத்தான் கேரளாவில் யாரும் இல்லை.




 காது கொடுத்து கேட்கத்தான் கேரளாவில் யாரும் இல்லை.

இந்த நிலையில் கால்வாய் அருகே ஒரு தங்குமிடத்தை அமைத்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகம்,அங்கு செல்வதற்கு கேரளாவின் வழியே பயண வழி இல்லாததால்,புலிகள் காப்பகத்தின் தலைமையகமான தேக்கடியில் இருந்து கம்பம் தேனி ஆண்டிபட்டி உசிலம்பட்டி பேரையூர் திருவல்லிபுத்தூர் ராஜபாளையம் சிவகிரி வாசுதேவநல்லூர் வழியாக வாகனங்களில் தன்னுடைய வனத்துறை பணியாளர்களை 10 நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வரும் பெரியார் புலிகள் காப்பகம், அவர்களை தலையணை முகாமில் தங்க வைத்த பிறகுதான், செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழக வனப் பகுதி வழியாக செல்ல அனுமதிக்கிறது. ஆனால் அந்த செண்பகவல்லி கால்வாய் இருக்கும் வனப்பகுதிக்குள், தமிழக வனத்துறையினர் செல்வதற்கு தடை இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். ஆயுதங்களை தூக்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள தேனி மதுரை விருதுநகர் மாவட்டங்களின் வழியாக தென்காசி மாவட்டத்திற்குள் புகுந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு ஆயுதங்களை தாராளமாக கொண்டு செல்கிறார்கள் பெரியார் புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள். கேட்பதற்குத்தான் நாதிகளற்றுக் கிடக்கிறோம். இதுகுறித்து தமிழக அரசியல்வாதிகள் எந்த நிலையிலும் வாயே திறக்கவில்லை என்பது கசப்பான உண்மை.விதிவிலக்குகளும் இருக்கிறது. அரிதினும் அரிதானவராக வழக்கறிஞர் அண்ணன் கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் இதற்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த செண்பகவல்லி கால்வாய் பிரச்சனை மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுக்குமானால், அரசியல்வாதிகளால் ஊருக்குள் நடமாட முடியாது என்பதை இந்த விவசாய சமூகம் செய்து காட்ட வேண்டும். இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி சிவகிரி அருகே இருக்கும் தென்மலை கிராமத்தில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மாநாடு போல செண்பகவல்லி கால்வாய் மீட்பு போராட்டம் நடக்கவிருககிறது. முன்னத்தி ஏர்களாக அந்த ஒருங்கிணைப்புக்கு பணியை முன்னின்று செய்து வரும் அத்தனை பேருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சொல்லி... நீண்ட காலமாக அந்தப் பகுதியில் செண்பகவல்லி கால்வாய்க்காக போராடிய இடையன்குளம் அண்ணன் ஜெயக்குமார் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் அண்ணன் கருணாநிதி போன்றவர்களையும் அழைத்திருக்கலாமா என்று முடிக்கிறேன். நன்றி ச.பென்னிகுயிக் பாலசிங்கம் ஒருங்கிணைப்பாளர் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம். 2/2

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்