Thursday, July 17, 2025

#வைகோவை நான்தான் ஏதோ முட்டுச்சந்தில் நிறுத்திவிட்டது போலப் பேசுகிறார்கள்.

 #வைகோவை நான்தான் ஏதோ முட்டுச்சந்தில் நிறுத்திவிட்டது போலப் பேசுகிறார்கள். இப்படியான ஒரு செய்தியைப் பத்திரிகையாளர் அருள் செழியன் என்கிற தாமஸ் என்பவர் என் பெயரைக் குறிப்பிட்டு நான் தான் வைகோவை முட்டுச் சந்தில் நிறுத்தினேன் என்று எழுதியுள்ளார்.

கேட்க வேடிக்கையாக இருக்கிறது. நான் வைகோவுடன் இருக்கும் போது தீர்க்கமாகவும் திடமாகவும் கட்சிக்காக உழைத்து வேலை செய்தும் அவருடைய மனப்போக்கின் காரணமாக 2001 மார்ச் அவருடனான எனது அரசியல் முடிந்து விட்டது. பிறகும் கூட அவருடன் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து இருந்தேன். இப்படி 2001 வரை அவருடன் இருந்தாலும் அவர் 1998ல் இருந்து என்னை மெதுவாகப் புறக்கணிக்க ஆரம்பித்தார். அதை மௌனமாகப் புரிந்து கொண்டும் அதற்குப் பிறகும் 2001 மார்ச் வரை பொறுமையாக மதிமுகவில் இருந்தேன். அரசியல் பணி என்பது ஒரு கூட்டுத் தொடர் முயற்சி! அந்த ஈடுபாடு தான் என்னை இன்றளவும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. அவர்தான் புறக்கணித்தார். இதில் போய் அவரை எங்கே போய் நான் முட்டுச்சந்தில் நிறுத்தி வைத்தேன்? இதெல்லாம் புரியாமல் பத்திரிக்கையாளர் அருள்செழியன் என்ற தாமஸ்இப்படி எழுதி இருக்கிறார்” அவர் ஏதோ என் மீது மனக்கசப்பில் இருக்கிறார் என்று தெரிகிறது.! இப்படித் தவறான நோக்கங்களுக்காகத் திரித்தும் எந்த ஆதாரமற்றும் எழுதி இருக்கும் அந்தப் பத்திரிகையாளர் அருள்செழியன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறேன்..
மதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள்! வைகோ1996 முதல் சொல்லுகிறார். அதற்கு காரணம் செய்ய வேண்டிய செய்யாமல், கூடாதை செய்வார். His own commissions and omissions … what to do… அவருக்கு உதவிய நல்லவர்களை தள்ளி விட்டார்.
"ஆலமரமும் அதன் விழுதுகளும்" காலங்களை கடந்து, கதைகள் சொல்ல அமைதியில் காத்திருக்கின்றன..... போல பல
உண்மைகள் வெளிப்படுத்தும். மன சாட்சியாக பலர் இங்கு உண்டு.
நான் சொல்லி வரும் #தகுதியைதடை என்ற நிலைப்பாட்டில், நான் சொல்வது….
தோல்வியடைந்தால் திட்டத்தை மாற்றுங்கள். ஆனா இலக்கை ஒருபோதும் மாற்றக்கூடாது என்ற அனுகுமுறையை கொண்டவன்.
இங்கு, பெரும்பாலும் கெட்டிக்காரத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கும் உண்மைக்கும் சம்பந்தம் இருப்பதில்லை
திமுக மற்றும் மதிமுக என்ற எனது பணியின் மூலம் நான் பெற்றது எதுவும் இல்லை. இழந்தது அதிகம்.
அடியேனின் இன்றைய நிலை….
‘’நான் சிரிக்கிறேன் என்பதற்காக
எனக்கு சோகமே இல்லை என்று நினைக்கிறாயா?
இது அழ முடியாதவனின் சிரிப்பு
என் அதரம் முழுவதும்
அக்னி பிழம்பு
செயற்கையாய் சிரிப்பது சிலுவையை சுமப்பதை காட்டிலும் கொடுமையானதாகும்
ஒரு துளிக்கே மரணம் என்றால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கோப்பை விஷம்.’’
அவர்கள் கண்களில் தெரிந்த வெறுப்பை நான் முன்பே கவனித்திருந்தேன்.
எனினும் அன்பினால்
அதன் தீயை தணித்து விடலாம் என்று நம்பி இருந்தேன்.
ஆனால்
என் அன்பு சக்தி அற்றது.
மிகவும் மெல்லியது.
அவர்களது
வெறுப்பு கூர்மையானது.
அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்
என் அன்பின் குரல்வளை
அவர்கள் முன்பு நீட்டப்படும் போது.
தக்கலை நண்பர் @பீர்முகமது் பதிவு:
திமுகவில்,கலைஞரை விட அதிக அளவில் கைத்தட்டல், ஆரவாரம் இருந்தது 1990 தொடக்க முதல்காலத்தில் கலைஞரின் வாரிசு கனவு, வைகோவின் விடுதலைப்புலிகள் ஆதரவு, நிலைபாடு வைகோவிற்கான தொண்டர்கள் ஆதரவு ஆகியவை கலைஞரிடம் ஏற்படுத்திய அதிர்வாக்கம் 93 அகடோபரில் திட்டமிட்டு பெறப்பட்ட உளவுத்துறை கடிதம் மூலம் எதிரொலித்தது. பத்திரிகையாளர்களிடம் கலைஞர் வெளியிட்ட அக்கடிதம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படி நடக்கும் என்று எதிர்பாராத வைகோ கலைஞர் என் மீது கொலை பழி சுமத்துகிறார் என்றார். கொதித்தார். இதன் விளைவாக 5 இளைஞர்கள் தீக்குளித்து தியாகம் செய்தனர் .
அவருடன் 9 மாவட்ட செயலாளர்கள் சென்றார்கள். ஒரு கட்டத்தில் கலைஞரே அரசியலை விட்டு விலகுகிறேன் என்றார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. இன்று அவரே அந்த வரலாற்றை கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்.தன் மகனுக்காக மொத்த கட்சியையே காவு கொடுக்க தயாராகி விட்டார். வைகோவின் அரசியல் வாழ்க்கையில் மாபெரும் சறுக்கல் இது.
வைகோவால் காட்சி பிழைகள் ஏராளமாக ஏற்பட்டன.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்