Thursday, July 24, 2025

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

 அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

குறிப்பாக வையாபுரி பிள்ளை குறிப்பிட்டபடி தமிழர் நாகரீகம் சார்ந்த தொன்மை ஆய்வுகளில் #ஆதிச்சநல்லூர் தான் முதன்மையானது என்று அவர்நிரூபித்திருக்கிறார். இந்த ஆய்வு பிரிட்டிஷ் காலத்திலே தொடங்கப்பட்டது. அதை வலியுறுத்த டி ஆர் பாலு அவர்களுக்கும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழிக்கும் ஏன் வாய் வர மறுக்கிறது இத்தனைக்கும் ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தது.அதை விட்டுவிட்டு இருவரும் . கீழடி கீழடி என்றே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் யாராவது எழுதிக் கொடுத்து தான் பேசுகிறார்கள். எல்லா அகழ்வாராய்ச்சியும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சத்தியமூர்த்தி அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்று திமுக இதுவரை வலியுறுத்தித் தீவிரமாக ஒன்றும் செயல்படவில்லையே. இப்படியான திட்டங்களை எல்லாம் திமுகவுக்கு வகுத்து தருவது அதிகாரிகளா அல்லது இடதுசாரி இலக்கியம் பேசும் தமு எகச உறுப்பினர்களா. இவர்கள்தான் திமுகவின் அறிவு ஜீவி ஆய்வாளர்களா. இவர்கள்தான் இத்தகைய திட்டங்களை முன்னெடுத்து தங்கள் மனம் போன போக்கில் திமுகவை வழி நடத்துகிறார்கள் போல் இருக்கிறது.. ஏன் திமுகவில் இந்த இலக்கிய வட்டம் இல்லையா கலாப்ரியா இருக்கிறார் காமராஜ,மணா என்று பல இருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர்கள் இருக்கும்போது அவர்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு இந்த தமுஎகச சங்கங்கள் தான் அவர்களைப் புரமோட் பண்ணிக்கொள்ள இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எக்காலத்திலும் திமுகவிற்கு நன்மை பயக்காது. இத்தகைய அகழாய்வுத் திட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் ஒன்றிணைப்பில் செயல்பட வேண்டும். ஆதிச்சநல்லூரை கீழடியில் இணைக்கக்கூடிய புதிய திட்டங்களைத் தான் கோரி பெற வேண்டுமே ஒழிய கீழடி கீழடி மட்மே என்று பேசிமக்களிடம்வெறும் உணர்ச்சிகளை எழுப்பிக் கொண்டிருப்பது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல.

No comments:

Post a Comment

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

  முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...