youtube இல் இருந்து பலரும் என்னிடம் தொடர்ந்து பேட்டி எடுக்க வருகிறார்கள். அந்த நண்பர்கள் ஏதோ ஒரு வகையில் இங்குள்ள தமிழகஅமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்
அவர்களுக்கான பேச்சுக் குறிப்புகளையும் எழுத்துக் குறிப்புகளையும் தாங்களே எழுதித் தருவதாகச் சொன்னார்கள். அப்படியா! ஒரு பேச்சுக் குறிப்பிற்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்று கேட்டேன். அவர்கள் சொன்ன தொகை பிரமிப்பாக இருந்தது. பெருமளவுப் பணம் தரப்படுகிறது என்று சொன்னார்கள். இம்மாதிரியான பேச்சுக் குறிப்புகள் மற்றும் முக்கியமான பாயிண்டுகளை எழுதி வாங்கிப் பேசினால் தான் தங்களது அரசியல் வாழ்க்கையில் பயன்பெற முடியும் அப்போழுதுதான் எங்களுக்கு உரிய கௌரவமும் மரியாதையும் கிடைக்கும் என்று பணம் கொடுப்பவர்கள் சொல்கிறார்களாம்.. உண்மையான அரசியல் பூர்வமான சொந்தச் சரக்கை வைத்து பொது மேடைகளிலோ நாடாளுமன்றங்களிலோ சட்டசபையிலோ பேசாமல் அடுத்தவனிடம் சரக்கை வாங்கிப் பேசுகிற அவர்களுக்கு என்னையா அரசியல் ஞானம் இருக்கப்போகிறது என்று நான் கேட்டேன். அதற்குப் பதிலாக அவர்கள் தலையில் அடித்துக் கொண்டு “என்ன சார்! எதை எழுதிக் கொடுத்தாலும் இரண்டு மூன்று முறை எடிட் பண்ண வேண்டி இருக்கிறது. நாம் ஒன்றைச் சொல்லி எழுதிக் கொடுத்தால் அவர்கள் வேறு ஒன்றைப் பேசி விட்டு வருகிறார்கள். கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல சொல்லிச் சொல்லி கொடுத்தாலும் கூட அதைப் பேசத் தெரியாமல் தவறாக பேசிவிட்டு வருகிறார்கள் என்று மீண்டும் தலையில் அடித்துக் கொண்டு சொன்னார்கள். இது தாழ்ந்த தமிழகமா? நிமிர்ந்த தமிழகமா?
No comments:
Post a Comment