Thursday, July 17, 2025

தஞ்சாவூர் இலக்கிய ஒளிவட்டமும் மூத்திர நாற்றமும் நாங்களும்.





தஞ்சாவூர் இலக்கிய ஒளிவட்டமும்
மூத்திர நாற்றமும் நாங்களும்.
சில அலுக்காத நினைவுகளும்
--
~
இலக்கிய உரையாடல் உச்சகட்டத்தில்
இருந்தது.நேரம் போனதே தெரிய
வில்லை.தஞ்சை ப்ரகாஷ் நான், சுகன்
க.நாசு வெங்கட் சாமிநாதன், தேனுகா,
பிரபஞ்சன் சி.எம்.முத்து,கோபாலி சுந்தர்ஜி எனக் கும்பலாய்குவியலாய்ச் பேச்சு நீளநீளமான விவாதங்கள் சண்டைகள் ...சுவாரசியம்.தஞ்சைபெரிய
கோவில் பக்கத்தில் ராஜராஜசோழன்
சிலையருகே பிளாட்பாரத்தில். பொறுத்
துக் கொள்ள முடியாத அளவுக்குமூத்திர
வாடை-பக்கத்து அகழியிலிருந்து குபீர்ச்
சாக்கடை துர்நாற்றம்.இது பொருட்டல்ல.
குந்தர் க்ராஸ் ஜ்யார்ஜ் ஆர்வல்,மௌனி
கீட்ஸ் மணிக் கொடி, எழுத்து, தேனீஇதழ்,
கு.ப.ரா என நீ...நீ...ண்..டு ..க.நா.சு வுக்குக்
கவிதையே எழுத வராது இதில் தன்
சுய சரிதை வேறு.சகிக்காது என்பேன்
என் புலமை காட்ட. ப்ரகாஷ் நாயக்கர்
காலத்து வேங்கடமஹியின் ஸ்ருதி
இசை விவரங்களை விவரிக்க ,ஒரு
கலவையான சீரான இலக்கிய விமரி
சனங்கள்..இரவு பதினோருமணிக்கு.
திடீரென ஒரு போலிஸ் வாகனம் வந்து
நிற்க ஏழெட்டு முரட்டு காக்கி ஆசாமி
கள் தப தபவென குதித்தனர்.யார்யா
நீங்கள்ளாம். ராத்திரி பதினோருமணிக்கு
என்ன பண்றீங்க என்றஅதட்டல் வேறு.
"என்ன ப்ரகாஷ் ஜாக் லண்டனோட
'பனிஷ்மெண்ட்' வாசிச்சீங்களோ என
விபரம் புரியாமல்.க.நா.சு ஆரம்பிக்க வெ.சா சிரிக்க ஒரு ஞானம் சார்ந்த
மௌனம்.
யாருய்யா நீங்க.. என்னசெய்றீங்க.?
நாங்க கவிஞர்கள்!
அப்படீன்னா ?
இவர் க.நா.சு..!
க.நா.சு வோ கு நா.சுவோ இங்க
என்ன செய்யறீங்க 11மணிக்கு?
பிரபஞ்சன் கவலையேதுமின்றி திரு
ம்பியவாறு சிகெரெட் பற்ற வைக்க
வெ.சா "என்ன பிராண்டு"ய்யா எனக்
கேட்க...
என்ன கிண்டலா ராத்திரி பதினோரு மணிக்கு இங்க என்னய்யா புடுங்கற
வேலை.முகத்தப் பாத்தாலே சரியா
இல்லேயே..திருட்டு முழிங்க...
சார் கவிதை இலக்கியம்னு இங்குதான் உட்கார்ந்து பேசறது..
விசு ஜாக்லண்டண் வாசிச்சிருக்கியா?
இது க.நா.சு
என்ன தினமுமா?அதென்னய்யா கை
யிலே காராபூந்தியா இந்த நேரத்தில
திங்கறது....விவஸ்தையே இல்லாம
எல்லாரையும் புக் பண்ணிப் போறேன்..
ப்ரகாஷ் வெத்திலை இருக்கோடா
வாய் நமநமங்கறது. கும்கோணத்
திலே அந்த "வக்காளவோளி" காஞ்ச
வெத்தலையைக் குடுத்துட்டான்..எனக்
கரிச்சான் குஞ்சு.
யோவ் என்னய்யா? கேக்குறோம் என்ன
உளறிக்கிட்டிருக்கீங்க..
ப்ரகாஷ் இவாள்ளாம் யாரு வளத்தியா
இருக்கற இவன் நம்ம ஜானகிராமன்
கதையிலே வர சிவசு மாதிரின்னா
இருக்கான்.என்ற கரிச்சான்குஞ்சுவை
ஒரு உஷ்ண முறைப்பு..
அதற்குள் லத்தியை ரெண்டு தட்டு
தரையில் தட்டிவிட்டு அரை மணி
நேரத்திலே திரும்பிவருவோம் ஒருத்த
னும் இருக்கக்கூடாது. அள்ளிப் போட்
டுக்கிட்டுப் போயிடுவோம்...கவிதை
யாவது கருமாந்திரமாவது..உள்ளே
போகவேண்டியதுதான்"
நிலைமை சீரியஸ்தான்.கௌரவப்
பிரச்சனை வேறு.புதியவர்கள் விவரம்
புரியாமல் தங்கள் கவிதைகளை மடி
த்து பத்திரப்படுத்திவிட்டனர்.
எங்களுக்குத் தெரிந்த நண்பர் பக்க
த்தில்தான் இருந்தார்.மாவட்ட ஆட்சி
யர் அந்தஸ்தில்.தனவேல் என்று
நினைப்பு. கவிஞரும்கூட.
"ஆமா இரவு பதினோருமணிக்கு என்ன இலக்கியம் என்று கொஞ்சம் கடிந்து
கொண்டே வந்து சேரவும் போலிஸ்
வண்டி திரும்பவும் ஆக்ரோஷத்தோடு சீறிக் கொண்டு நிற்கவும் மிகச்
சரியாக இருந்தது.தனவேலைப் பார்
த்து போலிஸ் கோஷ்டி. சல்யூட் அடித்
த்தது. இவர்கள் இலக்கியக்காரர்கள்
கௌரவமாக நடத்த வேண்டும் என்று
கடிந்து கொண்டார்.அப்புறம் வேறு
இடம் பார்த்துத் தறேன்.இங்கெல்லாம்
வேண்டாம் என்றவாறே ஆளுக்கொரு
டீ வாங்கிக் கொடுக்க எல்லாம் சுபம்.
தஞ்சாவூர் ஓளிவட்டம் அப்புறம்" தளி"
என்ற பெயர் பூண்டதெல்லாம் சுவாரசியம்.
பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்
களோடு மூத்திர நாற்றம் முடை நாற்
றம் சூழ லௌகிக ப்ரக்ஞையின்றி
நள்ளிரவில்இலக்கியவிவகாரங்களை
அலசியது நாங்களாகத்தான்.இருக்க
வேண்டும். நாங்க தஞ்சாவூர் ஒளி
வட்ட ஆசாமிங்க எப்பவுமே.
இப்போது விவரித்தால் நம்பத்
தான் முடியுமோ?
மீள்*


 

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்