Thursday, July 17, 2025

எவரும் ஒன்றும் பிரபாகரனும் இல்லை


 எவரும் ஒன்றும் பிரபாகரனும் இல்லை

எவரும் மாத்தையாவும் இல்லை
••
கிட்டுவின் காதலியை விரும்பியது யார்?
உண்மையை உடைத்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இந்த மல்லை சத்யா என்பவர் 1996 ல் மதுராந்தகம் ஆறுமுகத்தோடு அவருக்கு உதவியாக மதிமுகவிற்கு வந்தவர். வரும்போது அவரது பெயர் சத்தியமூர்த்தியோ அல்லது சத்தியசீலனோ என நினைவு.பிறகு மல்லை சத்யா என்று பெயர் வந்தது. அவருக்கு திருப்போரூர் தொகுதி சட்ட மன்றத் தேர்தல் மதிகவில் போட்டியிட என்று நினைவு ஏ ஃபார்ம் பி ஃபார்ம் எழுதி நான் தான் மதுராந்தகம் ஆறுமுகத்திடம் கொடுத்தேன். இந்த சத்யாவை விட வைகோவை ஜமுக்காளத்தில் வைத்துத் தூக்கிப் பிடித்து அவருடைய புகழுக்கு எல்லாம் பின்னணியாக இருந்து அவரை மக்கள் மத்தியில் முன்னணிக்கு கொண்டு வர உழைத்தவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு வைகோவிடம் இந்த மல்லை சத்யா சர்டிபிகேட் வாங்கிக் கொண்டார். உண்மையைச் சொன்னால் அன்றைக்கு திமுகவில் உள்ளவர்கள் மற்றும் மதிமுகவில் இணைந்தவர்கள் அனைவரும் வைகோவின் அரசியல் வாழ்க்கைக்கு அவ்வளவு உதவி செய்துள்ளார்கள். இந்த மல்லை சத்யா நேரடியாக மதிமுகவில் வந்து சேர்ந்த பிறகு உண்மையில் அவருக்கு மதிமுகவில் துவகத்தில் மற்றவர்கள் விட மிகப்பெரிய வெளிச்சம் கிடைத்தது. அவர் வைகோவுக்கு நிறைய வேலை செய்திருக்கலாம். ஆனால் அவர் மதிமுகவில் இணைந்தது அவருக்கு தான் மகிழ்ச்சியாக இருந்தது. மதிமுக வின் தொடக்க காலத்தில் அதை உருவாக்கிய எங்களைப் போன்றவர்களுக்கு வைகோவால் சில வேதனைகள் நிகழ்ந்தது. என்னை 1998 முதல் சற்று வைகோ கவலை அடைய வைத்தும் , சங்கடம் இருந்தும் 2001 மாரச் வரை மதிமுகவில் சற்று பொறுத்துக் கொண்டு தொடர்ந்தேன். இப்படி பலருக்கும் ஏற்பட்டது .இப்போது சத்யாவுக்கு ஏற்பட்டு பேசுகிறார்.பேட்டி கொடுக்கிறார் தன் மகனுக்காக உண்மையாக இருந்த எனக்கு வைகோ துரோகம் செய்கிறார் என்று சொல்கிறார்.
மல்லை சத்யா அவர்களே! வைகோ இவ்வாறு செய்வது எங்களுக்கு வழக்கமாக இருந்தது உங்களுக்கு புதிதாக இருக்கிறது என்ன செய்ய!. வாரிசு அரசியல் படுத்தும் பாட்டில் நான் என்ன நீ என்ன திமுக என்ன மதிமுக என்ன எல்லாம் ஒன்றுதான் என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது. 1970 -80 களில் வைகோவின் நலன காத்த ( அவருடைய ராஜ்யா சபா இரண்டாம் முறை, பிரபாகரன் அறிமுகம் என எனது பலவகையான உழைப்பு) எளக்கு வைகோ மூலம் இப்படியான நிலைமை ஏற்பட்ட போது அன்று இந்த சத்தியா என்ன சொன்னார் 2001 இல்… அதே நிலை இன்று இவருக்கு …. காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .
****
மதிமுகவின் தலைமை அலுவலகம் யார் பெயரில் வாங்கப்பட்டது ? உண்மை சொல்வாரா வைகோ / கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்