#ராகுல்காந்திதேசவிரோதப்போக்கு நிலைப்பாடுகளில் அரசை விமர்சிக்கக் கூடாது என்று #உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.ராகுல் காந்தி சார்பில் காங்கிரஸும் நாங்கள் தேசத்தின் காவலர்கள் என்று அதை ஒட்டி அறிக்கை விட்டுள்ளது.
எல்லாம் சரிதான். இந்திரா காந்தி காலம் வரை காங்கிரஸ் செயல்பட்டதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியமானது தான்.
ஆனால் அதற்குப் பிறகோ அல்லது அதற்குள்ளாகவே என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.
1)ராஜீவ் காந்தி காலத்தில் #போபால்கார்ஃபைடுவாயு ஆலை கசிவில் ஏராளமான மக்கள் இன்று பாதிக்கப்படும் போது அந்த ஆலை முதலாளி ஆண்டர்சனை தப்பிக்க விட்டது யார்? இதுவரைக்கும் அதற்கான நஷ்ட ஈட்டைச் சரியான முறையில் பெற முடியாமல் இன்னும் அந்த வாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கே நிம்மதியற்று வேதனையுடன் இருக்கிறார்கள்.
2)ஆயுத பேர ஊழலான #போபர்ஸ் வழக்கில் கோட்டுர்ச்சி யார் தயவால் காப்பாற்றப்பட்டார்.
4) இலங்கை தமிழர்களை 2009 அழித்தது….
3)அது இருக்கட்டும் ராகுல் காந்தி அவர்களே! உங்கள் தாயார் #சோனியாகாந்தி 1967 இல் உங்கள் தந்தையாரை திருமணம் செய்து கொண்டு இத்தாலியில் இருந்து இங்கு வந்து 1983 வரை இந்தியக் குடியுரிமை பெறாமலே அதுவரை தன் சொந்த நாடான இத்தாலி பாஸ்போர்ட்டை கையில் வைத்து கொண்டு போய் வந்து கொண்டு இருந்தார். அது மட்டுமல்லாமல் இந்திய அரசியல் களத்திலும் தலையிட்டுத்தன் கணவரின் பெயரால் இயங்கவும் செய்தார். இதற்கெல்லாம் என்ன பதில்?
4)இப்போது வரை நீங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள் என்பதைக்கூட மக்களுக்குப் புரியும்படி வைக்காமல் வேறு எங்கோ அடிக்கடி வெளிநாடுகளில் எல்லாம் சுற்றி விட்டு வருகிறீர்கள். நீங்கள் ஒரு ஸ்காலர்ஸ் ஜிப்ஸி அல்ல. இதற்கெல்லாம் என்ன சொல்ல போகிறீர்கள்.
3) உங்கள் தாயின் இத்தாலி சொந்தங்கள், கடந்த UPA 1-2 ; 2014 may வரை நடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் டில்லியில் அமைச்சருகளுக்கு வழங்கப்படும் சில பெரிய பங்களாகளில் பல வருடங்கள் கொட்டம் அடித்து வாழ்ந்தனர்.
ஏதோ நீங்கள் ஆண்டால்தான் அது தேசபக்தி என்பது போலவும் மற்றவர்கள் ஆண்டால் அது தேச பக்தி இல்லை என்பது போலவும் இருக்கிறது உங்கள் வாதம். இப்படியான போக்குகளால் தான் காங்கிரஸ் காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. இது காந்தி நேரு பட்டேல் காலத்துக் காங்கிரஸ் அல்ல!
இன்றைய காங்கிரஸ் வேறு வேறு வெவ்வேறாக ஆகிவிட்டது. காங்கிரசின் முகமே எழுபதிற்குப் பிறகு முழுமையாக மாறிவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது இருப்பது முழுமையான காங்கிரஸ் இல்லை என்பதை அரசியல் வல்லுநர்கள் அறிவார்கள்.

No comments:
Post a Comment