Tuesday, July 14, 2026

மத்திய அரசின் (Publication division)

 மத்திய அரசின் நூல்கள் வெளியீட்டுத் துறையான (Publication division) ஐ என் பி யில் உயர் அதிகாரி நண்பர் சஞ்சய் கோஸ் அவர்களைச் சந்திக்கச் சென்னை படேல் பலன் சென்றேன் அவர் பல செய்திகளைச் சொன்னார் . மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சரிதத்தை சென்னை பெசன்ட் நகரில் உள்ள உ வே சாமிநாதர் நூலகம் விரிவாக வெளியிட்டுள்ளது.

அதிகப் பக்கங்கள் கொண்ட அந்த நூலை சுருக்கி எளிமையான மொழியில் சரியான முறையில் சிறப்பாக அச்சிட்டுக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆர்வம் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த நூல் முறையாக வெளிவந்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் திரு கோஸ் என்னிடம் சொன்னார்.! மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சரிதம் அவர் வாழ்ந்த வரலாற்றுப் பின்னணிகள் அவர் செய்த தமிழ்த் தொண்டுகள் யாவும் கால வரிசைப் பிரகாரம் அச்சிடப்பட்டு அருமையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது! திருவாடுதுறை ஆதீனத்தில் அவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றியது அவருக்கும் சீடராக இருந்தத உ வே சாமிநாதருக்கும் உள்ள தொடர்புகள், அவர்கள் ஆற்றிய தமிழ் பணிகள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணவர்கள் தொடர்ச்சியாக செய்த தமிழ் ஆய்வுகள் என கடந்த நூற்றாண்டில் செய்த தமிழ் அறிவுப் பெட்டகங்களை கல்விப்புலத்திற்கென பிள்ளையவர்கள் பற்றி சேகரித்தது அனைத்தையும் இணைத்து மத்திய அரசின் நூல் வெளியிட்டகம் சிறப்பான முறையில் இந்நூலை கொண்டு வந்திருக்கிறது. இங்கே சில தமிழ்ப் போலிகள் எதையாவது சொல்லி அல்லது தமிழை வைத்து வாழ்ந்த சிலர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழுக்கு என்ன தொண்டு செய்துள்ளார் என்று குற்றஞ்சாட்டிப் பேசியிருந்தார்கள்! விட்டால் அவருக்குத் தமிழே தெரியாது என்று கூடச் சொல்வார்கள்! இந்த நூல் அவர்களுக்கு பதில் சொல்லும் முகமாக இல்லை. மாறாக நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ் மீது உள்ள தனது பற்றினாலும் சிறிய வயதில் இருந்து அவற்றை வாசித்து அதில் பெற்ற இலக்கிய விகாசத்தாலும் ஒரு மாபெரும் தமிழ் மனிதரின் சரித்திரம் நினைவு கூறப்பட வேண்டும் என்கிற இந்த விருப்பத்தை தன்னளவில் வெளிப்படுத்தி அதற்கான முயற்சிகளைச் செய்வதிலும் உறுதுணையாக இருந்திருக்கிறார்!. அவர் ஆங்கிலம் மட்டும் பேசும் பொருளாதார அறிவு உள்ளவர் மட்டும் அல்ல!தமிழ் வாசிப்பில் அதிகம் ஈடுபாடும் உள்ள தமிழ் மாணவி!அந்த வகையில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சரிதத்தை இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு கொண்டு வர அவர் ஆர்வம் காட்டியதும் சிறப்பானதொரு தமிழ் தொண்டு தான் என்பதில் ஐயமில்லை! திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இதை ஊக்கப்படுத்தி இராவிட்டால் இந்தப் பணி சாத்தியமாகி இருக்காது என்று சஞ்சய் கோஸ் அவர்கள் மனமாரப் பாராட்டிச் சொன்னார். தமிழுக்கு தாங்கள் தான் அத்தாரிட்டி என்று நினைப்பவர்களுக்கு இந்த நன் செயலும் போய்ச் சேரட்டும்.




No comments:

Post a Comment

1947 சென்னை

1947 சென்னை.. இந்த இடம் Higginbotham. இந்த இடம் Higginbotham.