Tuesday, July 14, 2026

திமுகவின் தலைவர் ஸ்டாலின் அவர்களே!

 திமுகவின் தலைவர்ஸ்டாலின் அவர்களே! எங்களைப் போன்றவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு அவர்களை அருகில் வைத்து வளர்த்து தூக்கிப்பிடித்தும் உருவாக்கினீர்கள்.

என்ன பிரயோஜனம்! இன்றைக்கு அவர்கள் உங்களைப் படுத்தும் பாடு என்ன!? எல்லா வகையிலும் நன்றியற்றுப் போனவர்கள் இன்றைக்குப் பேசும் பேச்சு என்ன!? நீங்கள் கே என் நேரு அவர்களிடம் “நம்மை நம்பி வந்து விட்டார்கள் எப்படியாவது ஜெயிக்க வையுங்கள் வை கோ பையனை” என்று சொல்லி இருக்கிறீர்கள். எப்படி ஒரு ஆதரவு! நாங்களும் உங்களை நம்பித்தான் திமுகவிற்கு வந்தோம்! நீங்கள் ஆளும்கட்சியாக இருந்த போது டெசோ மாநாடுகள் உள்ளிட்டு ஐநா சபை வரையிலான ஏற்பாடுகள் பிறகு எதிர்க்கட்சி ஆனபின்னாலும் நள்ளிரவில் கலைஞர் கைது!மனித உரிமைக் கமிஷன்! அண்ணா நகர் ரமேஷ் வழக்கு! போன்றவற்றில் பல விடயத்தில் உங்களுக்கு இரவு பகல் பாராது அவ்வளவு உறுதுணையாக இருந்தோம். அதற்கு பதிலாகத்தான் எங்களை ஒன்றும் இல்லாமல் பண்ணினீர்கள்!. அந்தப் பழி பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக இன்றைக்கு அவர்கள் கண்டபடி பேசுவதை நீங்கள் கேட்டுக் கொண்டும் இருக்கும் நிலை வந்துவிட்டது ! என்னவெல்லாம் மோசமாகப் பேசுகிறார்கள்! பீடை ஒழிந்து விட்டது என்றெல்லாம் சொல்கிறார்கள்!. நீங்கள் கையில் எடுத்து ஆளாக்கியதற்கு அவர்கள் நன்றி காட்டும் விதம் இதுதான்! நன்றாகப்பார்த்துக் கொண்டீர்களா! செய்நன்றி கொல்பவர்கள் தான் உங்களுக்கு என்றும் சேக்காளிகள். உடனிருந்து உழைத்தவர்கள் எல்லாம் உங்களுக்குப் பகையாளிகள். உங்களிடம் வேறு என்னத்தைச்சொல்ல முடியும்!

No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...