எனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழா டெல்லியில் கான்ஸ்டியூசன் கிளப் ஹாலில் நடக்கிறது!துணை ஜனாதிபதி திரு சி பி ராதாகிருஷ்ணன் அவர்கள் அதை வெளியிட வேண்டும் என்று வைகோ அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். அவர்
எப்படி மோடியை விமர்சித்த நூலை வெளியிடுவார். அதன் பிறகு என்ன வைகோ அவர்களே! நீங்கள் இந்திரா காந்தி சோனியா காந்தி ராஜீவ் காந்தி ராகுல் காந்தி போன்றவர்களை காறிப் துப்பி விமர்சனம் செய்தீர்கள்! அவர்களது குடும்பத்தைப் பற்றி கடுமையாக வசை பாடி உள்ளீர்கள்! போர்பஸ் ஊழல் இலங்கை தமிழர் பிரச்சினை முள்ளிவாய்க்கால் உட்பட அவ்வளவையும் பேசிவிட்டு உங்களது நூலை வெளியிட அவர்களை எந்த முகத்தை வைத்துக்கொண்டு அழைக்கிறீர்கள்?. உங்கள் நூலை ராகுல் காந்தியையும் ப.சிதம்பரத்தையும் வைத்து எப்படி வெளியிட முடியும்!? நீங்கள் குற்றம் சாட்டியவர்களே அந்த நூலை வெளியிட வேண்டும் என்று அழைத்தால் என்ன அர்த்தம்! தனக்கு வேண்டுமென்றால் நேரத்திற்கு ஒரு பேச்சு அங்கு ஒரு முகம் இங்கு ஒரு முகம் காட்டுதல் இது வேடிக்கையாகத் தெரியவில்லையா! இல்லை இதெல்லாம் அரசியல் சகஜம் என்கிறீர்களா? இரண்டு எம்எல்ஏக்களை நீங்கள் ராஜினாமா பண்ணினால் நான் வந்து உங்களுக்கு பிரச்சாரம் செய்து ஜெயிக்க வைக்கிறேன் என்று விஜய் சொன்னார் என்று சொல்கிறீர்களே !எங்கே வைத்துச் சொன்னார் எப்படி சொன்னார் என்று தெரிய வேண்டுமே! இப்படி மாற்றி மாற்றி பேசினால் என்ன அர்த்தம்! நேற்று வரை ஸ்டாலின் நல்லவர் வல்லவர் சத்தியசீலர் என்றீர்கள்! இன்று எனக்கு ஸ்டாலினைப் பிடிக்கவில்லை அவர் என்னைக் கேவலப்படுத்தி விட்டார் என்கிறீர்கள்! இன்றைக்கு விஜய் ஒரு ஒப்பற்ற தலைவர் அவர் ஒபாமாவைப் போன்றவர் என்றெல்லாம் அள்ளி விடுகிறீர்கள்! ஜெயலலிதாவைப் புரட்சித்தலைவி என்பீர்கள்! வாஜ்பாய் ஒரு அற்புதமான மனிதர் என்பீர்கள்! பாஜக ஒரு அருமையான கட்சி! அதே போல் மோடி ஒரு அற்புதமான மனிதர்! ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்.! என்றெல்லாம் சொன்னீர்கள். 2014 ல் மோடியை அணைத்துக் கொண்டு சால்வை எல்லாம் போர்த்தினீர்கள். ஒரு நாடகத்தில் தான் இத்தனை காட்சிகள் மாறும்!யதார்த்தத்தில் வாய்ப்பே இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்
நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment