Tuesday, July 14, 2026

லதொரு விஷயத்தை முதல்வர் பண்ணினால் என்ன..?

லதொரு விஷயத்தை முதல்வர் பண்ணினால் என்ன? யார் பண்ணினால் என்ன பொது நலத்தில்…?

வைகைஆறு
——————————————————— தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மதுரைக்குச் சென்ற போது வைகை ஆற்றின் நிலமையை பார்த்து உடனே அதை சீர் செய்ய வேண்டும் என்று சொன்னார். அப்படிச் தமிழக அரசு சீர் திருத்தப்படவில்லை எனில் எனது மேற்பார்வையில் அந்த பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் சொன்னார். இதில் என்ன தவறு இருக்கிறது?ஒரு மாநிலத்தின் கவர்னராக இருப்பவர் பிரசித்தி பெற்ற வைகை ஆற்றை பல நூறு கிராமங்கள் வழியே பயணிக்கும் மேலும் இந்திய வரைபடத்தில் இருக்கும் ஒரு ஆறு பல காலங்களாய் விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கியத்துவம் பெற்ற பல சங்க இலக்கிய புலவர்களால் விதந்து ஓதப்பட்ட ஆறு அதன் வழித்தடத்தில் செப்பனிடப்படாமல் அசுத்தம் ஆகி கிடக்கிறது என்று அவர் யோசிக்கும் போது அதைச் சீர் செய்ய வேண்டும் என்று நினைப்பதில் என்ன குற்றம்! நன்மையானதை யார் செய்தால் என்ன? நதிகள் தான் நமது உயிர்நாடி என்று நினைக்கும் ஒரு மனித மாண்பு அவ்வாறு அக்கறை கொள்வதில் என்ன தவறு? இதை எப்படிக் கவர்னர் சொல்லலாம் என்று ஆளுங்கட்சிக்காரர்களும் எதிர்க்கட்சிகாரர்களும் உதயநிதி முதற்கொண்டு மேலும் கீழுமாகக் குதிக்கிறார்கள். நல்லதொரு விஷயத்தை முதல்வர் பண்ணினால் என்ன? கவர்னர் பண்ணினால் என்ன? எந்த அரசு செய்தால் என்ன? ஆளுநர் எப்படி வைகை ஆற்றை சுத்தம் செய்வார்? ஆளுநருக்கு என ஒரு அதிகாரம் இருக்கிறது. அந்த வேலையில் மட்டும் அவர் தலையிட்டால் போதுமானது. துர்வார வைகைக்கு போவதாக சொல்கிறாரே! எப்படி போவார்? அவர் யாருக்காவது கான்டிராக்ட் விடுவாரா? இல்லை அவரே 10 லாரிகளை எடுத்துக்கொண்டு போவாரா? தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கும் எந்த வேலையையும் அவர் செய்ய வேண்டிய அவசிய இல்லை என்ற வாதங்கள் நன்மை கிடைக்கிறதா என்று பார்ப்பது தான் முக்கியம். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் திமுகவும் தவெகாகவும் வாதப்பிரதிவாதங்கள் செய்து கொண்டிருப்பது ஏதோ நாங்கள் செய்ய வேண்டிய உரிமைகளை நீங்கள் எப்படிச் செய்ய முடியும் என்று கேட்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான மனிதர்கள் என்று தெரியவில்லை. கவர்னர் வந்து பார்த்து அதைச் சீர் செய்ய வேண்டும் என்று சொல்கிற நிலைமைக்கு கொண்டு வந்தது யார்.? சும்மா கிடந்தாலும் கிடப்பான் ஆண்டி ஏதாவது நடந்தால் சங்க எடுத்து ஊதுவானாம். வேடிக்கையானவர்கள் எல்லாம் அரசு நடத்த வந்தால் இதுதான் கதி!




No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...