Tuesday, July 14, 2026

விசாரணைக்கு ஆஜராகவில்லை! சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் எ.வ. வேலு!

 விசாரணைக்கு ஆஜராகவில்லை! சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் எ.வ. வேலு!

எ.வ. வேலு மிக உத்தமர்! சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இன்றைக்கு இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.அவர் எப்படி உயர்ந்தார் என்று தெரியவில்லை.! இவர் நூல்களை எல்லாம் எழுதி அந்த நூல்களைப் படித்து பல்வேறு வழிகளில் இவர் செயத தொண்டினால் எல்லோரும் வருங்காலத்தில் அமைச்சராகக் கூட ஆகி விடுவார்கள். பாவம் அவ்வளவு பெரிய உத்தமர். கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் ஒழுகத் தான் செய்யும்! இப்படியானவரை எல்லாம் உயர்த்திவிட்ட ஏணிப்படிகளுக்கும் இங்கு எந்த வெட்கமுமில்லை. குப்பைகள் கோபுரம் ஏறும் காலத்தில் எல்லாம் நடக்கும். தமிழ்நாட்டில் எவ்வளவோ மிகப்பெரிய வசதி உள்ள மருத்துவமனைகள் உருவாகி இருக்கின்றன . உலகில் உள்ள பலரும் கூட இங்கு வந்து வைத்தியம் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.! அப்படிப்பட்ட உத்தமர் எளியவர் எ வ வேலு தனக்கு உடல்நலம்சரியில்லை என்றால் இங்கு இருக்கக்கூடிய ஒரு வைத்திய சாலையில் பார்க்க வேண்டியதுதானே!? அதற்கு ஏன் சிங்கப்பூர் போக வேண்டும்? அவர் செய்த நல்ல நல்ல காரியங்களுக்கு!? விசாரணைக்கு அழைக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லை சிங்கப்பூர் போய் இருக்கிறேன் என்று காரணம் சொன்னால் என்ன அர்த்தம்! உயர்ந்தவருக்கு இப்படி அந்தந்த நேரத்தில் பேசும் சந்தர்ப்பவாத பேச்சுகள் தான் துணையாக இருக்கும் எனில் இந்த நாட்டில் மக்களுக்காக உழைத்த பெரிய தலைவர்களை நினைத்து வேதனைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல இல்லை. போகட்டும்!ஒருவர் எப்படி உயர்ந்தார் என்பதற்கும் ஊழ்வினைகள் உண்டு தானே.




No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...