#யாழ்ப்பாணசர்வதேசவிமானநிலையத்தில் அபிவிருத்தி வேலைகள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து வருகிற பலர் கொழும்பிற்கு வராமல் நேரே யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்ல விரும்புவதும், வெளிநாட்டவர்கள் கொழும்புக்கு போகாமல் நேரே யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து வெளிநாடு செல்ல விரும்புவதும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் வருகையைக் கூட்டும்.
மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு சேவைகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இவற்றிலிருந்து வருகிற வருமான வரி வட மாகாண அபிவிருத்திக்கு தமிழர்களின் அபிவிருத்திக்கு பயன்படும் வகையில் ஒழுங்குசெய்யப்படவேண்டும். வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும். சுற்றுலாப் பயணிகள் வருகை யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் இருக்கும் வியாபார நிலையங்களுக்கும் மக்களுக்கும் வருவாய் ஈட்டித்தரும். ஏற்கனவே வெளிநாட்டு வருவாய் இருக்கிற அதே தருணம், அதை நம்பியிராமல் நம் மக்கள் தங்களையே நம்பி அந்த நிலத்திலேயே வாழ்ந்து காட்டுவதே அந்த நிலத்துக்கு நீண்ட காலத்தில் வெற்றி ஈட்டித்தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சேர்த்து வைக்கும் பழக்கத்தில் hoarding mentality இல் நிலங்களை வாங்கி விலை ஏற்றம் செய்வதை கைவிட்டு, உள்ளூரில் அல்லது வெளிநாட்டிலிருந்து முதலிடுபவர்களுக்கு, உள்ளூரில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறவர்களுக்கு, வியாபாரங்களுக்கு நிலங்கள் நல்ல விலையில் வழங்கப்படவேண்டும். இது உள்ளூரில் முதலீட்டை ஊக்குவிப்பதோடு, efficient ஆன asset ஆக பயன்படுவதோடு, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும். அதேநேரம் சுற்றுலாத் துறையும் தமிழருக்கென்று அபிவிருத்தி செய்யப்படவேண்டும். தமிழகத்திலிருந்து வருகிறவர்களுக்கு தமிழர்களுக்கு வெளிநாட்டவர்களுக்கு தமிழ் சார்ந்த சுற்றுலா அபிவிருத்தியும், entertaining க்கு வருகிறவர்களுக்கு அதுசார்ந்த வசதியான ஹோட்டல்களும் நிறுவப்படவேண்டும். தமிழர்கள் liberal ஆக யோசிக்கப் பழகவேண்டும். கலாச்சார காவலர்கள், சிறு குழுக்கள் தேவையற்ற விதத்தில் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த நினைப்பதை எதிர்க்கவேண்டும். இந்த வசதிகளால், தமிழ்நாட்டிலிருந்து பலரும் வந்து போவதால் தமிழர்களே தமிழ் நிலத்தில் முதலிடும் வாய்ப்பு. தமிழ்நாட்டவரே முதலிடும் வாய்ப்புகள் ஏற்படும். ஏற்கனவே சுற்றுலாத்துறைக்கு ஏற்றபடி இந்திய உணவகங்கள் சில வந்துள்ளன. அவை உள்நாட்டு தமிழருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன.. அதேபோல, வெவ்வேறு தொடர்புகளால், விவசாய தொழில்நுட்பம், தொழில்நுட்பம் போன்றவை மென்மேலும் வளரும்.. இவை எல்லாம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மக்கள் அந்த நிலத்திலேயே தலைநிமிர்ந்து வாழ்வதை பொருளாதாரம் உறுதிசெய்யும். உலகத்துக்கு ஏற்ப முற்போக்காக இயங்கும் அதேநேரம் வரலாறும் காக்கப்படவேண்டும். இது மக்களின் அடையாளத்தை நிலைநிறுத்தும். #jaffnaairport
Subscribe to:
Post Comments (Atom)
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment