“என் தேசம் என் வாழ்க்கை”
-#எல்கே_அத்வானி #பிஜேபி_ஆர்எஸ்எஸ்உறவு காலத்திற்கு காலம் கையிலிருக்கும் பிரச்னைகளின் அடிப்படையில் பிஜேபி தலைமை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் கலந்து பேச எந்த தயக்கமும் காட்டியதில்லை. அந்த கலந்துரையாடல்களுக்கு பிறகு கட்சி தன்னுடைய சொந்த முடிவுகளை எடுக்கும் சிலமுடிவுகள் வேறுபடலாம் வேறுபட்டும் இருந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். எடுத்த நிலையிலிருந்தும் 'சங் பர்வாரின் சில கொள்கைகளிலிருந்தும். ஆனால் சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் சம்மதமில்லாமல் எந்த அரசியல் அல்லது அமைப்பு ரீதியான முடிவுகளையும் எடுக்கக்கூடாது என்கிற எண்ணம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எண்ணம், நாங்கள் நினைக்கிறோம். அது கட்சிக்கோ அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கோ எந்த நன்மையும் தராது. ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்த மாதிரி எண்ணங்கள் அவர்களுடைய மிகப் பெரிய லட்சியமான மனிதர்களை உருவாக்குதல் தேசத்தை வளர்த்தல் போன்றவைகளை சிறுமைப்படுத்திவிடும் என்பதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். இரண்டும் முனைப்பாக இந்த எண்ணத்தை களைய வேண்டும். தேசத்தின் பெரிய நலன்களை மனதில் கொண்டு, கடந்த காலத்தைப் போலவே. ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய தொண்டர்களையும், பிஜேபி நிர்வாகிகளையும் பிணைக்கும் சங்கிலியான கொள்கைகள், ஒழுக்க நன்னெறிகளை வலுப்படுத்தும் பணிகளை செய்யும் வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரின் மற்ற அமைப்புகளோடு தொடர்ந்து கலந்துரையாடுவது பிஜேபி வெகுவாக பாராட்டுகிறது. நாங்கள் முடிவுகள் எடுக்கும் பணிக்கும் அவர்களுடைய ஆலோசனைகள் எங்களுக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால் பிஜேபி என்பது ஒரு அரசியல் கட்சி அவர்கள் மக்களுக்கு கடமைப்பட்டவர்கள். அவர்களுடைய செயல்திறன் அவ்வப்போது தேர்தல் மூலமாக சோதிக்கப்படுகிறது. அதனால், ஒரு ஜனநாயகத்தில், பல கட்சி அமைப்பில் பிஜேபியை போல கொள்கை ரீதியான கட்சி தங்களுடைய அடிப்படையான கொள்கைகளை அப்படியே வைத்திருக்கும் விதத்தில் பணியாற்ற வேண்டும். அதே சமயத்தில் எல்லா கொள்கை படிவத்திற்கும் அப்பாலுமுள்ள அதிக பிரிவு சென்றடைய வேண்டும். பிஜேபியின் கொள்கை பிணைப்பினை மரபு மொழி ரீதியாக மக்களுக்கு வேகமாக கொண்டு செல்வதில் அதிக அக்கறை தேவைப்படுகிறது. பிஜேபியிலுள்ள எங்களுக்கு, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாதான் ஒரு கொள்கை உதாரண புருஷர். அவர் கட்சியின் கொள்கை பிடிப்பை எப்படியெல்லாம் விளக்குவார் என்பதை பார்த்திருக்கிறோம். உதாரணமாக, 'அகண்ட பாரதம்' தொடர்பாக, குறிப்பிடத்தக்க தெளிவோடும். ஈடுபாட்டோடும். அதே சமயம் நெகிழ்ச்சியோடும், அழகாகச் சொல்வார். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு தேசிய ஸ்தாபனம், கோடிக்கணக்கானவர்களின் தனித்தன்மையை வளர்க்க அதன் பங்களிப்பும், அவர்களை தேசப்பற்றோடு, கொள்கைகளோடு, சுயநலமற்ற தாய்நாட்டு சேவையில் ஈடுபடுத்துவதும் ஒப்பிடவே முடியாது. இந்த ஸ்தாபனம்தான் பல்லாயிரக் கணக்கில் பொது நலத்தில் அக்கறை கொண்டவர்களை அரசியல் என்கிற ஊடகத்தின் மூலமாக தேச சேவையில் ஈடுபட வைத்தது. அரசியலில் இருப்பவர்களும், மற்றதுறைகளிலிருந்து தேசத்திற்கு சேவை செய்பவர்களும் ஒற்றுமையோடு, நம்பிக்கையோடு செயல்பட்டு தேசங்களுக்கு நடுவே நமது நாட்டிற்கு உரிய இடத்தை கிடைக்க உறுதி செய்ய வேண்டும். #LKAdvani #BJP4IND #RSS #ksrpost #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment