Tuesday, October 6, 2026

ஏதோவொரு

 ஏதோவொரு

காரணத்திற்காக என் வரிகளிடமிருந்து தள்ளிப்போய் வேடிக்கைப் பார்ப்பவர்கள் நிறைய உண்டு கண்டும் காணாதது போல் தூர நின்று மௌனம் பூசிக்கொள்பவர்களை தொந்தரவு செய்யாது விலகி விடுகிறேன் யாருடைய நிபந்தனையாலோ யாருடைய நிர்ப்பந்தத்தாலோ அச்சத்தோடு என்னை என் நட்பை அவர்களால் நட்பில் இருந்துகொண்டே இல்லாதது போல் தொடர இயலாது போகலாம் எனில் அவர்களிடம் இனி ஏன் இதுபோல் பாராமுகமாய் இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பதில் மறுமுறையும் ஒப்புக்காய் அன்பை கைமாற்று வாங்கிவிட்டு பதிலுக்கு என்னால் என்ன தர இயலும் எமோஜிக்களால் வாழ்வெதென் வாழ்வென்ற கங்கணத்தைக் கட்டிக்கொள்ளாத என் வெற்றுக்கைகளில் என்ன உண்டு வியர்வை கசியும் அன்பின் படர்ந்த ரேகைகள் அவைகள் தேயாதொருநாள் வரை யாரிடமும் ஓசையின்று எதையோ பேசிக்கொண்டே இருக்கும்.. இருக்கட்டுமே...



No comments:

Post a Comment

இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.

  இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...