Tuesday, October 6, 2026

நடந்தேன்!

 நடந்தேன்!

வழியனுப்ப வந்த நண்பரிடம், "அவரை எங்கேயோ பார்த்து போல் இருக்கிறதே நம்ம campus சா"? என்றேன், "இல்ல மேடம், கிருஷ்ணகிரில work பண்ணும் போது பழக்கம், அப்பப்போ வீட்டுக்கு வருவாரு" என்றார், "ஓ Family யோட வந்திருக்காரா?" என்றேன், இல்ல மேடம்.. அவர் கல்யாணமே பண்ணிக்கல, யாரோ ஒரு பொண்ண லவ் பண்ணாராம், அந்த பொண்ண மறக்க முடியலன்னு அப்படியே இருந்துட்டாரு" என்று அவர் சொல்ல, அந்த வார்த்தையை கேட்டு, ஸ்தம்பித்து போனேன்! முப்பது வருடம் பின்னால் ஓடிப்போய் அவனது கைகளை பற்றிக்கொண்டு மன்னிப்பு கேட்டது என் மனம்! ஏற்கனவே தாழிடாமல் இருந்த இரும்பு கேட் சமநிலை தவறி அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டு இருந்தது! கேட்டை திறந்து திரும்பி நின்று மூடும் போது அவன் கண்களை எப்படி பார்ப்பேன் என்று எதிர்கொள்ள பயந்து தவித்தபடியே நடக்கிறேன்! இனிமேல் இவனை எப்போது பார்ப்பேனோ என்று நினைத்தபடியே கேட்டை திறந்து திரும்பி நின்று மூடியபடி அவனை பார்க்கிறேன், என்னை சங்கடப்படுத்த விரும்பாமல் தரையை பார்த்தே தலைகுனிந்து நிற்கிறான் அதே கண்ணியத்தோடு..! இறுகப் பற்றிய இரும்பு கேட்டை விடுவித்த போது உள்ளங்கையில் ஒட்டி இருந்த துருபிடித்த இரும்பெல்லாம் சந்தனமலையின் செந்தூரத்தை நினைவுபடுத்தி கொன்றது!



No comments:

Post a Comment

இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.

  இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...