Thursday, December 12, 2024

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..

இன்றெனை வருத்தும்

இன்னல்கள் மாய்க.

நன்மை வந்தெய்துக

தீதெல்லாம் நலிக....

~  பாரதி  

அவரவர் வாழ்க்கையில் 

ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்அந்த

நினைவுகள் நெஞ்சினில் 

திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்…….. 


நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..


என் மௌணத்தை சிறைபிடித்து...தனிமையை ஆட்கொண்டு..ஏகாந்தத்தை வசப்படுத்திய நினைவுகள்..சுமையானாலும்..




சுகமாய்தான்...


இதில் புனிதம் என்று ஏதும் உள்ளதா? 


இதில் சிந்தனையால் தீண்டப்படாத ஒன்று? 


தூய்மை, புனிதம் என்று அழைப்பதை நாம் தேவாலயங்களில் சின்னங்களாக, அடையாளங்களாக வைத்துள்ளோம் - கன்னி மேரி, கிறிஸ்து, சிலுவை என. 


இந்தியாவிலும், பௌத்த நாடுகளிலும் அவற்றின் குறிப்பிட்ட சின்னங்கள், உருவங்கள் உள்ளன - அவை புனிதமானவை: பெயர், சிற்பம், உருவம், சின்னம். 


ஆனால் வாழ்க்கையில் புனிதமான ஒன்று இருக்கிறதா?


புனிதமானது என்பது மரணமில்லாதது, காலமற்றது - தொடக்கமும் முடிவும் இல்லாதது.


உங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது, யாராலும் கண்டுபிடிக்க முடியாது.


புனிதம் என்று நீங்கள் நினைப்பதை கைவிடும்போது அது வரக்கூடும்.


மதங்கள், அவற்றின் பிம்பங்கள், அவற்றின் கோரிக்கைகள், மற்றும் நம்பிக்கைகள், அவர்களின் சடங்குகள், கோட்பாடுகள், அனைத்தும் புரிந்து கொள்ளப்பட்டு முற்றிலும் நிராகரிக்கப்படும் போது, ​​புனித நூல்கள், குருமார்கள், பின்பற்றுபவர் என யாரும் இல்லாதபோது, ​​​​அந்த அமைதியின் மகத்தான தரத்தில், தன்மையில், சிந்தனையால் தொட முடியாத ஒன்று வரக்கூடும். 


ஏனென்றால் அந்த அமைதி சிந்தனையால் உருவாக்கப்படாத ஒன்று.


காலச் சக்கரம்...

இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்....

முப்பது வயசுல இது வேணும்னு தோணும்....

நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்....

ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட

பரவாயில்லைனு தோணும்.....

அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்....

எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!

காலமாற்றம்....காலச்சுழற்சி...கால நேரம்....!

பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!

ஆணவம் எல்லாம்பணிவா மாறும்....!

அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!

மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!

எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ....

அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!

எதற்காக ஓடினோம்....

எதற்காக ஆசைப்பட்டோம்....

எதற்காக எதைச் செய்தோம்.....

என்ற காரணங்கள் எல்லாமே .....

காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!

தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து

ஆட விடுவதும் காலம்தான்...

அதன் பின் ஆட்டத்தை அடக்கி....

மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும்

அதே காலம்தான்....!

வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,...

உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!

வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.....

அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்....


எனக்கு நடிக்க தெரியாத தால் என்னை நிறைய பேருக்கு பிடிப்பதில்லை நடிப்பதினால் நிறைய பேரை எனக்கு பிடிப்பதில்லை... !!


வாழ்க்கைக்கு எது தேவை பணமா, நிம்மதியா?


முதலில் வாழ்க்கையில் நிம்மதி இருந்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். வாழ்வில் இரண்டுமே தேவைதான். அதை நாம் அளவோடு வைப்பதும் அளவுக்கு மேல் வைப்பது தான் தவறு. 

உதாரணமாக கூறினால் நாம் ஒரு வேலைக்கு செல்லும் முன்பு மனம் நிம்மதியாக இருந்தால்தான் வேலை பூர்த்தி அடையும்.


ஆடம்பர வாழ்க்கைக்கும், அற்ப சுகத்திற்கும் பணம் மிகவும் தேவைப்படுகிறது. ஆனால் ஒருவேளை கஞ்சி குடித்தாலும் மனதை நிம்மதியோடு குடித்தால் அதுவே போதுமான வாழ்க்கையாகும்.


திருவோட்டினை எடுத்துக்கொண்டு தெருக்கடையில் யாசகம் பெறும் மனிதரை பாருங்கள்.


அவர்களுக்கு போதுமான பணமும் போதுமான உணவும் சாலை ஓரத்தில் உறங்க இடமும் இருப்பதால் என்னவோ அவர்களுக்கு,


ஆடம்பரமா அப்படி என்றால் என்ன? நிம்மதியா அப்படி என்றால் என்ன? என்ற கேள்விக்கு நம்மிடம் அவ்வாறு கேட்பார்கள்.


அளவிற்கு அதிகமான பணம் இருப்பவரால் தான் மனதில் நிம்மதியற்று இருப்பார்கள். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.


வாழக்கையில் ஆயிரம் கவலைகள் வலிகள் இருந்தாலும், முகத்தில் புன்னகையெனும் முகமூடியை அணிந்து கொண்டே வாழ்கின்றனர் பலர்.


சுமைகளோடே தான் மனிதர்கள் பயணிக்கிறார்கள். அதை இறக்கி வைப்பதற்குத் தயாராக இல்லை எவரும்.அந்த சுமையை ஏற்பதற்கும் யாரும் தயாராக இல்லை.


இறுதிப் பயணத்தில் தன்னை சுமக்கும் நாள் வரை இது தொடரும் போது வாழ்க்கை உற்சாகமாக இல்லாமல் கடினமானதாக இருக்கிறது.


பதற்றத்தோடும் குழப்பத்தோடும் வாழ்க்கையின் பெரும்பான்மை கழிந்து விடுகிறது.

ஆகையால் குழந்தையின் மன நிலையில் இருந்தாலே போதும் வாழ்க்கை ரசனையாகும்.


இன்முகத்தோடு இதயத்தின் கதவுகளைத் திறப்போம். அதாவது வழி தேடிச் செல்லும் பாதையில்  வலிகள் இருக்கத் தான் செய்யும்.


*சிறு குச்சியை தூக்கிப் பறக்கும் பறவைக்கு, பாரம் கூட வலி தான். பாரத்தை தாங்கி, தன் பாசத்தில் கூடு கட்டும்.


குழிகளில் விழுந்தாலும் வலிகளை மறந்து வழிகளைத் தேடிக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் .


அச்சமின்றி வாழ்வதுதான் வாழ்க்கை.

மறைப்பதற்கு எதுவும் இல்லாமல் இருக்கும்போது நீங்கள் எதையும் தவிர்க்க விரும்ப மாட்டீர்கள்.

உண்மையான சுதந்திரத்தை வெளிப்படையான வாழ்க்கை நடத்துவதில்தான் காண முடியும்.

ஒருவன் தனக்குத் தானே அளித்துக் கொள்ளக்கூடிய நற்சான்றிதழ்களிலேயே தலைசிறந்தது, இப்படிப் பிரகடனம் செய்வதுதான்: "நான் ஒரு திறந்த புத்தகம்."


#கே.எஸ்.ஆர் போஸ்ட்

#ksrpost

12-12-2024.

Wednesday, December 11, 2024

பாரதியின் கடைய வாழ்வு !

பாரதியின் கடைய வாழ்வு !!!

“கடலூர் ஜெயிலிலிருந்து ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதி விடுதலையடைந்து கடையம் போய்ச் சேர்ந்ததாகவும் அவருடைய உடம்பு அசௌகரியமாக இருப்பதால் பாபநாசம், குற்றாலம் போன்ற இடங்களில் கொஞ்ச காலம் தாமதிப்பாரென்றும், அவர் திருநெல்வேலியைக் கடந்து சென்றபொழுது அவருடைய சிநேகிதர்கள், ரயில்வே ஸ்டேஷனில் எதிர்கொண்டழைத்து, சந்தோஷ ஆரவாரம் செய்ததாகவும் தந்தி கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிடுகிறது அன்றைய சுதேசமித்திரன் பத்திரிகை. தன் விடுதலையில் சிரத்தை எடுத்துக்கொண்ட ஸ்ரீமதி அன்னிபெசன்ட், ஸ்ரீ திருமலை அய்யர், ஸ்ரீ சி.பி.ராமசாமி அய்யர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து ரங்கசாமி அய்யங்காருக்குக் கடிதம் எழுதுகிறார் பாரதி.







ஸ்டேஷனிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள மனைவியின் வீட்டிற்கு மூட்டை முடிச்சுக்களோடு இருட்டோடு இருட்டாக நடந்தே வந்துசேர்கின்றனர் தம்பதியர். செல்லம்மாள் வீட்டார் பாரதியின் மெலிந்த உடலையும், சவரம் செய்யாத முகத்தையும் கண்டு வருந்தினர். கை, கால்களைச் சுத்தம் செய்துகொண்டு வர, சாதம் இடுகிறார் செல்லம்மாள். சிறிய மண்ணெண்ணெய் விளக்கு. கதவிற்குப் பின்புறம், ஒருக்களித்து நின்று, முகத்தை முழுதும் காட்டாமல் ‘அத்திம்பேர் வாங்கோ’ என்றொரு குரல். குரல் வந்த திசையை நோக்கிய பாரதி கூரிய கண்களை உருட்டி விழிக்கிறார். ‘என்ன அப்படிப் பார்க்கறேள். நம்ம சொர்ணமல்லவா அவள்’ என்கிறார் செல்லம்மாள். ‘சொர்ணம்மாவா நீ,சொர்ணம்மாவா நீ’ என்று அரற்றியபடியே கண்களில் கண்ணீர் வழிய, சாப்பிடாமல் எழுந்து கையை அலம்பிக்கொண்டு, பென்சிலையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு விளக்கடியில் அமர்ந்து எழுதுகிறார் ‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன், வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை…  ‘  பாண்டிச்சேரி வீட்டில்  தன்னுடைய மகளைப்போல இருந்த செல்லம்மாளின் தங்கை சொர்ணம்மாளுக்கும், தன் முன்னே விதவைக்கோலத்தில் பார்த்த சொர்ணம்மாளுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம். பச்சைக் குழந்தைக்கு, பசும்பொன் பதுமைக்கு விதவைக்கோலம் பண்ணி மூலையில் சாத்தியிருக்கிறது சமூகம். இத்தனைக்கும் கல்யாணம் செய்வதற்கு முன்பே அந்தச் சிறுவனுக்கு நோய் இருப்பதாகச் சொல்கிறார்களே என்று எச்சரித்திருக்கிறார் பாரதி.  

பாரதி கடையம் நீங்கிய பிறகு, தன் தம்பிக்கு நீண்ட நாட்கள் கழித்துப் பிறந்த மகனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் சொர்ணம்மாள். அந்தச் சிறுவனும் சிறுவயதிலேயே மரணமடையவும், தாங்கொண்ணா வேதனையில் உழன்று, பின்னர் திருவண்ணாமலையில் ரமணரைச் சந்தித்தார். அதன் பின்னர் சிலகாலம் ரிஷிகேஷ், டெல்லி, காசி முதலிய இடங்களுக்கெல்லாம் சென்று, பின்னர் சுவாமி சிவானந்தரிடம்  தீட்சை பெற்று, கிருஷ்ணானந்த ஸ்வாமினியாக கடையத்தில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்தார். இந்தப் புத்தக ஆசிரியர் எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்கச் சொல்ல ‘நான் பாரதியின் மைத்துனிடா , யாரிடமும் எதுவும் கேட்கமாட்டேன்’. என்று தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார். இவருடைய சிரமத்தைக் காணச் சகியாமல் எம்.ஜி.ஆரிடம் ஆசிரியரே விண்ணப்பித்து முதல் ‘பென்ஷன்’ வருமுன்பே இயற்கை எய்திவிட்டார். சுவாமி சிவானந்தர் பாரதியோடு எட்டயபுரத்தில் ஒன்றாகப் படித்தவர். அந்த அனுபவங்களையெல்லாம் சொர்ணம்மாளிடம் கூறியிருக்கிறாராம். இந்தச் சொர்ணம்மாள்தான் பாரதி பற்றிய பல செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் கணபதி ராமனிடம். நூலின் பெயர்: கடையத்தில் உதிர்ந்த பாரதி படையல்கள். ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக வெளியீடு. குறுகிய வட்டத்துக்குள் புழங்கியிருக்கக்கூடிய இந்தச் சிறிய நூல் கவிஞரை நேரில் கண்டு பேசிய பலரின் சொற்களின் மூலம் அவரை அண்மையிலெனக் காட்டுகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த அழகிய ஊர் கடையம். இது தென்காசிக்கும் அம்பாசமுத்திரத்திலும் இடையே உள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் ராம நதி, ஜம்பு நதி என்று இரண்டு நதிகள் வளம் சேர்கின்றன. புகைவண்டி நிலையம், அஞ்சலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உண்டு. மேலக்கடையம், கீழக்கடையம் என்று பிரிவுகள். நீர் வளம் எப்போதுமிருப்பதால் முக்கியத் தொழில் விவசாயம்.    

கடையம் பாரதியைப் போலவே எனக்கும் வேட்டாம் (வேற்று அகம் – மனைவியின் வீடு). பாரதி சாதிப் பிரிவினையை எதிர்த்துக் கலகம் செய்த கல்யாணியம்மன் மற்றும் சாஸ்தா கோயில்களுக்கு சில வருடங்களுக்கு முன்  ‘சாஸ்தா ப்ரீதி’ க்காக என் மனைவியின் குடும்பத்தாரோடு நானும் சென்றிருக்கிறேன். அன்றைக்கு மாலை வழிபாட்டின்போது கோயிலிலிருந்து எழுந்த பஞ்ச வாத்திய முழக்கத்தை விஞ்சியது சுற்றுப்புற காடுகளில் இருந்து எழுந்த சீவிடுகளின் (சிள் வண்டு) ஒலி.  நோக்குமிடமெல்லாம் இயற்கையின் களியாட்டம்தான்.  பச்சையில் இத்தனை நிற பேதங்களா?  ஊருக்கு வெளியே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகான நந்தவனத்தோடு கூடிய கல்யாணியம்மன் வில்வவனநாதர் கோயில். பாரதி பாடிய சமஸ்க்ருதப் பாடலான ‘பூலோக குமாரி…ஹே..அம்ருத நாரி’ (எண்பதுகளில் பாலமுரளி பாடிய இந்தப் பாடலை தூர்தர்ஷனில் அடிக்கடி போடுவார்கள்) மற்றும் ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி …’ என்ற பாடலும் இந்த அம்மன் மேல் பாடியதுதான். சுவாமிக்கு ‘தசரத ராமேஸ்வரமுடையார்’ என்றும் பெயர். தசரதன் சிராவணன் என்ற அந்தணச் சிறுவனை, அவன் இருட்டிலே தண்ணீர் மொள்ளும் போது யானை என்று நினைத்து தவறுதலாக அம்பெய்து கொன்று, அவன் தந்தையிடம் சாபம் வாங்கிய இடம். மிக அழகான  கோயில் குளமும், நந்தவனமும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன. மலையில் சற்று ஏறினால்தலைமலை அய்யன் என்றழைக்கப்படும் சாஸ்தா கோயில். பல்லை உடைக்கும் குளிரில் ராமநதிக் குளியல். கால்பட்ட இடமெல்லாம் கண்ணடிக்கிற தொட்டாற்சிணுங்கிச் செடிகள். பச்சை அலையடிக்கும் நெல் வயல்களும், நீர் தளும்பும் குளங்களுமாக இப்பொழுதும் ரம்மியமாக இருக்கிறது. பாரதி உலவிய இந்த இடங்களையெல்லாம் தன் ‘பாரதி’ படத்தில் இடம்பெற்ற ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே….’ என்ற பாடலில் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ஞான.ராஜசேகரன்.  

இங்குதான் ஒரு திருவாதிரை நாளில் மேலக்கடையத்து பிராமணர்கள் வழிபாடு செய்தபோது கீழக்கடையத்தைச் சேர்ந்த மற்ற சாதி மக்களும் வந்துவிட, பிராமணர்களுக்கு பொங்கல் இலையில் பரிமாறப்பட்டது. கீழ்க்கடையத்து மக்களுக்கு கையில் பிரசாதம் வழங்கப்பட்டது. பாரதி அவர்களோடு வரிசையில் நின்று பிரசாதம் வாங்கியிருக்கிறார். பிரசாதம் கொடுத்த அந்தணர் ‘ஏண்டா, பூணல் போட்ட பாப்பானா நீ, இந்தக் கீழ் சாதிக்காரங்களோடு நிற்கிறாயே’ என்று ஏச, இவர் பூணலை அறுத்து அவர் முகத்தில் வீச, ஏகக் களேபரமாகியிருக்கிறது. ‘உஜ்ஜயினி நித்ய கல்யாணி’ என்ற பாடலை வீராவேசமாகப் பாட, கீழே விழும் நிலையிலிருந்த பாரதியைப் பிடித்து அமைதிப் படுத்தியவர் அவருடைய அணுக்கத் தொண்டர் ஆறுமுகக் கம்பர்.  இதுபோலவே பத்திரகாளியம்மன் கோயிலிலும் முழுக்காப்பு நாளில் சாதி வாரியாக பிரசாதம் வழங்கப்பட்டபொழுது பாரதி பாடிய பாடல்தான் ‘உலகத்து நாயகியே எங்கள் முத்து மாரியம்மா… ‘ இந்தப் பாட்டிலே வருகிற ‘ துணி வெளுக்க மண்ணுண்டு எங்கள் முத்து மாரியம்மா.. மனம் வெளுக்க வழியில்லை..’ என்ற வரியில் வருகிற மனம் வெளுக்க வழியில்லை என்ற வரியை ‘ஓயாமல்’ பாடியதைக் கேட்டு எரிச்சலடைந்த ஒரு சாரார் பாரதியை கோயிலுக்கு வெளியே அடித்துத் தள்ளிவிட்டார்களாம். அப்போதும் காத்தவர் ஆறுமுகக்கம்பர்தான். இத்தகைய மோதல்களின் மூலமும் பிற சாதியினரிடம் நட்பு பாராட்டுவதன் மூலமும் பிராமணர்களின் ஏகோபித்த எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டார் பாரதி. சாஸ்தா என்கிற தலைமலை அய்யனைக் காண இன்றும்கூட பாரதி காலத்தில் இருந்தது போல தீப்பெட்டி முதற்கொண்டு எல்லாப் பாத்திரங்களையும் கொண்டு சென்று சமைத்துச் சாப்பிடும் வகையில்தான் இருக்கிறது. ஒரு மூன்று மைலாவது காட்டுக்குள் ஓடைகளும், பாறைகளும் கடந்து நடக்கவேண்டும். இங்கு 1919ல் நடந்த ஒரு விழாவில் ஊரோடு சென்று வழிபாடு செய்யும்போது, அனைவருக்கும் சாதி வாரியாகப் பிரசாதம் வழங்கப்பட, ஒவ்வொரு சாதி வரிசையிலும் அமர்ந்து பிரசாதம் உண்டார் பாரதி. இதைக் கண்ட கடையத்து பிராமணர்கள் கடுமையாகக் கோபமுற்றனர். பாரதி குடும்பத்தை ‘சாதிப் பிரஷ்டம்’  செய்தனர். அவர்களுக்கு நீரும், மோரும்  தரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர். குழந்தைகள் யாரும் பாரதியின் குழந்தைகளோடு விளையாட அனுமதிக்கப்படவில்லை. சில நாள்களுக்குப் பாரதிக்குச் சாப்பாடு கொடுக்கவும் தடை இருந்தது. பாரதி மூன்று நாள்கள் பட்டினி கிடக்க நேரிட்டது. பட்டினி வதை. இதைப் பார்த்த ஒரு குடியானவன் யாருக்கும் தெரியாமல் பழங்களைக் கொடுத்திருக்கிறான். யாருக்கும் தெரியாமல் நீர் எடுக்கப்போவதுபோல் குடத்தில் உணவெடுத்துச் சென்று கொடுத்திருக்கிறார் செல்லம்மா. இது வெளித்தெரிய வர, மலத்தைக் கரைத்து பாரதி வீட்டின் முன் தெளித்தார்களாம். இதை ஆசிரியரிடம் கூறியவர் தொண்ணூறு வயதான கல்யாணி ஆச்சி. இந்த உச்சகட்ட சாதிக் கொடுமையை அனுபவித்த பாரதி ஒரு பிராமணர் என்பதுதான் நகைமுரண்.

சம்பாதிக்கிற ஒரு ரூபாய் கூலியையும் முழுதாக வீட்டுக்குக் கொடுக்காமல் பாரதிக்குக் கொடுத்து உதவியவர் அணுக்கத் தொண்டர் ஆறுமுகக் கம்பர் என்கிற சாய வேட்டிக் கம்பர். விடிந்தும் விடியாத இளங்காலைப்பொழுதில் இருவரும் ஜம்பு நதிக்கருகே, தட்டப்பாறையில் அமர்ந்து பரந்த வயல் பரப்பையும் நீண்ட மலைத் தொடரையும், அடர்ந்த தென்னஞ் சோலைகளையும் கண்டு களிப்பார்கள். நீண்ட காலம் நெய்தல் நிலத்தை மட்டுமே கண்டு வந்திருந்த பாரதியை மருதமும், குறிஞ்சியும் கவர்ந்ததில் ஆச்சரியமென்ன? அந்த மோன நிலையில் பிறந்த பாடல்தான்,

‘காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலைமேல்
மேலைச் சுடர் வானை நோக்கிநின்றோம் விண்ணகத்தே
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கோடில் சுடர் விடுத்தான்’

அப்போது கையில் பேனா, பேப்பர் இல்லாததால் ஒரு மண்கட்டியை எடுத்து பாறையில் எழுதி முடித்தாராம் பாரதி. இந்த ஆறுமுகக் கம்பருக்குச் சின்னம்மை, மாடத்தி, தெய்வானை என்று மூன்று சகோதரிகள். பாடுவதிலும் ஆடுவதிலும் வல்லவர்கள். இவர்களில் சின்னம்மையை (90 வயது) ஆசிரியர் சந்தித்து பேசும்போது ” ராசா வருவாரு, இந்தப் பாட்டைப் பாடுன்னுவாரு, பாடுவோம். இந்தப் பாட்டுக்கு ஆடுன்னுவாரு, ஆடுவோம். கை கொட்டிச் சிரிப்பாரு” என்கிறார்.  

அப்போதே பாரதியிடம் உதவியாளனாக இருந்தவர் சங்கரலிங்க மூப்பனார். அவருக்கு அப்போது வயது பன்னிரெண்டுதான். சரியாக மாதம் முதல் தேதி ஆறு ரூபாய் சம்பளத்தை அந்த பையனின் தகப்பனாரிடம் கொடுத்து விடுவாராம் பாரதி. சங்கரலிங்கத்தின் சகோதரர் சுப்பையா மூப்பனார் (90 வயது) பாரதியோடு நன்கு பழகியவர். அவர் ஆசிரியரிடம் கூறுகிறார் ‘ அய்யரு எங்க வீட்டுக்கு வருவாரு.. மோர் கேட்டு வாங்கிச் சாப்பிடுவாரு. அவர் கட்டியிருக்கிற வேட்டி நாக்கில் போட்டால் ஒட்டிக்கொள்ளும். அவ்வளவு ‘பீசு’ வேட்டி. மத்த அய்யருகளைப் போலத்தான் (பஞ்சகச்சம்) கட்டியிருப்பாரு. வந்தாருன்னா ‘டே கொஞ்சம் தண்ணி கொடு’ ன்னு அதட்டலாகத்தான் கேப்பாரு.  மோர் கேட்டுக் குடிப்பாரு. இவ கொடுத்திருக்கிறா. ஒரு முறை இங்ககூட சாப்பிட்டிருக்காரு, அன்னைக்கு காணத்தொவையல். ரொம்ப நல்லாருக்குன்னு சாப்பிட்டாரு.   சங்கரலிங்கம் சம்பளத்தை எங்க அப்பா கிட்டதான் கொடுப்பாரு. ஒரு நா கருக்கல்ல வந்தாரு, ஒரே நாய்க் கொரைப்பு. ஒரு பாட்டு ஒன்னு பாடுனாரு, அத்தனையும் கப்புனு அடங்கிப் போச்சு. ஏவிளே? என்ன பாட்டு ஞாபகம் இருக்கா? (அவர் மனைவிக்குத் தெரியவில்லை)  எங்க கூட பழக்கம் வைச்சுக்கிட்டதுக்கு அய்யருங்க எங்க அப்பாவெல்லாம் சண்டை போட்டிருக்கிறாங்க. கீழ்க்கடையத்தில் ஐயருக்கு ரெண்டு ஸ்நேகித ஆள் உண்டு. சங்கரலிங்க நாடார், பொன்னையா நாடார் . அவங்க கூடலாம் சண்டை போட மாட்டாங்க. ஏன்னா அவங்கள்லாம் பணக்காரங்க. அடிக்கடி ரயில் கெடி பக்கம் போவாங்க.. ‘வெள்ளைப் பதினி’ குடிப்பாங்க. ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சுத்தான் வீட்டுக்குப் போவாரு.’ ஆசிரியர் கண்டு பேசிய பலரும் கவிஞருடைய ஒல்லியான உருவத்தையும், முறுக்கு மீசையையும், கூரிய பார்வையையும், தலைப்பாகைப் பின்தொங்கலையும் நினைவு கூறுகிறார்கள்.   

பாரதிக்கு பல தளங்களில் நண்பர்கள் இருந்தனர். வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, சோமசுந்தர பாரதி தவிர கல்லிடைக்குறிச்சி, கடையநல்லூர், ரவணசமுத்திரம், அம்பாசமுத்திரம் முதலிய இடங்களில் தேச விடுதலைக்காகப் போராடிய பலரும் அவர் நண்பர்கள். அது போகக் கடையத்தில் பாரதிக்கு கனக சபாபதிப்பிள்ளை, சிவ மாணிக்கம்பிள்ளை, நாராயணப்  பிள்ளை என்று பெரும் நண்பர் குழாம் இருந்தது. இதில் கனக சபாபதிப்பிள்ளை பாரதி கடையம் நீங்கி சென்னை கிளம்பியவுடன் பைத்தியம்  பிடித்தாற்போல் ஆகிவிட்டாராம் – பித்துப்பிடித்த தம்பியை சமாதானப்படுத்த பாரதியை  கடையத்திற்கு அழைத்து வர சென்னை வருகிறார் அவர் சகோதரர் சுப்பையா பிள்ளை. மரணப் படுக்கையில் இருக்கும் பாரதி செல்லம்மாவை அழைத்து ‘ரெண்டு இலை போடு’  என்கிறார். இதைக் கேட்ட சுப்பையா பிள்ளை கதறி அழுகிறார். எப்பொழுதும் பாரதி வீட்டுக்கு வரும்போது கனகசபாபதி தன் அம்மாவிடம் சொல்லும் வார்த்தைகள் அவை – கல்யாணியம்மன் கோயில் திண்ணையில் இவர்களோடு நாட்டு நடப்புகளைப் பேசிக்கொண்டிருக்கும்போதே, பாரதி இருந்திருந்தாற்போல கல்யாணியம்மன் கோயில் குளத்தில் மூழ்கி எழுவாராம். பாரதியின் பாடல்களுக்கு சிவ மாணிக்கம் பிள்ளை மிருதங்கம் வாசிப்பதும் உண்டு. இந்த சிவமாணிக்கம் பிள்ளை பாரதியின் பிரிவு தாளாமல் தற்கொலைக்கே முயற்சித்தவர். நாராயணப் பிள்ளையிடம் பாரதிக்கு இருந்த நட்பு அவர்களை சம்பந்தியாகும் வரை கொண்டுசென்றிருக்கிறது. அவருடைய பையனுக்கு தன் பெண் சகுந்தலாவை மணம் முடிக்க பாரதிக்கு சம்மதம். ஆனால், நாராயணப் பிள்ளையின் மனைவி கோமதியம்மாள் மறுத்துவிட்டார். இன்றைய ஆணவக்கொலை நிகழ்வுகளை மனதில் கொண்டு நூறு ஆண்டுகளுக்கு முன் அந்த மனிதரின் பரந்த மன விசாலத்தை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. நாராயணப் பிள்ளையின் ரோஜாத் தோட்டத்தில் பூக்களைப் பார்த்து பரவசப்பட்ட பாரதியை, எந்த ஆதரவுமில்லாத நிலையில் குறைந்த விலையில் நூல் பிரசுரிக்க  ‘தமிழ் வளர்ப்புப் பண்ணை’ என்ற அமைப்பைக் கடையத்தில் அமைக்கப் போராடிய பாரதியை நினைவு கூர்கிறார் சகுந்தலா பாரதி ‘என் தந்தை’ என்னும் நூலில். கடையம் சத்திரம் ஆண்கள் பள்ளியில் முதன் முதலில் படித்த பெண் சகுந்தலா பாரதிதான். நாராயணப் பிள்ளைக்கு இருந்த செல்வாக்கை உபயோகப்படுத்தி, ஆசிரியருக்குப் பக்கத்திலேயே உட்கார்த்தி வைத்துப் பாடம் சொல்லப்பட்டது. 

கடையத்தைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் உள்ள சுடலைமாடன், எழுத்துக்கல் மாடன், பன்றி மாடன், பனையேறி மாடன், சீவலப்பேரி சுடலை, உய்க்காட்டுச் சுடலை, கள்ளக் கரையான், வேம்படி மாடன் என்று கணக்கில்லாத தெய்வங்கள். இங்கு நடக்கிற கொடைகளுக்கெல்லாம் தவறாமல் போய்விடுவாராம் பாரதி. அப்படி ஒரு கொடையில் நையாண்டி மேளம் ஒலிக்க பூசாரி சாமியாடுகிறார். பூசாரியின் குரலில் மாடன்  பேசுகிறார் ‘பழம் வெச்சான், வெத்தலை வெச்சான், பாக்கு வெச்சான், ஒண்ணு வைக்கல, சுண்ணாம்பு வைக்க மறந்து போனான்’ பக்கத்திலிருந்த பாரதி அதே குரலில் ‘சாமி நமக்கு நிலம் வெச்சான், பலம் வெச்சான், செல்வம் வெச்சான், ஒண்ணே ஒண்ணு வெக்கல, மூளை வைக்க மறந்து போனான்’ என்றவுடன் கேட்டவர்களெல்லாம் சிரித்தார்கள் என்கிறார் சிவமாணிக்கம் பிள்ளை. இதே கருத்து

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகள் பல்
ஆயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனில் கேளீரோ
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் ஏதன்
ஊடு நின்றோங்கு அறிவொன்றே
தெய்வமென்று ஓதி அறியீரோ

என்ற அவர் கவிதையிலும் எதிரொலிக்கிறது.

கடையத்திற்கு அருகில் உள்ள பொட்டல்புதூர், ரவணசமுத்திரம் முதலிய ஊர்களில் முஸ்லிம்கள் அதிகம். அந்த ஊர்களில் உள்ள பள்ளிவாசலில் சொற்பொழிவாற்றியிருக்கிறார் பாரதி. முஸ்லிம்களைக் கண்டால் ஹிந்தியில்தான் அதிகமும் உரையாடுவாராம். 

சிறிய வாழ்க்கையிலும் செறிவான பல வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறார் கவிஞர். ‘நவராத்திரிக்கு ஏதாவது பாட்டு எழுதித் தாங்கோ மாமா’  என்று கேட்ட பெண்கள் கோவிலுக்குப் போய்விட்டு வருவதற்குள் எழுதிக்கொடுத்த பாடல்தான் ‘ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி’. பாட்டு வாத்தியார் வராத அன்று பெண்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடல்தான் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா…’.  நாதஸ்வர மன்னன் ஆழ்வார்குறிச்சி சண்முகத்தை அடிக்கடி சந்தித்துத் தன் பாடல்களுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார். அவருக்கு யோக மார்க்கத்தின் மீதும், ஆத்ம ஞானத்தின் மீதும் பாண்டிச்சேரியில் இருந்த ஈடுபாடு கடையத்திலும் தொடர்கிறது. யதுகிரி அம்மாள் ‘ பாரதி நினைவுகள்’ என்ற நூலில் கூறுகிறார். “நான் பாரதியை உற்றுப் பார்த்தேன். வெறும் எலும்புக்கூடு. சிவப்பான கண்கள். துர்பலமான உடம்பு. பார்க்கச் சகிக்கவில்லை. என் மனதில் இருப்பதைப் புரிந்து கொண்டவர்போல ‘நான் புதிய வழியில் யோக சாதகம் செய்கிறேன். அதனால் உடம்பு இளைத்திருக்கிறது’ என்றார்,” என்கிறார்.

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா யானும் வந்தேன் ஒரு சித்தர் இந்நாட்டிலே….  ‘ என்னும் பாரதி கடையதிலிருந்து திருநெல்வேலி வந்து மேலரத வீதியில் ஒரு வீட்டு மாடியில் எங்களுக்கு சாகா வரத்தினை உபதேசித்தார் என்று மூக்குக் கண்ணாடி வணிகம் செய்து வந்த ராமையா பிள்ளை கூறியதாக கூறுகிறார் அறிஞர் ஏ.வி.சுப்ரமணிய அய்யர். பாரதி இங்கிருந்து கானாடுகாத்தான் சென்றிருக்கிறார். அநேகமாக நூல் பிரசுரிப்பதற்கான நிதி கேட்கு முகமாக இருக்கலாம். ‘இத்துடன் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம் அனுப்பியுள்ளேன். சற்றே பொறுமையாகப் படித்துப் பார்க்கவும்’ என்று சண்முகம் செட்டியாருக்கு எழுதிய கடிதம் அதை உறுதி செய்கிறது. அங்கு அவரைச் சந்தித்ததை  நாமக்கல் கவிஞர் தன்னுடைய ‘என் கதை’யில் விரிவாக எழுதியிருக்கிறார். குடும்பத்தோடு சங்கரன் கோயில், பாபநாசம், திருவனந்தபுரம் போய் வந்திருக்கிறார். செல்லம்மா தன்னுடைய சங்கரன்கோயில் யாத்திரையை கட்டுரையாக வடித்திருக்கிறார். எதிர்நீச்சலே வாழ்க்கை. கஷ்டங்களே தினப்பாடு. ஆனாலும் கவி மனதிற்கு ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய், இறைவா …’ என்றுதான் பாடத் தோன்றுகிறது. கடைசியாக, இத்தனை இடர்பாடுகளுக்குப் பின் 1920 டிசம்பர் மாதம் தன்னுடைய இரண்டு வருட கடைய வாழ்வை முடித்துக்கொண்டு  சென்னைக்கு  இடம் பெயர்கிறார்  கவிஞர்.  அதற்கடுத்த வருடமே உலகமும் நீத்தார் அந்த சாகாவரம் பெற்ற கவி. அந்த உலகக் குடிமகன் உயிர் நீத்தபோது வயது முப்பத்தி ஒன்பதுகூட முடியவில்லை.

நன்றி - சொல்வனம் | இதழ் 277 |28 ஆகஸ்ட் 2022
பாரதியின் கடைய வாழ்வு
கிருஷ்ணன் சங்கரன்

#பாரதி #bharathi


Sunday, December 8, 2024

எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் தன்மை வேண்டும்.

கடினமான உணர்வுகள், கவலைகள் மற்றும் பிரச்சனைகள்; இவைகள் தாமே உங்களை விடுவிக்கும் -  சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி அடைவதற்கான ஆசை மூலம் நீங்கள் அவற்றிலிருந்து தப்பிக்க முயற்சிக்காமல் இருந்தால். 


சுதந்திரமும் மகிழ்ச்சியும் வேண்டும் என்று சொல்கிறீர்கள் -  ஏனென்றால் கடினமான உணர்வுகளையும் துன்பங்களையும் பொறுத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது. எனவே நீங்கள் அவற்றிடமிருந்து தப்பி ஓடுகிறீர்கள்.




அவை ஏன் இருக்கிறது என்று உங்களுக்கு புரியவில்லை; உங்களுக்கு ஏன் கவலைகள் இருக்கின்றன, உங்களுக்கு ஏன் பிரச்சனைகள், கடினமான உணர்வுகள், வலி, துன்பம், அவ்வப்போது மகிழ்ச்சி இருக்கிறது என்று புரியவில்லை.


உங்களுக்குப் புரியாததால், எளிதான வழியை, குறுக்கு வழியை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள்.


நான் சொல்கிறேன், உங்களுக்கு குறுக்கு வழியைக் காட்டும் மனிதனைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். 


நீங்கள் தப்பிக்க முயற்சிப்பதை நிறுத்தும் தருணத்தில் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். 


விளக்கங்களில் சிக்கிக்கொள்ளாத பொழுது உங்களால் புரிந்து கொள்வதைத்தவிர வேறு மார்க்கமில்லை. 


எல்லா விளக்கங்களும் முடிவுக்கு வந்துவிட்டால் - ஏனென்றால், அவைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை - உண்மை மட்டுமே இருக்கிறது.


உங்களுக்குள் மோதலை உருவாக்கும் விஷயத்தை நீங்கள் முழுமையாக எதிர்கொள்ளும்போது, ​​அதுவே உங்களை விடுவிக்கும். இன்றைய எனது எண்ணம் அநேகருக்கு வியப்பை விளைவிக்கலாம் இருந்தாலும் என்னை பொறுத்த மட்டில் நான் சத்தியத்திற்கு சாட்சியம் சொல்ல வேண்டும் என்கிற சங்கடத்திற்கு எப்பொழுதும் ஆட்பட்டே வந்திருக்கிறேன் ஆகவே உண்மைகளை சில வேளைகளில் சொல்லாமல் இருந்தது உண்டே தவிர பொய் புகன்றேன் என்று ஒரு பொழுதும் என் மனம் எனக்கு சொன்னதில்லை. நியான் விளக்குகளை போட இயலாமல் இருந்திருக்கலாம் என்றாலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது அவசியமானது என்பது எனது வாழ்க்கை வழங்குகின்ற நியாயமான செய்தி ஆகும் இளைஞர்களே பறந்து போங்கள் சிறகுகளால் மேகங்களை கிழித்துக்கொண்டு கிழக்கு நோக்கி பறந்து செல்லுங்கள் பறக்கிற நீங்கள் கால்கள் மட்டும் களவாடப்படாமல் கவனமாக இருங்கள் என்று அடிக்கடி எப்போதும் சொல்லி வருகிறேன் சிறகுகள் என்பவைகள் நம்பிக்கைகள் கால்கள் என்பவைகள் கடினமான உழைப்பு இந்த உற்சாக ஊசியை போடுகிற போதெல்லாம் பலரிடத்திலும் அது உடனே வேலை செய்ய ஆரம்பித்து விடுவதை நான் உடனிருந்து மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு வந்திருக்கிறேன்…


வாழ்வில் நிறைவு என்ற ஒன்று கிடையாது நிறைவடைந்த மனங்கள் மட்டுமே உண்டு. வாழ்வில் தேக்க நிலை என்ற ஒன்று கிடையாது தேக்கமடைந்த மக்கள் மட்டுமே உண்டு.

வாழ்க்கை என்பது வேலியில்லாத் திறந்த வெளி, வேண்டியமட்டும் அதில் நிரப்பிக் கொள்ளுங்கள்.

உங்கள் இதயத்தால் எவ்வளவு உருவாக்க முடியுமோ, மனத்தால் எவ்வளவு நம்ப முடியுமோ, மனப்போக்கால் எவ்வளவு விசாலமாக்க முடியுமோ, அந்த அளவிற்கு அதில் இடமிருக்கின்றது!


கடின உழைப்பு வாழ்க்கை என்ற வாகனத்தை  வெற்றிக்கான பாதையை இயக்குகிறது, ஆனால் அதற்கு தன்னம்பிக்கையின் எரிபொருள் இல்லாமல் பயணம் சிறக்க முடியாது !!!


மறக்க முடியாதவர்களை மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாதவர்களை மறந்து விடுங்கள்.


எப்படி முடியும்  என்பதற்கும், ஏன் முடியாது  என்பதற்கும் உள்ள தூரமே துணிச்சல்.


எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சல் உங்களுக்கு இருந்தால், எதிர்வரும் பிரச்சினைகள் தூசுகளாகப் பறந்து விடும்.


எதுவும் நிரந்தரம் இல்லாத இந்த உலகில் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். எது போனாலும் விட்டு விட்டு நகர்ந்து செல்லுங்கள்.


சவால்களும் தடைகளும் பல வந்தாலும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே உறுதியாய் இருங்கள்.


எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் தன்மை இருந்தால் மட்டுமே தடைகளை எதிர்கொண்டு

வெற்றி பெற முடியும்.


போதும் என்பவனுக்கு போதனையும் தேவையில்லை.போதாது என்பவனுக்கு புதையலும் போதவில்லை. இல்லை என்பதை தேடி இருப்பதைத் தொலைப்பது ஏனோ.


உப்பிற்கும் நட்பிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உப்பு உணவை சுவையாக்கும். நட்பு வாழ்க்கையை சுவையாக்கும்.


திருத்திக் கொள்ளவோ திருந்திக் கொள்ளவோ இங்கு யாரும் விடைத்தாளோ வினாத்தாளோ இல்லை பிடித்ததை செய் பின் விளைவுகளை உன்னால் எதிர்கொள்ள முடிந்தால்.


உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை. ஆனால் அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.


இன்றைய எனது எண்ணம் அநேகருக்கு வியப்பை விளைவிக்கலாம் இருந்தாலும் என்னை பொறுத்த மட்டில் நான் சத்தியத்திற்கு சாட்சியம் சொல்ல வேண்டும் என்கிற சங்கடத்திற்கு எப்பொழுதும் ஆட்பட்டே வந்திருக்கிறேன் ஆகவே உண்மைகளை சில வேளைகளில் சொல்லாமல் இருந்தது உண்டே தவிர பொய் புகன்றேன் என்று ஒரு பொழுதும் என் மனம் எனக்கு சொன்னதில்லை. நியான் விளக்குகளை போட இயலாமல் இருந்திருக்கலாம் என்றாலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது அவசியமானது என்பது எனது வாழ்க்கை வழங்குகின்ற நியாயமான செய்தி ஆகும் இளைஞர்களே பறந்து போங்கள் சிறகுகளால் மேகங்களை கிழித்துக்கொண்டு கிழக்கு நோக்கி பறந்து செல்லுங்கள் பறக்கிற நீங்கள் கால்கள் மட்டும் களவாடப்படாமல் கவனமாக இருங்கள் என்று அடிக்கடி எப்போதும் சொல்லி வருகிறேன் சிறகுகள் என்பவைகள் நம்பிக்கைகள் கால்கள் என்பவைகள் கடினமான உழைப்பு இந்த உற்சாக ஊசியை போடுகிற போதெல்லாம் பலரிடத்திலும் அது உடனே வேலை செய்ய ஆரம்பித்து விடுவதை நான் உடனிருந்து மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டு வந்திருக்கிறேன்….





Sunday, December 1, 2024

திருமணம் உளவியல் : இந்த வாக்குகள் மிகவும் ஆழமானவை; மனதின் வேர் வரை செல்பவை. சொல்லும் பல விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால் அவற்றைப் புரிந்துகொள்ள அதிக புத்திசாலித்தனம் வேண்டும்

திருமணம் உளவியல் : இந்த வாக்குகள் மிகவும் ஆழமானவை; மனதின் வேர் வரை செல்பவை. சொல்லும் பல விஷயங்கள் நடைமுறைக்கு ஒத்துவராது. அதனால் அவற்றைப் புரிந்துகொள்ள அதிக புத்திசாலித்தனம் வேண்டும்  
இன்று விருப்பமுற்ற திருமணங்கள, மணவிலக்குகள்,
ஒப்பந்த கால சேர்ந்து வாழ்தல், Companionship என பல வடிவங்கள் ஆகி நிம்மதி அற்ற வாழ்க்கைகள்….

திருமணம் என்பது ஒரு நல்ல அமைப்பு முறை. சிலருக்கு சரியாக அமைவதில்லை, அல்லது அமைத்துக்கொள்ளத் தெரிவதில்லை. சிலருக்கு திருமணம் என்றால் பயம், தைரியமின்மை, மற்றும் நிர்வாகத் திறனற்ற தன்மை .  இன்னும் கொஞ்ச பேருக்கு புரியாத்தன்மை. திருமண அமைப்பை திறன்பட நடத்தினால் கிடைப்பது பாதுகாப்புணர்வு, துணை, நட்பு, காதல், காமம், பிள்ளைகள் என ஏராளம். இது புரிந்தும் புரியாத மாதிரி சில விஷக்கிருமிகள் இந்த அமைப்பை உடைப்பதையே வேலையாக செய்கின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக. இவர்களிடம் எழுதும் / பேசும் ஆற்றல் நன்றாக உள்ளது. அவற்றை கொண்டு பலரை Influence செய்ய முயல்கின்றனர். சில வெற்றிகளையும் பெருகின்றனர். கல்யாணம் ஆனவர்களும் ஆகாதவர்களும் இவர்களை தவிர்த்தல் நலம்.







ஒரு பெண், ஆணை விரும்புவதால் உடலுறவு கொள்கிறாள்.

ஒரு ஆண் உடலுறவு கொள்ள விரும்புவதால், உடலுறவு கொள்கிறான்.

வித்தியாசம் தெரிகிறதா?

இங்கு பெரும்பாலும், உடலுறவு என்பது ஒரு ஆணுக்கு உடல் சார்ந்த விஷயம்.
ஆனால் ஒரு பெண்ணுக்கு உடலுறவு என்பது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சம்பந்தப்பட்ட விஷயம்.

காதல் காரணமாக ஒரு பெண் உடலுறவு கொள்ள சம்மதிக்கிறாள். ஆனால் காதல் இல்லாமல், உடல் தேவை காரணமாக மட்டுமே ஒரு ஆணால் உடலுறவு கொள்ள முடியும்.

ஒரு பெண் உங்களுடன் உடலுறவு கொள்வதற்கு முன், அவள் உங்கள் மீது மன ரீதியான உணர்வுகளை கொண்டிருக்க வேண்டும். அவள் ஆணுடன், அந்த உணர்ச்சி ரீதியான பற்றுதலை கொண்டிருக்க வேண்டும்.

ஒரு பெண்ணின் அந்த பிழை கூட அன்பின் பரிமாணம் கொண்டதாக இருக்கும்.

ஒரு பெண் தான் காதலிக்காத ஆணுடன் உடலுறவு கொள்வதை நீங்கள் காண்பது அரிது. அவள் விபச்சாரியாக இருந்தால் தவிர.

ஆனால் ஒரு ஆணுக்கு, இது தலைகீழாக இருக்கலாம். ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது சிறிதும் அன்பு இல்லாமல் இருக்கலாம், ஆனாலும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளக்கூடும்.

இதனாலேயே ஒரு ஆண் விபச்சாரியை உடலுறவு கொள்வதற்காக தேவைக்கு தேடலாம். ஆண் தனது பாலியல் ஆசையை நிறைவேற்றும் முன் விபச்சாரியை காதலிக்க வேண்டிய அவசியமில்லை.

ஒரு ஆண் தனது பாலியல் ஆசைகளுக்கு தீனி போட ஒரு பெண்ணாக, உங்களைப் பயன்படுத்தலாம். அவர் உங்களுக்கு தேவையான பணம் கூட கொடுக்க முடியும். அவர் உங்களை வெளியே அழைத்துச் செல்ல முடியும். இதெற்கெல்லாம் காரணம் அவர் உடலுறவை விரும்புகிறார், உங்களை அல்ல!

ஒரு ஆண் உங்களை உண்மையாக நேசிக்கிறானா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். சற்று தள்ளி நின்று கவனியுங்கள்.

நீங்கள் அவருக்கு செக்ஸ் கொடுக்காததால் அவர் உங்களை விட்டு வெளியேறினால், அவர் உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் கொடுக்கும் செக்ஸ்-ஐ மட்டுமே நேசிக்கிறார்!

அன்புள்ள இளம் வயது பெண்களே!

- நீங்கள் வளர்ந்து திருமண வாழ்க்கையின் பயணத்திற்கு நெருங்கி வரும்போது..
- உங்களுக்கான ஒரு கணவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
- ஆனால் உங்கள் குழந்தைகள் தங்கள் தந்தையை தேர்ந்தெடுக்க முடியாது
- அவர்களுக்கான தந்தையைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​தயவு செய்து, ஒரு தந்தையாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசிரியராக மற்றும் ஒரு வழிகாட்டியாக இருக்க தகுதியான ஒரு ஆணைத் தேர்ந்தெடுங்கள்.

பெண்களுக்கான கைவிலங்குகளில் மிகவும் மென்மையானது இந்த திருமண முக்காடு, எனவே ஆழ்ந்து சிந்தித்து, சிறைத் வாழ்க்கையைத் தவிர்க்க, உங்கள் இல்லத் துணையை கவனமாகத் தேர்ந்தெடுத்து, புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்.

 
கணவன் மனைவி கீழ் கண்ட முறைப்படடி வாழ்ந்துவந்தால் வீடு நன்றாக இருக்கும்

1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர்.
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? அதனால் #கணவன்& #மனைவி உறவில் ஏற்படும் தீய விளைவுகள்...

திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.

1. நெருக்கம் குறைகிறது

கணவன் மனைவி இருவருக்கும் கொஞ்ச நேரம் ரிலாக்ஸாக பேச மற்றும் காதலிக்க கிடைக்கும் நேரமே படுக்கை அறை நேரம் தான். இந்த நேரத்தை உறவை வழுப்படுத்த பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். இங்கு இருவேறு துருவங்கள் போல பிரிந்து படுப்பது கணவன் மனைவி உறவுக்கு நல்லதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

2. எளிதில் போர் அடித்து விடும் 

படுக்கை அறையில் இருவரும் நெருக்கமின்றி படுத்து உறங்கவில்லை என்றால் உங்களது உறவு எளிதில் போரடித்து விடும். உங்கள் மனைவி உங்களை தொடும் போது கூட உங்களுக்கு பெரிதாக எந்த உணர்ச்சியும் வராது. 

3. உடலுறவில் நாட்டமின்மை 

நீங்கள் தனித்தனியாக படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால், நாளடைவில் உங்களுக்கு உடலுறவில் கூட பெரிதாக நாட்டமில்லாமல் போகும். “Sex is a beautiful 
thing, and it should be 
celebrated, not shamed.”

― Fiona Zedde

4. வேறு ஒருவர் மீது காதல் 

நீங்கள் எப்போதும் நெருக்கமில்லாமல் இருந்தால், நீங்கள் படிப்படியாக வேறு ஒருவர் மீது காதல்வயப்பட வாய்ப்புகள் அதிகமாகும். மேலும் உங்கள் மனைவியுடன் படுத்து உறங்குவது உங்களுக்கு யாரோ ஒரு தெரியாத நபருடன் படுத்து உறங்குவது போன்ற அனுபவத்தை தரும். அவர் மீது நாட்டமில்லாமல் போகும். 

5. சண்டைகள் 

உடலுறவு மற்றும் காதல் தீண்டல்கள் உறவில் இல்லாமல் போகும் போது அடிக்கடி சண்டை கணவன் மனைவிக்குள் சண்டை வரும். 

6. வெறுப்பு 

உங்களது கவனம் வேறு ஒரு நபர் மீது திசை திரும்பிவிட்டால், உங்களது துணையை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.
ஆகவே நண்பர்களே

துணையை அணைத்து துயரம் தவிர்ப்போம்..


#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...