*தமிழ் கூறும் நல்லுலகில் நாம்
ஸ்ரீராமனை
கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்* (2)
————————————
“இனையது ஆதலின் எக்குலத்து யாவருக்கும் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனுநீதியான்”.
இது கம்பராமாயணத்தில் வரும் ஒரு மானுடவியல் வாழ்வின் தத்துவப் பகுதி.
பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்பதற்கு இணங்க இந்தக் கண்ணி கம்பராமாயணத்தில் ஒரு முக்கியமான இடத்தை குறிப்பிட்டு நிற்கிறது.
தமிழின் ஈராயிரம் ஆண்டு காலப் பழமையான தமிழ் மொழியில் கம்பன் வடமொழி ராமாயணத்தைத் தழுவி எழுதிய போது ராமனை அந்தச் சக்கரவர்த்தி திருமகனை இந்திய அரசியல் சார்ந்த உன்னத தலைவனாக தன் முழு கவித்திறனைப் பயன்படுத்தி அவரது சாகசப் பாவினமான ஆசிரியப்பாவில் பல்வேறு வகையாக விதந்து ஓதுகிறார்.
இந்த வகையில் எல்லோருக்கும் முன்பாக இந்தியாவின் ஒருமைப்பாட்டை கம்பன் ராமனின் கீழ் ஒரு இறையாண்மை தத்துவமாக நிறுவுகிறார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான்.
என்ற வள்ளுவரின் வாக்கில் இருந்து அல்லாமல் கம்பன் மேற்சொன்ன கண்ணியில் மனிதர்களில் பண்பு தான் முக்கியம் . அத்தகைய உன்னதப் பண்புமிக்கவன் ராமன்.
அவன் தன் செயல்களாலே அறியப்பட்டான்.
என்று இந்த இடத்தில் ராமனை ஒரு அரசியல் அறவாதியாக முன்வைத்து தனது கவி ஆற்றலால் செயத்தக்கச் செயலைச் செய்து கீழ்மையான பண்புகளை தன்னிலிருந்து தவிர்த்தபடி இந்திய அழகியல் கோட்பாட்டில் உன்னதமடைந்த குறியீட்டு உதாரணம் ராமன் என்பதை அழகான தமிழில் கம்பரை போல யாரும் இதுவரை எழுதவே இல்லை.
ராமாயணம் வால்மீகி வழியாக சமஸ்கிருதத்திலிருந்து வந்ததை விட கம்பன் அவரை தமிழில் கொண்டாடியது உலகத்தில் எந்த ஒரு காவியம் மரபிற்கும் இணையானது . ஹோமரின் ஒடிசி இன்னும் பல கிரேக்க க்காவியங்களுக்கு இணையாக ராமன் நிறுத்தப்படுகிறான்.
அவனை ஏழை பங்காளன் என்று கம்பர் வர்ணிக்கிறார்.
ஒரு பின்நவீனத்துவ நோக்கிலோ இல்லை ஒரு பேரரசுகள் உருவாகும் காலத்தில் உண்டான அமைப்பு வாதங்களிலோ ஒரு அருமையான உணர்வு சார்ந்த மக்கள் மீது பண்புறுதியான மனிதனாய் அரசு அறம்முரைத்த ராமன் என்பது தான் இந்திய கீழைத் தேய தத்துவத்தில் கம்பரால் நிலைநிறுத்தப்படுகிறது.
ராம ராஜ்ஜியம் என்பது இடதுசாரிகளோ அனைத்து தத்துவாதிகளோ சொல்வது போல ஒரு உட்யோப்பியன் நிர்வாக முறை தான். அது இந்தியாவில் ராமன் என்கிற தத்துவத்தில் தான் முன்னும் பின்னுமாக நிலைபெறுகிறது.
வெறும் வாய்ச்சவடால் காரர்களுக்கு கம்பனிடமிருந்து எந்த வாய்ப்பும் இல்லை. அப்படித்தான் இந்திய தேசியக் கவி பாரதி தமிழ் மொழியை போல் இனிதானதை வேறு எங்கினும் காணேன் என்று பாடியதோடு கம்பரை போல் வள்ளுவனைப் போல் இளங்கோவை போல் நான் யாரையும் பூமி தனில் கண்டதில்லை என்றும் தன் இளம் வயதில் பாடிப் போனான். கம்பரும் தமிழும் என்பது இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் குரல் அதிலிருந்து கம்பரையும் தமிழையும் பிரிக்க முடியாது. இங்கு சுயநல நோக்கத்தோடு தன் குடும்பத்தை அரசு அதிகாரங்களின் வழியே காப்பாற்றுகிற கழிசடைகளுக்கு அந்த மேன்மை எல்லாம் புரியாது.
அந்த வகையில் கம்பன் மேன்மைக்கும் கீழ்மைக்கும் இடையே அற்புத குணங்களைக் கொண்ட ராமனைப் பாடிய பெருங்கவி! வாழ்க அவனது புகழ்!!
(படம் -கம்பராமாயணம், உவேசா பதிப்பு.)
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
21-1-2024.ப
No comments:
Post a Comment