Thursday, January 11, 2024

#*நேற்றைய ஸ்டாலின் இன்றைய ஸ்டாலின்*….⁉️

#*நேற்றைய ஸ்டாலின் இன்றைய ஸ்டாலின்*….⁉️ 
————————————
எஸ்டிபிஐ கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசுகிறார் என்றதும் உடனே அன்றே முதல்வர் ஸ்டாலின் மத சிறுபான்மையினர் சலுகைகளை அறிவிக்கிறார்

நாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருப்பது போல திராவிட முன்னேற்ற கழகம் பார்ப்பனருக்கு எதிராக இயக்கம் கட்டி காலம் முழுவதும் அவர்களை எதிர்த்து அரசியல் செய்து வருகிறது என்று! ஆனால் ஆடிட்டர், டாக்டர், வழக்கறிஞர் என பிராமணர்களின ஆலோசனைகள் சொந்த விடயங்களுக்கு இவர்கள் பெறுவது வாடிக்கை.

செந்தில் பாலாஜி வழக்கிற்காக திமுக அந்த காலத்தில் கடும் விமர்சனம் செய்த
சி பி. இராமசாமி அய்யரின் பேரன் அரிமா சுந்தரம் ஆஜர் ஆகவேண்டிய நிலைமை. பார்ப்பன எதிர்ப்பு என்பதெல்லாம் பம்மாத்து தானே?

ஏன் இதுவரை இருந்த கபில்சிபில் என்னவானார்! அவர் எங்கே போனார்? திமுகவின் பல வழக்கறிஞர்களுக்கு திமுகவால்  பலன்கள் ! சில வழக்கறிஞர்கள் திமுகவை வைத்து பதவிகள். இவர்களில் பலரை 10ஆண்டுகளுக்கு முன் திமுகவில் பார்த்ததும் இல்லை. ஸ்டாலின் குடும்ப மூலமாக உள்ளே வந்து எம்பிகள் ஆகி இருக்கின்றனர். இவர்களால் திமுக விற்க்கு பயன் எதுவும் இல்லாமல்  இவர்கள் வளர்ச்சி பெறுகின்றனர். இவர்களுக்கும் கலைஞருக்கும் பெரிய தொடர்பும் இல்லை.அட்டையை போல பயன்படுத்திக் கொண்டு வெள்ளை சட்டை பேன்டசை போட்டு பம்மாத்து காட்டி திரிகிறார்கள்.  இதையும் ஸ்டாலின் நம்புகிறார்.என்னைப் போல திமுக கலைஞர் அவர்களின குடும்ப பல்வேறு வழக்குகளை முடித்துக் கொடுத்தவர்களுக்கெல்லாம் காலிக் கோப்பையை வைததிருக்கிறார்கள்.

எடப்பாடி ஆட்சியில் தொடங்கப்பட்ட எட்டு வழி சாலை வேண்டாம் ஐயோ பாவம் விவசாயிகள் என்று கூச்சலிட்டார்கள். இன்று நாங்கள் அப்படி சொல்ல வில்லை என  ஏமாற்றுதனம்.

இன்று அதானி அம்பானி முதலீட்டுக்காக எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு;  அவர்களுக்கு சிவப்பு கம்பளம் சிறப்பு.
அன்று வேறு நாக்கு இன்று வேறு நாக்கு என்ற இவர்கள் நிலை….

அந்நிய முதலீட்டை அஞ்சு லட்சம் கோடிக்கு தருவித்திருக்கிறோம் என்றும் பெருமை பேசுகிறார்கள். 

அன்று ஒன்றிய அரசு, ஒன்றிய பிரதமர் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இன்று இந்திய, பாரத பிரதமர் என்கிறார். எல்லாம் பயம், பயம்…. அவ்வளதான் ஸ்டாலின் வகையறா….⁉️

இந்தி தெரியது போடா குமரி முதல் சென்னை வரை  இவர்கள் கூப்பாடு இருக்கும். டெல்லி சென்றால் கப்சிப் அமைதி… இந்தியா கூட்டணி இந்த கூப்பாடு இல்லமால் பெரு வீரியமற்ற மௌனம் மொழி… வேடிக்கை.

இப்படி பல பல உண்டு. இன்றைய ஸ்டாலின் குடும்ப திமுக என்ற கட்சி…

கொள்கைக்கு ஒரு கூப்பாடு. கூட்டுக்கு என்றால் பல ஏற்பாடு!
எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியாக இருக்கும் போது முனைந்தால் முட்டாள்தனம் !தாங்கள் முனைந்தால் அறிவாளித்தனம்!

இந்த இரட்டை வேடம் இந்த இருமுறை பேச்சு இந்த சந்தர்ப்பவாதங்கள் எல்லாம் அரசியல் வாய்ப்புக்கிடைத்த அதிகாரத்தினால் மட்டுமே சாத்தியமாகும். மற்றபடி இத்தகைய போக்கினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அப்போதெல்லாம் இவர்கள் பொறுப்பேற்பார்களா? நடப்பு உண்மைகளோ மிகவும் நரித்தனமாக இருக்கிறது.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
11-1-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...