Tuesday, January 23, 2024

*தமிழக உரிமைகளை மறுக்கும் பினராயி விஜயன் மாநிலங்களுக்கு அதிக அதிகார உரிமைகள் கேட்டு டில்லியில் போராட ஸ்டாலினை அழைக்கிறார்*….⁉️

#*தமிழக உரிமைகளை மறுக்கும் பினராயி விஜயன் மாநிலங்களுக்கு அதிக அதிகார உரிமைகள் கேட்டு டில்லியில் போராட ஸ்டாலினை அழைக்கிறார்*….⁉️
'*கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு'மக்களை ஏமாற்றும் வித்தை*❓
————————————
சென்ற வாரம் மாநிலங்களுக்கு அதிக அதிகார உரிமைகள் கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் டெல்லியில் போராடப் போவது குறித்த எனது பதிவைப் பலரும் படித்திருக்கலாம்.

இப்போது நானும் கூட்டு நரியும் கூட்டு என்பது மாதிரி வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில்  மாநிலங்களுக்கான உரிமை கோரிப் போராடத் தன்னுடன் இணையுமாறு தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலினை அழைத்துள்ளார்.

அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் போவது அல்லது போகாது இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

அதற்கு முன்பாக கேரளா முதல்வரை தமிழ்நாட்டின் ஏகோபித்த மக்கள் அனைவரும் முதலில்
அவர் தமிழகத்துக்கு தர மறுக்கும் நெய்யாறு,முல்லைப் பெரியாறு, பிஏபி என பத்துக்கு மேலான நீர் ஆதாரங்களின் தண்ணீரை வீணாக கடலில் கலக்கச் செய்யும் அவரது எதோச்சைப் போக்கையும். தேனி மாவட்டம் மங்களா தேவி கண்ணகி கோவில் சிக்கல், அட்டப்பாடி பிரச்சனை ,கழிவுகள் தீய குப்பைகள் என தமிழ்நாட்டின் எல்லைகளில் கொண்டு வந்து கொட்டி விட்டு போகும் வக்ர புத்தியையும் கேள்வி கேட்கத் தான் விரும்புகிறார்கள்.  கேரளாவிற்குத் தேவையான பால் காய்கறிகள் மணல் என தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் தந்திரமாக தருவித்துக் கொள்ளும் கெட்டிக்காரத்தனத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பாசம் வேண்டி கிடக்கிறது!  நாட்டுக்கு ஒரு முகம் கூட்டுக்கு ஒரு முகம் காட்டும் கேரள முதல்வர் புத்திசாலி தான்.

இணைந்து போராட சக சகோதரத்துவ அமைப்பாக தமிழ்நாட்டு முதல்வரை டெல்லிக்கு அழைக்கும் முன்பாக அவர் முதலில் நியாயமாக தமிழக முதல்வரை அழைத்து இந்த பிரச்சனைகளை நாம் தமிழ்நாட்டு மற்றும் கேரள மக்களின் நன்மைக்காக முதலில் பேசி தீர்த்துக் கொள்வோம் என்று சொல்லிவிட்டு அல்லவா மாநில உரிமைகள் பற்றி பேச வேண்டும்?
சொல்ல மாட்டார்!!பங்காளிக்கு எப்போதும் பழைய கணக்கு தான்!

மாநிலத்திற்கான அதிக உரிமைகள் தேவைதான்! ஆனால் தத்தம் அண்டை மாநிலங்களுக்கு கூட எதையும் தர இயலாத இவர்கள் எப்படி உரிமைகள் கேட்டு காவடி எடுக்கிறார்கள்.!? என்பதுதான் புரியவில்லை.! இதற்கு ஸ்டாலின் பதில் என்ன❓…

#தமிழக_கேரளா_சிக்கல்கள்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-1-2024,

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...