Monday, January 22, 2024

*தமிழ் கூறும் நல்லுலகில் நாம் ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்*(4) #*இந்திய வேற்றுமையில்ஒற்றுமை*: *#சங்க இலக்கியத்தில் இராமன்!*

*தமிழ் கூறும் நல்லுலகில் நாம் 
ஸ்ரீராமனை கம்பராமாயணத்தோடுகொண்டாடுவோம்*(4) 
#*இந்திய 
வேற்றுமையில்ஒற்றுமை*:

*#சங்க இலக்கியத்தில்
இராமன்!*
————————————
சங்கப் புலவர்கள் இராமனையும் இராமயணத்தையும் கொண்டாடி வந்துள்ளதை சங்க இலக்கியத்தில் பார்க்கிறோம்.



"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை 
வலித்தகை யரக்கண் வௌவிய ஞான்றை 
நிலஞ்சேர் மதரணி கொண்ட குரங்கின் 
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு 
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே"

(புறம்-278)

ஊன்பொதி பசுங்குடையார் எனும் தமிழ் புலவர் இராமாயணம் பற்றி கூறும் செய்தி இது. ஆற்றல் மிகுந்த இராமன் சீதையுடன் காட்டிற்கு சென்றான். அங்கு வலிமை மிகுந்த அரக்கன் சீதையை கவர்ந்து சென்றான். செல்லும் வழியில் தன் அணிகலன்களை கீழே  போட்டுகொண்டே செல்கிறாள் சீதை. காட்டில் குரங்குகள் அந்த அணிகலன்களை மாற்றி மாற்றி அணிந்து கொண்ட காட்சியை இந்த புறநானூற்று பாடல் விளக்குகிறது. 

"வெல்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே"

(அகம். 70)

கடுவன் மள்ளனார் எனும் தமிழ் புலவர் மற்றுமொரு இராமாயண செய்தியை கூறுகிறார். இலங்கை படையெடுப்பின் போது இராமன் தொன்முது கோடியில் ஆலமர நிழலில் தங்கி இருந்தார். அப்போது பறவைகள் இடைவிடாது ஆரவாரம் செய்து கொண்டிருந்தது. படையெடுப்பு குறித்து பேச பறவைகளின் ஒலி தடங்களாக இருந்தது. இராமன் தன் கையை உயர்த்தி காட்டினார். உடனே பறவைகள் அமைதியானது என்கிற காட்சி அகநானூறு பாடல் குறிப்பிடுகிறது.

இதுபோல சிலப்பதிகாரம், திருமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பற்றிய செய்திகள் குறிப்பிடபடுகிறது. ஆனால் சங்க இலக்கிய இராமாயண செய்திகள் எதுவும் வால்மீகி இராமாயணத்திலோ இன்னப்பிற இராமாயணத்திலோ இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. வால்மீகி இராமாயணத்துக்கு முந்தைய நூலும் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்விற்குரியது. இராமருக்கு எதிரான போலி பிரச்சாரங்களை புறந்தள்ளி சங்க இலக்கிய புலவர்கள், இளங்கோவடிகள், நால்வர் வரை பாடிய இராமனை நாளும் வணங்கி கொண்டாடுவோம்.

#அயோத்திஇராமனுக்கும்_தமிழகத்துக்கும்_என்னதொடர்பு ? 

இந்தியாவிலேயே உத்திரபிரதேசத்தை அடுத்து இராமனுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான்.  

* இராமர் வாழ்ந்ததற்கான பிரதான அடையாளமாகக் கருதப்படும் இராமேஸ்வரம்
* இராமாயண  காலத்தில் வாழ்ந்து இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் ஒரு தமிழர் என நம்பிக்கை.
* சீதையை மீட்க இராமனும் அவரது படைகளும் நீண்ட காலம் தங்கிய இடம் தமிழகமே.  தமிழகத்தில் இருக்கிற நூற்றுகணக்கான ஊர்களின் பெயர்கள் இராமாயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டவையே.

* இராமர் வனவாசத்தில் இருந்த போது தனது தந்தைக்கு முதல் தர்ப்பணம் கொடுத்த இடம் திலதர்ப்பணபுரி.

* இராமனுக்காக உயிரை தியாகம் செய்த ஜடாயூ பறவை  இறந்து புதைக்கப்பட்ட இடம் வைதீஸ்வரன் கோவில்.

* இராமனின் குழந்தைகள் இலவனும், குஷனும் தங்கி வளர்ந்த இடம் தமிழகம்.

* சோழர்களின் முன்னோன் இராமன் என்பதற்கு பல கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன, அதன் காரணமாகவே தமிழில் கம்பர், ஒட்டக்கூத்தர் என பல புலவர்களால் போட்டி வைத்து  இராமாயணம் பிரமாண்டமாக எழுதப்பட்டது.

* இராமர் கோவில் வழக்கில் 93 வயதில் நீதிமன்றத்தில் போராடி வழக்கில் வெற்றியை நிலைநாட்டி,  இராமஜென்ம பூமியை மீட்ட வழக்கறிஞர் பராசரன்  ஸ்ரீரங்கத்துக்காரர்.

அன்றும் இன்றும் என்றுமே தமிழகமும் இராமனும் பிரிக்கவே  முடியாத இரண்டு இணைகள்.

#தமிழ்நாட்டில்_ராமர்கோவில்கள்

1. ராமேஸ்வரம் - கோதண்ட ராமர்
2. வடுவூர் - கோதண்ட ராமர்
3. மதுராந்தகம் - ஏரிகாத்த ராமர்
4. கும்பகோணம் - ராமசாமி (பட்டாபிஷேகராமர்)
5. திருப்புல்லாணி - தர்பசயன ராமர்
6. திருவள்ளூர் - வீரராகவப் பெருமாள்
7. தில்லைவிளாகம் - வீர கோதண்டராமர்
8. சத்துவாச்சேரி, வேலூர் - ஸ்ரீ ராமர்
9. முடிகொண்டான் - கோதண்ட ராமர்
10. திருபுள்ளம்பூதங்குடி - ஸ்ரீ வல்வில் ராமர்
11. திருவெள்ளியங்குடி - ஸ்ரீ கோலவில்லி ராமர்
12. திருப்புட்குழி - ஸ்ரீ விஜயராகவப் பெருமாள்
13. பருத்தியூர் - கோதண்டராமர்
14. அதம்பார் - கோதண்டராமர்
15. விருதுநகர் - ஸ்ரீ ராமர்
16. சிவகாசி - கல்யாணராமர்
17. வடலூர் - ராமர்
18. நெடுங்குணம் - ராமச்சந்திரப் பெருமாள்
19. ரகுநாதசமுத்திரம், திருவண்ணாமலை மாவட்டம்  - ஸ்ரீ ஞான ராமர்
20.  இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம் - யாக சம்ரக்ஷண ராமர்
21. பெரிய கொழப்பலூர் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
22. படவேடு - ஸ்ரீ யோக ராமச்சந்திரன்
23. ஊனமாஞ்சேரி (வண்டலூர் அருகில்) - ஏரி காத்த ராமர்
24. அயோத்தியாபட்டினம், சேலம் - கோதண்டபாணி
25. ராம்நகர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
26. ஒண்டிப்புதூர், கோயம்பத்தூர் - ஸ்ரீ ராமர்
27. ஓசூர் - ஸ்ரீ ராமர்
28. வேங்கடம்பட்டி (நெய்வேலி அருகில்) - ஸ்ரீ ராமர்
29. பொன்பதிர்கூடம் - ஸ்ரீ சதுர்புஜ ராமர்
30. மேப்பூர் - ஸ்ரீ ராமர்
31. மாம்பலம், சென்னை - கோதண்ட ராமர்
32. நந்தம்பாக்கம், சென்னை - ஸ்ரீ கோதண்ட ராமர்
33. தரமணி, சென்னை - ஸ்ரீ ராமர்
34. நூத்தஞ்சேரி, மாடம்பாக்கம், சென்னை - கோதண்ட ராமர்
35.மதுரை பழங்காநத்தம் ராமர் கோவில்.
36. ‪கந்தர்வகோட்டையில் கண்டராதித்த சோழ மன்னன் கட்டிய 1000 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ கோதண்ட ராமர் கோவில். சோழர்கள் ராம பக்தர்கள் என்பதற்கான அடையாளம்.‬ இப்படி பல இராமன் கோவில்கள்…


வில் கிடந்தது மிதிலையின் நகரிலே
கல் கிடந்தது கானகம் தன்னிலே
நெல் கிடந்தது சடையனின் வீட்டிலே
சொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே
உயர்ந்தெழுந்தது இராமன் கதை அரோ

கம்பனைப் பற்றிய தனிப்பாடல் திரட்டு.
வில்லென்றது ! 
மிதிலையில் ஜனகனின் மகள் ஜானகியினை மணக்க ஸ்ரீராமன் வளைத்த சிவதனுசு !
கல்லென்றது !
கானகத்தில் சாபவிமோசனம் வேண்டி ஸ்ரீராமன் காலடி படக் காத்திருந்த அகலிகைக்கல் !
நெல்லென்றது !
சடையப்ப வள்ளலின் வீட்டில் ஸ்ரீராமனைப் பாடிய கம்பனுக்காக கிடந்த தானிய நெல் !
சொல்லென்றது !
ராமகாதையினை அழகுத்தமிழில் அற்புதமாய்ப் பாடிய கம்பனின் தமிழ்ச் சொற்கள் !

இத்தனையும், சேர்ந்தெழுந்ததுதான்,,,,
கம்பனின் ராமகாதை !

கம்பன் என்றொரு தமிழன் ! 
இராமகாதையினை எழுதி இருக்காவிட்டால்,,,, ?

இராமன் ! 
இராமசாமி ஆகியிருக்க மாட்டார் !

இராமனுக்காக,,
இந்த தமிழகத்திலே ஊருக்கு ஊர் பஜனை மடங்கள் இருந்தது போல,,,, 
வேறு எந்தக் கடவுளுக்கும்,,இல்லை,,, !

அதனாலேயே,,
ஸ்ரீராமன் !
ஸ்ரீராமச்சந்திரன் !
தமிழகத்தின் ,,, 
தனிப்பெருங்கடவுளாகிப் போனார். !

இது கூடத்   தெரியாமல்,,,,?

ராமன் தமிழன் இல்லை,,,
ராமனுக்கு சேர சோழ பாண்டியர் கோவில் கட்டல,,,
ராமனின் வழிபாடு தமிழர் வழிபாடு இல்ல,,,
அது நாயக்கர் வந்தேறிகள் காலத்துல தமிழ்நாட்டுல நுழைஞ்சது,,,
இப்படின்னு ஏகப்பட்ட உருட்டுகள் !

இப்படிச் சொல்லுறவங்களில் பாதிப்பேரு,,,,
அந்த நாயக்கர் கட்சி ஆளுங்க தான்,,,,
வேடிக்கையாக இருக்கிறது !
-உங்களை எல்லாம் பார்க்கையில்,,,,,-

அந்த
ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியில்,,,
ஸ்ரீராமன் மீண்டும் கோவில் கொள்கிறான் !
ஸ்ரீராமச்சந்திரனுக்கு !

Velu Pillai

#sriramajanmabhumiVimochan

(படம் -கம்பராமாயணம், சாமி சிதம்பரனார் உரை.)

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-1-2024.

.


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...