Tuesday, January 23, 2024

ஈழத்தில்,தமிழரசுக் கட்சிக்கு நண்பர் மாவை சேனாதி ராஜா பின் புதிய தலைவராக ஸ்ரீதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*

 மகிழ்ச்சி*. 
கடந்த 1949ம் ஆண்டு டிசம்பர் 18 தமிழரசுக்கட்சி தோற்றுவிக்கப் பட்டபோது "இப்போதிருக்கும் நிலைமையில் ஒரு சுதந்திரத் தமிழரசை நிறுவுவது இன்றியமையாதென்பது எமது திடமான நம்பிக்கையாகும்" என்ற முழக்கத்துடன் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்தார். 







அதன்பின்  கட்சியின் தலைவர்களாக வந்த கு.வன்னியசிங்கம், என்.இ. ராஜவரோதயம், சி.எம். ராசமாணிக்கம், இ.எம்.வி. நாகநாதன் என தொடர்ந்து ஆறாவது தலைவரான அ.அமிர்தலிங்கமும் அதையே கைக்கொண்டு நடைமுறைப்படுத்தினார்கள். 

1970களில் அ. அமிர்தலிங்கத்தின் பெருமுயற்சியால் தமிழர் கூட்டணி உருவாகி அது தமிழர் விடுதலைக் கூட்டணியாக பரிணமித்தபோதே  தமிழரசுக் கட்சி மௌனிக்கப்பட்டுவிட்டது. அந்த காலகட்டத்திலேயே, தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி அமைதி நிலையில்….. அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கக் காலத்தில் வேறு ஏதோ ஒரு யோசனையோடு, பழைய படி இன்னொரு தமிழரசுக் கட்சிக்குத்தான் இப்போது தேர்தல் நடந்து  தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 

நடந்த இந்தத் தலைமைத்துவத் தேர்தலில் சுமந்திரன் வேறு மாற்றத்தை உருவாக்கியிருப்பார். இப்போது ஸ்ரீதரன் பெற்றிருக்கும் வெற்றி ஒரு புறத்தில் ஒரு 
ஆறுதலேயாயினும், இனி எப்பேர்ப்பட்ட அரசியல் தமிழ் மக்களிடையே முன்நிலைப்படுத்தப்படும் என்ற கேள்வி உட்படமேலும் பல புதிய கேள்விகளையும் உருவாக்கிவிட்டுள்ளது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

#ksrpost
23-1-2024.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...