Saturday, January 27, 2024

#*இந்தியாவின்இரண்டாவது தலைநகரமாக சென்னைஅறிவித்தால்… டெல்லிக்கும் சண்டிகருக்கும் நடக்கக்கூடிய பிரச்சனைகள்தான்*

#*இந்தியாவின்இரண்டாவது தலைநகரமாக சென்னைஅறிவித்தால்…
டெல்லிக்கும் சண்டிகருக்கும் நடக்கக்கூடிய பிரச்சனைகள்தான்* 



————————————
சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக ஆக்க வேண்டும் என்று திமுக - இண்டி கூட்டணி கட்சி கோரிக்கை வைக்கிறது.




ஒரு வகையில் பார்த்தால் சரிதான் போலத் தோன்றும். ஆனால் இப்படி இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவித்தால் மத்திய அரசு அதை நிர்வாக ரீதியாக கையில் எடுத்து விடும் என்பது கூட தெரியாமல் அர்த்தமற்ற அபத்தமாக இக் கோரிக்கையைப்பிதற்றியிருக்கிறார்கள்.

ஏற்கனவே நடந்ததை ஒப்பிட்டு பார்த்தோமானால் டெல்லிக்கும் சண்டிகருக்கும் நடக்கக்கூடிய பிரச்சனைதான் இது.
டெல்லியில் கெஜ்ரிவாலுடைய பிரச்சினை எப்படி ஒரு யூனியன் பிரதேசத்தில் தனிமை கண்டதோ அல்லது கெஜ்ரிவால் என்னதான் உரிமைகளைக் கேட்டாலும் அது இந்திய  வரைபடத்தில் ஒரு ஒரு மாநகரமாக பொருளாதார வணிக வரவினம் சார்ந்து யூனியன் பிரதேசமாக ஆகிவிட்ட சூழ்நிலைதான் நாளைக்கு சென்னைக்கும் வரும்.இது கூடத் தெரியாமல் பேசினால் என்னவென்று சொல்வது?

பிறகு எப்படி மாநில சுயாட்சி கோரிக்கைகளை முன் வைக்கிறீர்கள்! உலகின் வளர்ச்சி பெற்ற நாடுகள் எல்லாம் தங்கள் நகரங்களை தேசிய சொத்தாக அறிவித்திருக்கிறார்கள்!

மத்திய  நாடாளுமன்றம் சென்னையை கல்கத்தாவை பாம்பேயை  பெருநகர வளர்ச்சி பட்டியயில் இணைத்து இருக்கிறது.இது கூட இந்தகட்சி
அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லையா! இத்தகைய பெருநகரங்கள் பின் காலனித் துவத்தில் உலக மயமாகிவிட்டது என்பது கூட இவர்களுக்குப் புரியவில்லை!

ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்தார்!

அதன் உள்ளடக்கத்தில் சென்னை திமுகவின் சொத்துரிமை கொண்ட பெரிய மாநகரமாக மாறிவிட்டது என்பது  மட்டுமல்ல தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லோரும் சென்னைக்கு கிளம்பி வருவது என்பது அதிக பொருள் செலவு மிக்கது அந்த வகையில் திருச்சி தான் தமிழ்நாட்டின் மையமாக இருப்பதினால் எல்லா தரப்பு மக்களும் திருச்சிக்கு வருவது சுலபமாக இருக்கும் என்று தான் அந்த முடிவை எடுத்தார்.

சென்னையில் அதிக சொத்துடைமை உள்ளவர்கள் குறிப்பாக பெரும் வணிகர்கள் நில உடமையாளர்கள் உட்பட அரசு அதிகாரிகளும் அது சாத்தியமில்லை என்று மறுத்தார்கள். 

இன்றைக்கு திமுக இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை மாற்ற வேண்டும் என்று கேட்பதன் அர்த்தம் என்ன!?

மேலும் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு வைத்து கொள்ளையடித்து தங்களைத் தாங்களே குடும்ப நலங்களுக்காக பெருக்கிக் கொள்வதற்கு தான் என்பதன்றி அதில் இருக்கும் சூட்சுமம் தான் என்ன?

சரி, இப்படிச் சொல்பவர்கள் தமிழ்நாட்டில்  அதிக மக்கள் தொகையையும் பெருகிவரும் வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு 150 கிராமங்கள் சுற்றியுள்ள மதுரையை நிர்வாக வசதிகருதி இரண்டாவது தலைநகராக அறிவிப்பார்களா?

தனக்கு தனக்கு தான் என்றால் பதக்கும் கலம் கொள்ளும் என்பார்கள்
இம்மாதிரியான வேடிக்கைகள் எல்லாம் இன்றைய உலகளாவிய மூலதனத்தில் செல்லாது சம்பாதித்தது போதாதா!

முதலில் #தமிழ்நாட்டின்இரண்டாவதுதலைநகரமாக_மதுரை அறிவித்துவிட்டு பிறகு டெல்லியை நோக்கி இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னை அறிவிக்க வேண்டும் என்று கேட்கட்டும்!

#இந்தியாவின்இரண்டாவதுதலைநகரமாக_சென்னை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
#27-1-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...