Wednesday, April 10, 2024

*சில நேரங்களில் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குழப்பம் தரும் வகையாக இருக்கின்றன*.

*சில நேரங்களில் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குழப்பம் தரும் வகையாக இருக்கின்றன*.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது முழு சொத்து விவரத்தையும் தேர்தல் கமிஷனிடம் காட்ட வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தது. அதுவே தொடர்ந்து வழக்கமாகவும் இருந்து வந்தது. ஆனால் இப்போது அதே உச்ச நீதிமன்றம்  வேட்பாளர்கள் தங்களது எல்லாச் சொத்துக்களையும் தேர்தல் கமிஷனிடம் காட்ட வேண்டியது இல்லை என்கிற வகையாகத் தீர்ப்புத் தந்திருக்கிறது.

அருணாச்சல பிரதேசத்தைச் சார்ந்த கரிக்கோ பிரி என்பவர் தொடுத்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது. அதேபோல் பொன்முடி வழக்கில் அவர் மீண்டும் பதவி ஏற்கலாம் என சொல்லி இருக்கும் உச்ச நீதிமன்றம் அதற்கு முன்பாக பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகுந்த நேர்மையுடன் இருக்க வேண்டும் ஒருவேளை அவர்கள் கீழ் கோர்ட்டு வழக்கு ஏதோன்றிலும் குற்றச்ச்சாட்டில் இருந்தால் மீண்டும்  பதவியேற்க முடியாது என்று தீர்ப்பளித்து இருந்தது எல்லோரின் ஞாபகத்திலும் இருக்கிறது. ஆனால். இப்போது அவர் பதவி ஏற்கலாம் என்றும் கூறிவிட்டது.

இப்படி முன்னுக்கு பின் முரணாக தீர்ப்புகள் வருகிற போது எது சரி எது தவறு என்கிற குழப்பம் நேர்வது இயற்கை தானே! பொதுவாழ்கையில் இருப்போருக்கு நீதிமன்றங்கள் கறாரான விதிகளை வைத்துக் கொண்டிருக்கிறதா என்கிற சந்தேகம்  ஏற்படுகிறது. இது விமர்சனம் அல்ல பொதுவான கேள்விகள் தான். போக நீதிமன்றங்கள் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கின்றன.. நியாயத்தின் பக்கம் அடிப்படையான மதிப்புகளை கொண்டதாக உச்சநீதிமன்றம் எப்போதும் சிறந்து விளங்கி வந்திருப்பதை அறிந்துள்ளோம்.. மக்களுக்கும் நீதிமன்றங்கள் தான் வழிகாட்டியாகவும் பாதுகாப்பாக இருக்கிறது. என்கிற அடிப்படையில் இப்படியான தீர்ப்புகள் வருவது அந்த நீதித்துறையில் இருப்பவன் என்கிற முறையில் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் புதிராகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.

இத்தனை குழப்பங்களையும் சந்தேகங்களையும் யார் தீர்த்துக் கொடுப்பார்கள்.

வாழ்க ஜனநாயகம்!

#உச்சநீதிமன்றம்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
10-4-2024.

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...