#*நடிகமணி
டிவிநாராயணசாமி*
*டிவிஎன்*
இப்படி பேசி கொண்டு இருப்பவர் ஒரு வகையில் எனது உறவினர்
நடிகமணி டி. வி.நாராயணசாமி தான். இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் பேசி பேசி திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார்கள். சென்னை யானைகவுனி பகுதியில் இருந்த எம்ஜிஆரை அண்ணாவுக்கு அறிமுகம் செய்தவர். திருவாரூரில் இருந்த கலைஞரை சென்னைக்கு வர இவரும் என்னோடு அரசியல் களத்தில் இருந்த எம். கே.டி. சுப்பிரமணியம் ஆவர். கோவில்பட்டி தொகுதியில் நான போட்டியிட்ட 1989, 1996 தேர்த்களில் எனக்கு ஆதரவாக பணி செய்தவர்.
ஆனால் திமுக கொள்ளை கூடாரம் ஆகி இன்று உலக பணக்காரகளில் ஒருவர் ஆகி விட்டார்கள். அத்துடன் ஒரு குடும்பமே அனைத்து வளங்களையும் கொள்ளையிட்டு நாசம் செய்து வருகிறது.
நாத்தீக வாதம் பேசிய டி. வி. நாராயணசாமி நாயுடு வாரிசுகள் எங்கு உள்ளார்கள் என்று யாருக்கும் தெரியல.
இது தான் காலம் நமக்கு சொல்லி தரும் அரசியல்.
இன்று கோவில்பட்டி-எட்டயபுரம் எஸ். துரைசாமிபுரம் சுற்றுவட்டாரத்தில் கூட நாராயணசாமி பற்றி அறிந்து இருப்போர் எவரும் இல்லை.
உன் மரபு சார்ந்த இயல்பை இழந்து விட்டால் நீ சார்ந்த சமூகமும், மண்ணும் அழியும்.
#நடிகமணி_டிவிநாராயணசாமி
https://fb.watch/rnccN0jVV0/?mibextid=v7YzmG
No comments:
Post a Comment