————————————
“கனவாகிப் போன கச்சத் தீவு” என்கிற என் நூலின் முதல் பதிப்பு 2000 இல் 24 ஆண்டுகளுக்கு முன்
வெளிவந்தது. பின இரண்டு , மூன்று பதிப்புகள் 2007 வரை வெளி வந்தது. கச்சத்தீவின் உரிமைகள் குறித்த உண்மையான அரசியல் ஒப்பந்தங்கள் நிகழ்வுகள் அது நிகழ்ந்ததின் அரசியல் காரண காரியங்கள் அவற்றின் பின்னணிகள் யாவும் தரவுகளாக சேகரிக்கப்பட்டு அந்நூல் அக்காலத்தில் வெளியானதைத் தமிழ் கூறும் நல் உலகில் பலரும் வாசித்திருக்கிறார்கள் அறிந்திருக்கிறார்கள்.
அதன் பிறகு கச்சத்தீவு விவகாரத்தில் இன்று வரை நடந்த பல்வேறு பிரச்சனைகளை நமது தமிழகத்தின் உரிமை எல்லாம் ஒன்றிணைத்து அதனுடைய சமகால நடைமுறை வழக்குகள் அது சார்ந்த வாதப்பிரதிவாதங்கள் அனைத்தையும் தொகுத்து அந்த நூல் நான்காவது பதிப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை மக்கள் மன்றத்தின் முன் வைக்கிறேன்.
#Katchatheevu
#கச்சதீவு
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
9-4-2024.
No comments:
Post a Comment