Friday, January 31, 2025

ஐந்து கண் நாடுகள்…. இந்திய - கனடா சிக்கல்!

ஐந்து கண் நாடுகள்…. இந்திய - கனடா சிக்கல்! அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் பதிவு | TAMIL wire 
https://www.tamilwire.in/news/international/five-eye-nations-india-canada-problem-record-of-politic

*Give yourself peace of mind*.

*Give yourself peace of mind*. You deserve to be happy. You deserve delight. Understand your mind can be your enemy or friend. If you always follow your heart, your mind will feel neglected. If you follow only your mind, your heart will never forgive you. Never ignore your conscience, yet always be conscious of reason.Make your heart and mind friends and you will have peace of mind throughout life's seasons...

#ksrpost 
31-1-2025


Thursday, January 30, 2025

#காங்கிரஸ் திமுக கூட்டணி குறித்து இந்திராவிடம் கடுமையாக பேசினார் நெடுமாறன்" | @ksrvoice

#காங்கிரஸ்  திமுக கூட்டணி குறித்து
இந்திராவிடம் கடுமையாக பேசினார் நெடுமாறன்" | @ksrvoice 

#கேஎஸ்ஆர்,
#கேஎஸ்ஆர்போஸ்ட்,
#கேஎஸ்ராதாகிருஷ்ணன்,
#கேஎஸ்ஆர்வாய்ஸ்,
#ksr,#ksrvoice,#ksrpost,
#ksradhakrishnan,

#Sanjaygandhi, #Indiragandhi, #brahmanandareddy, #ypchavan, #Janatagovernment, #HNBahuguna, #Kripalani, #Jayaprakashnarayanan, #Devarajurs, #Gulabnabiazad, #priyaranjandasmunsi, #sathyamurthybhavan, #Karuppiahmoopanar,  #Rajinipatil, #ARAntulay, #Chandrasekar, #AKAntony, #morarjidesai, #congress, #Charansingh, #Jagjivanram, #brahmanandareddy, #Nedumaran, #Tamilnaducongress, #Kamarajar, #Mohsinakidwai, #Mgr, #chikmagalurbyelection, #Lalbahadurshastri,  #ADMK, #MGR, #KPUnnikrishnan, #VazhappadyKRamamurthy, #Ambikasoni,
#ksrpost 
30-1-2025

https://youtu.be/OSG8k13oLCU

#மாவைசேனாதிராஜா Mavai Senathirajah

*இலங்கை தமிழரசு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் #மாவைசேனதிராஜாவை  முதல்வர் கலைஞரை 2010 இல் சந்தித்து #TESO குறித்து பேச அழைத்து சென்றேன்* 

*In 2010, when Kalignar was the Chief Minister of Tamil Nadu, he entrusted me with the responsibility of conducting the second chapter of TESO (Tamil Eelam Supporters Organization). The Tamil United Liberation Front (TULF) leader Sampath was initially expected to meet , but due to illness, he was unable to travel to India. However, Senathiraja, another prominent TULF leader, did make the journey*.

During his visit, I took Senathiraja  to Gopalapuram residence meet Chief Minister Kalignar . In their meeting, Kalignar expressed his unwavering support for the cause of Tamils. He assured Senathiraja, saying, “Don’t use high words. We are with you for the cause of Tamils, forever.” The picture that was taken during this significant moment.




யாழ்ப்பாண புலனாய்வு
#jaffna
#யாழ்ப்பாணம்
#மாவைசேனாதிராஜா
Mavai Senathirajah
#teso

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-1-2025.


Wednesday, January 29, 2025

You let time pass. That’s the cure. You survive the days.

You let time pass. That’s the cure. You survive the days. You cry and wallow and lament and scratch your way back up through the months. And then one day you find yourself alone on a bench in the sun and you close your eyes and lean your head back say to yourself “ I want better. I want to be better. I’m going to be better and make better choices. Every day I’m committed to making decisions that will make my life better.” and then you will realize you’re okay... .

#ksrpost
29-1-2025.


Tuesday, January 28, 2025

#*திமுக-அதிமுக இணைப்பை எம்ஜிஆர் விரும்பினாரா*⁉️

#*திமுக-அதிமுக
இணைப்பை எம்ஜிஆர் விரும்பினாரா*⁉️
————————————
புதிய தலைமுறை சமஸ் பேட்டியில், துரைமுருகன் “எம்ஜிஆர் தனது கடைசி காலத்தில் திமுகவில் இணைய விரும்பினார் இன்னும் ஒரு நாள் இறக்காமல் தாமதித்து இருந்தால் திமுகவில் இணைந்து இருப்பார்” என்று சொல்லி இருக்கிறார்!  

எனக்குத் தெரிய   இப்படியான சம்பவங்கள் எப்போது நடந்தது என்றால் ஒரிசாவின் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் தமிழ்நாட்டிற்கு வந்து திமுக-அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் இணைய சமாதானம் பேச வந்த போது நடந்தது. முதல்வர் எம்ஜிஆர்- கலைஞரை அழைத்து சேப்பாக்கம் அரசு விருந்தினர்  விடுதியில் பிஜு பட்நாயக் இருவரையும் சந்தித்தது பேச வைத்தார். இருந்த முதலமைச்சராக இருந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.இராமச்சந்திரனை சந்தித்து திமுகவும் – அதிமுகவும் இணைய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை வந்து கலைஞருடன் பேசினார், பின்னர் கலைஞரும் – எம்.ஜி.ராமச்சந்திரனும் சந்தித்து பேசினார்கள். வெற்றிகரமாக நடந்து முடிந்தது பேச்சுவார்த்தை. ஆனால் இணைப்பு சாத்தியமாகவில்லை இதுப்பற்றி கலைஞர் நெஞ்சுக்கு நீதியின் மூன்றாம் பாகத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். பின்னர் ஒருமுறை, பன்ருட்டி இராமச்சந்திரன் தான் திமுக – அதிமுக இணைப்பை தடுத்தார் என பகிரங்கமாக பேசினார். பிராந்திய கட்சிகள் வலிமையாக இருந்தால் தான் தேசிய கட்சிகளை எதிர்க்க முடியும், மாநில நலனை காக்க முடியும் என்ற கருத்தை உடையவர். அதனாலே திமுக – அதிமுக இணைய முயற்சி செய்தார். பின், எம்ஜிஆர்  இணைப்பை விரும்பவில்லை. அப்போது ஜெயலலிதாஅரசியல் களத்தில் இல்லாத



நேரம். 

எம்ஜிஆர் மறைவு அன்று கலைஞர் ஈரோடு கூட்டத்தில் கலந்து விட்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பினார். அன்றைக்கு மாவட்டச் செயலாளர் டி ஆர் பாலுவோடு சென்டரல் ரயில்வே நிலையத்லிருந்து ராமாபுரம் தோட்டத்தில் சென்று அதி காலையில்  அதனது அஞ்சலியை செலுத்திய போதும் சலசலப்பு ஏற்பட்டது.

 கவர்னர் சுந்தர் லால் குரானா  முன்னிலையில்,முதல்வர் பதவியை  ஏற்ற ஜானகி அம்மையாருக்கு பிரச்சனைகள்  இருந்தது.  ஆர் எம் வீரப்பன் ஆலோசனையின் பேரில் தேர்தல் கூட்டணிக்கு என பலரின் ஆதரவுக் கரங்கள் வேண்டி  காங்கிரஸ, திமுக என ஜானகி அம்மாள் எல்லோரிடம் தூது போய்க் கொண்டிருந்தார் . கலைஞரிடம் ஆதரவு கேட்டு கோபாலபுரம் வீட்டுக்கே வந்தார். உண்மையில் அந்த இக்கட்டுகளை கலைஞர் தந்திரமாக வேடிக்கைதான் பார்த்தார்! அது ஒரு புறம் இருக்க திமுகவுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதை எம்ஜிஆர் அவர் உயிரோடு இருக்கும் போதே மறுத்துவிட்டார் என்பது தான் இங்கு முக்கியம்! .

காரணம் ஈழப்பிரச்சனகளின் போது திமுக தலைமை மீது குறிப்பாக கலைஞர் மீது எம்ஜிஆர் கடும் கோபத்தில் இருந்தார் . அவர் கையாண்ட எதுவும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இல்லை என்கிற நிலைப்பாடு அவரிடம் இருந்தது. குட்டிமணி ஜெகன் போன்றோர்  கைது செய்யப்பட்ட போது எம்ஜிஆர்  சங்கடம் அடைந்தார். கடைசி காலத்தில் எம்ஜிஆர் பேசிய பேச்சுகளும் அவர் தொடர்ந்து உரையாற்றியது பேட்டி கொடுத்ததெல்லாம் பார்த்தால் இந்த விஷயங்கள் நன்றாகப் புரியும். அதை ஒட்டி ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மீதும் கடுமையான கோபத்தில் எம்ஜிஆர் இருந்தார்! இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஈழப் பிரச்சினையின் போது நாங்கள் எம்ஜிஆர் உடன் அதிகம் தொடர்பில் இருந்தோம். 

துரைமுருகன் சொன்னதாக சமஸ் சொல்வது போல் இருந்தால் எம்ஜிஆர் இறந்தவுடன் ஜானகி அம்மையார் இடைக்கால முதல்வராக பொறுப்பேற்க முடிவு செய்யப்பட்டு அதற்காக திமுகவுடன் ஆதரவைக் கேட்டபோது கலைஞர் சரி என்று சொல்லி அவருக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டியதுதானே. ஏன் அந்த நேரத்தில் காங்கிரஸ் இடம் கூட ஜானகி உதவி கேட்டார். அவர்களும் ராஜிவ் சரி என சொல்லி  பின் ஜெயலலிதா சொல்லு மறுத்து விட்டார்கள். மூப்பனார் அப்போதைய பேட்டிகளை கவனித்தால் தெரியும். ஒருவேளை இடைக்கால முதல்வராக ஜானகி இருக்க கலைஞர் ஒத்துழைத்து இருந்தால் நான் ஆட்சியை விட்டு விலகி கலைஞரிடம் தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பைக் கொடுத்திருப்பேன் என்று ஜானகி அம்மையார் சொல்லியதெல்லாம் உண்டு. அப்படி நடந்திருந்தால் ஜெயலலிதாவின் என்ற அரசியல் அத்தியாயம் வருகையே அவசியமற்றதாகிப் போய் இருக்கும். அதற்குப் பிறகு வந்த தேர்தலில்  ஜானகி அம்மையாரும் ஜெயலலிதாவும் தனித்தனியாகப் போட்டியிட்டு ஓட்டுகள் சிதறிவிட்டபின் 1989 இல் திமுக ஜெயித்ததும் “நாங்கள் எப்படி ஜெயித்தோம் என்பதை பற்றி பேசாமல் தாங்கள் எவ்வாறு தோற்றோம் என்பதை பற்றி அண்ணா திமுக பேசிக் கொண்டு  இருக்கிறது” என்று கலைஞர்  கிண்டலாகச் சொன்னார். 

உண்மையில் ஜானகி அம்மாவின் நம்பிக்கையானது பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் அண்ணா திமுக ஒன்றிணைய வேண்டும் என்பதாக இல்லையென்றால் பிறகு எப்படி துரை முருகன் இப்படி சொல்கிறார்! அதை எல்லாம் பயன்படுத்தி இடையில் ஜெயலலிதா வராமல் இருந்திருந்தால் அந்த ஒன்றிணைப்பு நிகழ வாய்ப்பு இருந்திருக்கும் !அதற்கு அப்புறம் பதினைந்து வருடம் காத்திருக்க  வேண்டி வந்ததை திமுகவினர் மறந்து விட்டார்களா!

பிஜு பட்நாயக் சமாதானத்தில்   எம்ஜிஆர் கலந்து கொண்டு பேசியது ஆரம்பகாலம் மட்டுமே! தன் இறுதிக் காலத்தில் அப்படியான முடிவு ஏதும் எம்ஜிஆர் இடம் இல்லை! இப்படியான பிம்பங்களை கட்டுவதுடன் இன்று வந்து எதற்கு ஏன் இப்படி பொய் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை! எம்ஜிஆர் உடன் தொடக்க காலத்தில் அருகில் இருந்தவர் துரைமுருகன் அவரது மாணவப் பருவத்தில் அவரைப் படிக்க வைத்து  அரசியல் மயம் ஆக்கியது எல்லாம் எம்ஜிஆர் தான்.

ஆகவே அவர் சொல்வது வேறு விஷயம்! அவர் உள்ளத்தளவில் இன்று வரை தன்னை வளர்த்தெடுத்த எம்.ஜி.ஆரின் பக்தர் தான்!  இறுதிக்காலத்தில் எம்ஜிஆர் உடன் நாங்கள் அருகில் இருந்து பார்த்த வரையில் அவர் கலைஞர் மீது  அவர் கையாண்ட ஈழ தமிழர்கள் சார்ந்த தவறுகளின் மீது கடுமையான கோபத்தில் இருந்தார் என்பதுதான் உண்மை. ராஜிவ் உடல்நிலை சரியில்லாத எம்ஜிஆரை முதல்வரை பதவியை ஜெயலலிதா விடம்
கொடுத்து விடுங்கள் என சொன்னது. ராஜிவ் விரும்பிய புலிகளை தவிர்த்த இந்திய- இலங்கை ஒப்பந்தம் -1987,
அமெரிக்க செல்ல வேண்டிய நாள் அன்று எமஜிஆரை ராஜிவ் தடுத்து நிறுத்தி தனது கடற்கரை கூட்டத்தில் இந்திய- இலங்கை ஒப்பந்தம் பாராட்டி பேச சொன்னது என்று சிந்தனையில் இருந்தார். புலிகள் விடயத்தில் கடைசி காலத்தில் கலைஞர் மீது கோபத்தில் இருந்தார். எம்ஜிஆரின் கடைசி நாட்களில் நோய்வாய்பட்டு எந்த முடிவும் எடுக்க இயலாமல் இருந்தார் என்பதான் உண்மை. அப்போது பிரபாகரன், பாலசிங்கம், பேபி மற்றும் அடியேனும் பார்த்தோம். அப்போது காளிமுத்துவும் இருந்தார்.

சமஸ் போன்றவர்கள்  துரைமுருகன் சொன்னதாக எம்ஜிஆர் ஒரு நாள் உயிரோடு இருந்திருந்தால் திமுகவில் இணைந்து இருப்பார் என்று சொல்வதெல்லாம் எவ்வளவு அபத்தம்! அக்காலத்தில் பாவம் ஜானகி அம்மையாரை பரிதவிக்க விட்டதுதான் மிச்சம்!இது மாதிரி விஷயத்தில் இவர்கள் என்ன லாபம் அடைகிறார்கள் என்று தெரியவில்லை!  ஒரு காலத்தில் திமுகவிற்கு ஆதரவாக இருந்த என்னை உழைத்தவர்களை போன்றவர்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு ,இப்படியான சுழலில் சுய லாபம் அடித்து கொள்ளையடித்த பிறகு இவர்கள் பேசுவதெல்லாம் நியாயமாகி விடுகிறது! இன்றைய திமுக அரசியல் கேந்தரம் அல்ல. அது ஒரு  சுய லாப நோக்கம்  உள்ள தனிக் குடும்ப வாரிசு வணிக நிறுவனம்!  இதையும் சரி என்று சொல்லும் சமஸ் போன்றவர்கள்  இதை சிந்திப்பது இல்லை .

#திமுக_அதிமுகஇணைப்பைஎம்ஜிஆர்விரும்பினாரா?
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-1-2025.


Monday, January 27, 2025

#*பிராபாகரன்-சில குறிப்புகள்*

#*பிராபாகரன்* 
*சில குறிப்புகள்*
————————————
சோவியத் இலக்கியங்கள் ஆங்கில மற்றும் ஜெர்மனி இலக்கியங்கள் எல்லாம் பெரிதான ஒன்றுதான். ஆனால் தமிழ்நாட்டில்  அதைவிட மிகுந்த சிறந்த இலக்கியங்கள் இருக்கிறது.

பிரபாகரன் தனது தொடக்க காலங்களில் தமிழைச் செம்மொழி என்றுதான் கூறுவார்! இங்கு யார் ஒருவரும் அதைப் பாராட்டுவதற்கு முன்பே பிரபாகரன்  தமிழ் ஒரு செம்மொழி என்பதில் உறுதிப்பாடாக இருந்தார். அம்மாதிரியான முடிவிற்கு வரும் வகையில் பலதுறை வாசிப்பு அவரிடம் இருந்தது.

போக பல்வேறு உலக இலக்கியங்களை வாசித்தவர் ரஷ்ய இலக்கியங்கள் தொட்டு தமிழில் சுந்தர ராமசாமி வண்ண நிலவன், அகிலன்,  போன்றவர்களுடைய படைப்புகளைக் குறிப்பிட்டு தனது ஏடுகளில் பகிர்ந்து கொண்டது உண்டு.  கல்கி, நா.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன்
கு. அழகிரிசாமி, கிரா  போன்றோரின் படைப்புகளை படிப்பார் 

அதிகம் சினிமாக்களைப் பார்ப்பதில் பிரியம் கொண்டவர். அவற்றின் மூலம் மக்களிடம் சில எதார்த்தங்களை எடுத்துச் செல்ல முடியும் என்று நம்பியவர்! திரைத்துறை உலக சினிமாக்களில் ஒரு பார்வை யுத்த கால திரைப்படங்கள் என 
தன் லட்சியப் பாதைக்கு உரிய அனைத்துக் கலைகளையும் ஆதரித்தவர் பிரபாகரன்.!

அவர் நல்ல தொலை நோக்கு உடையவர். தன்னுடலைக் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக காலையில் எழுந்தவுடன் மூச்சுப் பயிற்சி எல்லாம் செய்வார்! அதேபோல் தேன் ஒரு நல்ல மருந்து என்பதனால் அதை காலை வெண்ணீரோடு கலந்து அருந்துவார். இப்படியான பழக்கங்கள் அவரிடம் உண்டு. பெரும்பாலும் ஆங்கில மருந்துகளைத் தவிர்த்து விட்டு தமிழில் சித்த வைத்திய மருந்துகளை மட்டுமே முடிந்த அளவு எடுத்துக் கொள்வார். அவர் என்னுடன் தங்கி இருந்த நாட்களில் அவர் வெளிப்படுத்தியது பேசியது எல்லாவற்றையுமே தொகுத்தால் ஒரு நூலாகவே கொண்டு வரலாம். 

காபி, தேநீர் அருந்த மாட்டார்.
அசைவம் மீன், கோழி, இறைச்சி, நண்டு கருவாடு மட்டுமே எடுத்துக்கொள்வார். புகாரி, கஜேந்திர விலாஸ், உட்லண்ட்ஸ், மயிலாப்பூர் பீமா விலாஸ, மயிலை கபாலீசுவரர் மெஸ (அப்போது சைவ சாப்பாடு மட்டுமே) ராயர் மெஸ் என சென்னையில் உள்ள உணவகங்களில் செல்பதும் உண்டு. சேவு , முறுக்கு, சீடை, அதிரசம், கட்டி எருமை தயிர் கிராமதனமான தின்மானங்கள் பிடிக்கும்.

தமிழ் கடவுள் முருக பக்தர். எனவே தனது திருமணத்தை திருப்போரூர் முருகன் கோவிலில் வைத்துக்
கொண்டார்.

நேத்தாஜி,  பகத்சிங், வஉசி, பாரதி, கட்டபொம்மன், புலித்தேவன் போன்ற ஆளுமைகளை பாராட்டியது உண்டு. பெரியார் மீது எந்த கருத்தும் எதிர்மறையாக சொன்னது இல்லை. இந்திய தமிழக அரசியல் மற்றும் தலைவர்கள் குறித்து எந்த கருத்தையும் 
பிரபாகரன் வெளியிட்டது இல்லை. தனது பெயரை கரிகாலன் என்று எழுதுவார். 

அவரோடு சென்னை வள்ளாலர் இல்லம்,
மதுரை திருமலை நாயக்கர் மகால், எட்டையபுரம் பாரதி மண்டபம் -வீடு, நாவலர் சோமுசுந்தர பாரதி வீடு, பஞ்சலாங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, ஓட்டப்பிடாரம் வஉசி இல்லம், திருச்செந்தூர்,குமரி முனை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், தஞ்சை பெரிய கோவில், புது டில்லி என பல இடங்களுக்கு அவருடன்
சென்றதுண்டு.கிராமங்கள் பிடிக்கும் . கிராம பம்பு செட்டுகள் குளிப்பதில் மகிழ்ச்சி கொள்வார்

தமிழ்நாட்டில் இருக்கும் போது பாலச்சந்தர் படங்களை மகேந்திரன் படங்களை விரும்பி பார்ப்பார்.   சென்னையில் குறிப்பாக தேவி, சாந்தி, கேசனோ,சத்தியம், ஆனந்த்,சஃபையர், பைட்லைட் தியேட்டர்களில் அடிக்கடி சென்று படம் பார்த்து வருவதுண்டு. சினிமாவின்  மூலம் மக்களிடம் சில உலக இனங்களின் வாழ்வியல்  எதார்த்தங்களை ஒடுக்கப்படுபவர்களின் நிலைமைகளை எடுத்துச் செல்ல முடியும் என்று நம்பியவர்!  இப்படியாகத்திரைத்துறை உலக சினிமாக்களில் ஒரு பார்வை ஆங்கில மொழியில் வெளியாகி வரும் யுத்த கால திரைப்படங்கள் அரசியல் ஓவியங்கள் இசை என தன் லட்சியப் பாதைக்கு உரிய அனைத்துக் கலைகளையும்  பார்த்து  அதன் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டவர் பிரபாகரன்.!

போக இன்று வரை ஒருவர்என்று ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கும் பிரபானுக்கு எந்த ஒட்டும் உறவும் கிடையாது!  பிரபாகரன் தன் குடும்பத்தைக் கூட களத்தில் இறக்கினாரரே ஒழிய சகோதர பந்தங்களை எல்லாம் உதறியவர்!தனது சகோதரி பெற்றோர் மீது பாசமும் இருக்கும.பிரபாகரன் மிக சிறந்த  தமிழ் உலகம்  உள்ளவரை மறக்க முடியாத அளவிற்குக்கான ஒரு பெருந்தகையாளர்! ஈழ தமிழ்த் தேசியத்திற்கான உண்மையான களப்போராளி! இதில் யார் ஒருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது!

விகடன் ராவ், சுதாங்கன், கல்கி ப்ரியன்,
இந்து ராம், டி.எஸ். எஸ். சுப்பிரமணியம் என டில்லி பத்திரிகையாளர்கள் பலர் சந்தித்து பேட்டி எடுத்தனர். தோழி அனிதா பிரதாப்புக்கு முதன்முறை ஆங்கில Sunday ஏட்டுக்கு என்மூலகமாக கேள்விகள் கொடுத்து பேட்டி எழுத்து வாயிலாக  நடந்தது.

கடந்த 1977 முதல் 1987 வரை இருந்தார். இன்னும் பல செய்திகள் உண்டு. அவை எனது நினைவு குறிப்புகளில்…

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
27-1-2025.


Sunday, January 26, 2025

தமிழ், தமிழகம் என பேசியவர்கள முதலில் இவர்கள்தான்….

தமிழ், தமிழகம் என பேசியவர்கள முதலில் இவர்கள்தான்….

1. 'வள்ளலார்' இராமலிங்க அடிகளார் 
(5 அக்டோபர் 1823 – 30 சனவரி 1874) 
2.மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950)
3. திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்-திரு. வி. க., 
இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் (Thiru. V. Kalyanasundaram, ஆகஸ்ட் 26, 1883 - செப்டம்பர் 17, 1953)
4. சோமசுந்தர பாரதியார் (27 ஜூலை 1879 - 14 டிசம்பர் 1959) ஆய்வாளர், பேராசிரியர், வழக்கறிஞர், எட்டையபுரம்,பாரதியாரின் நண்பர் விடுதலை போராட்டத்தில் வஉசியோடு களம் கண்டவர் . இந்தி எதிர்ப்பு முதல் போராட்ட தலைவர்.



5. ஈழத்து அடிகள்.

"முதல் இந்தி எதிர்ப்புப் போரில் தளபதியாக இருந்தவர் பெரியார்" : உதயநிதி ஸ்டாலின் கூறியதில் ஒரு பங்கு உண்மை மட்டுமே உள்ளது. 99 பங்கு மறைக்கப்பட்ட பெரிய வரலாறு இதோ !

உண்மை என்ன ? : -

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தைக் கலைக்க முயற்சி செய்து பிறகு இணைந்து கொண்ட ஈ.வெ.ராமசாமி பெரியார், தாம் ஏன் இணைந்தேன் என்பதற்குப் பிறகு  சொன்ன காரணம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அது இதோ இதுதான்...

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏன் எதற்காக ?!

விடுதலை இயக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சி 1937 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அதில் ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரியார் உள்ளட்ட காங்கிரஸ்காரர்கள் போட்டியிட்டனர். "தாம் வெற்றி பெற்றால் தமிழநாட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்படும்" என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வந்தவுடன் கரூரில் இருந்த ஈழத்து சிவானந்தம் அடிகள், "உங்கள் கடமை" எனும் தலைப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் சாராம்சம், "உங்களிடம் வாக்கு கோரி வரும் வேட்பாளர்களிடம், பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயமாக்கப்படாது என்று உறுதி தருவோருக்கே எங்கள் வாக்கு என்று கூறுங்கள்" என்பதே. இந்த அறிக்கை தமிழ்நாடு முழுதும் அனுப்பப்பட்டது 

ஈழத்து சிவானந்தம் அடிகளை அப்போதுதான் வெளி உலகிற்கே தெரியும். அவர் கரூரில் ஒரு அன்னக்காவடி சத்திரத்தில் தங்கி இருந்தவர். ராஜாஜியின் அறிவிப்பைக் கண்டு முதலில் செயல்பாட்டில் இறங்கியவர் ஈழத்து அடிகள்.

மறைமலை அடிகள் "இந்தி பொதுமொழியா ?" எனும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டபோது அதை கோ.து.நாயுடு, பாகனேரிக் காசி விசுவநாதன் ஆகிய இருவரின் பண உதவியுடன் 15 ஆயிரம் படிகள் அச்சிட்டு வெளியிட்டவர் ஈழத்து அடிகள். 

நாவலர் சோமசுந்தர பாரதியார் "இந்தி கட்டடயப் பாடமா ?" என்ற தலைப்பில் ஆங்கில நூல் வெளியிட்டிருந்தார். அதனையும் தமிழில் மொழி பெயர்த்து 15 ஆயிரம் படிகள் அச்சிட்டு தமிழ்நாடு முழுதும் அனுப்பி வைத்தவர் ஈழத்து அடிகள்.

ஈழத்து அடிகளின் பணிகளைக்  கண்டு அவருடன் சென்னை அருணகிரி அடிகளும், சண்முகானந்த அடிகளும் இணைந்து கொண்டனர். 

ராஜாஜி மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் (பிரதமர்) ஆனார். 60 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்று அறிவித்தார். 

"இந்தி எதிர்ப்பின் இறுதிப்போர்" எனும் தலைப்பில் ஒரு நீண்ட விரிவான அறிக்கையை எழுதி, அதில் இந்தி கட்டாய அறிவிப்பை எதிர்த்துத் தொடர் மறியல் போராட்டம் நடத்தபோவதாகவும் அது  1/6/1938 அன்று சென்னையில் தொடங்கும் என்றும் 25/5/38 க்குள் தமிழ்நாடு எங்கும் இருந்து பங்கேற்பாளர்கள் வர வேண்டும் என்றும் கோரி இருந்தார் ஈழத்து அடிகள். 

இந்த அறிக்கையை ஈரோட்டில் இருந்த பெரியார் இராமசாமியிடம் காட்டி இதனை "விடுதலை" "குடிஅரசு" இதழ்களில் வெளியிட்டு உதவுமாறு ஈழத்து அடிகள் கேட்டுக்கொண்டார். 

"இது காங்கிரசார் கையாளும் சண்டித்தனம். சத்தியாகிரகம், மறியல் என்பதெல்லாம் வெற்றுக் கேலிக்கூத்து" என்று கூறி அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார் பெரியார் இரமசாமி.

பிறகு ஈரோட்டில் இருந்த ஈழத்து அடிகளின் நண்பர் சண்முக வேலாயுதம் அவர்களின் உதவியுடன் இரத்தினா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

பிறகு சென்னை சென்று ஈழத்து அடிகள் சி.டி.நாயகம் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தவுடன் அவருக்கு சொந்தமான முதலமைச்சர் இல்லத்துக்கு அருகில் இருந்த ஓர் இடத்தில "இந்தி எதிர்ப்பு நிலையத்தை" நிறுவினார் ஈழத்து அடிகள். 

ஈழத்து அடிகளின் அழைப்பை ஏற்று 25/5/38 ல் இருந்து விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த செலவில் 120 பேர் வந்து சேர்ந்தனர். இப்படி வந்தவர்கள்தான் தாளமுத்து, நடராசன் ஆகியோர். 

திட்டமிட்டபடி போராட்டம் 1/6/38 அன்று தொடங்கியது.

மறியல் தொடங்கி மூன்றாம் நாள் 60 பேர் வரை சிறை சென்றுவிட்ட நிலையில் அங்கே வந்த பெரியார் இராமசாமி, "இப்படி மறியல் செய்வது காங்கிரசார் செய்யும் பயன் தராத முறையாகும். சண்டித்தனமாகும். இதில்  நீங்கள் ஈடுபட வேண்டியது இல்லை" என்று கூறி வந்தவர்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல தாம் பணம் தருவதாகக் கூறினார். அந்த பணத்தை மறுக்கப்பட்டது.

பிறகு சி.டி.நாயகம் நிலையை விளக்கி சொல்ல அதன்பிறகு தம்மையும் இணைத்துக்கொண்டார் பெரியார் இராமசாமி. 

இதுகுறித்து குறிப்பிட்டுள்ள ஈழத்து அடிகள் "பெரியார் இராமசாமி அவர்களிடம் செய்தித் தாட்கள் இருப்பதால் இந்தி எதிர்ப்பை நாடறிய செய்ய நல்ல வாய்ப்பு என்று மகிழ்ச்சி அடைந்தோம்" என்று கூறியுள்ளார். 

இந்தப்போராட்டத்தில்தான் அன்றாடம் இரண்டு முதல் பத்து பேர் வரை மறியல் செய்து சிறை செல்லும் முறையில் தாளமுத்து, நடராசன், ஈழத்து அடிகள், சண்முகானந்த அடிகள்  உள்ளிட்டோர் சிறை சென்றனர்.

இவர்கள் சிறை சென்றபின் எதிர்ப்பு நிலையத்தை தமது வசம் எடுத்துக்கொண்டார் ஈ.வெ.ராமசாமி என்பதுதான் வரலாறு என்று அறிவித்தவர் ஈழத்து அடிகள்.

நாவலர் சோமசுந்தர பாரதியார்  தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் மறைமலை அடிகள் மகள் நிலம்பரி அம்மையார் அழைத்து பெரியார் கலந்துகொண்டார். அங்கு ஈவேராக்கு பெரியார் பட்டம் நிலம்பரி அம்மையார் வழங்கினார். நாவலர் பாரதி
தெற்கே மதுரையிலிருந்து புறப்பட்டு நடை பயணமாக இந்தி எதிர்ப்பு பிரச்சாரமாக சென்னை வரை வந்து இந்த கடற்கரையை மாநாட்டில் தலைமை ஏற்று நடத்தினார். இதில் முதன முதலாக பெரியார் கலந்துகொண்டார்,

"இந்த நிலையில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை வீரியமடைந்ததை அடுத்து  காங்கிரஸ் அமைச்சர்கள் 1939 ம் ஆண்டு பதவியில் இருந்து விலகுகிறார்கள்.

அவரிடம், "கட்டாய இந்தி நீங்கும் முன்னர், ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஏன் நிறுத்தவேண்டும் என்று கேட்டதற்கு பெரியார் இராமசாமி என்ன சொன்னார் தெரியுமா ?!

"நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, காங்கிரசு மந்திரிகளுக்கு தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காக நான் அதுபோல் பயன்படுத்திக் கொண்டேனேயொழிய, உண்மையிலேயே எனக்கு இந்தி கட்டாயமாக்கப்படுவதைப் பற்றியோ அதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது பற்றியோ கவலையில்லை" என்று கூறினார்.

உடனே நான் ஒரு அறிக்கையை வெளியிட்டு "ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்களுக்கு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை நிறுத்தும் உரிமை கிடையாதென்றும், காங்கிரஸ் அமைச்சர்கள் இடைக்கால ஏற்பாடாக பதவியிலிருந்து விலகினாலும், அவர்களால் புகுத்தப்பட்ட கட்டாய இந்தி நீக்கப்படவில்லை. ஆதலால், இந்தி எதிர்ப்பு மறியல் தொடர்ந்து கவர்னர் மாளிகை முன் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். அந்த அறிக்கை தி ஹிந்து, மெயில் இதழ்களில் 4/11/1939 ல் வெளியானது. 

இந்த அறிக்கையைக் கண்ணுற்ற கவர்னர் அவர்கள் செட்டி நாட்டரசர் உயர்திரு முத்தையா அவர்களை அழைத்து, 

"என்னுடைய மாளிகை முன் இந்தி எதிர்ப்பு மறியல் நடத்த இருப்பதாக ஒரு அறிக்கை வந்திருக்கிறது. இதனை தாங்கள் எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும். நான் தில்லிக்குச் சென்று கட்டாய இந்தி நீக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருகிறேன்."

என்று கூறவே, செட்டி நாட்டரசர் என்னையும், சண்முகானந்த அடிகளையும் அடையாற்றில் உள்ள  தம்முடைய மாளிகைக்கு அழைத்து கவர்னர் அளித்துள்ள உறுதி மொழியைக் கூறினார்கள். 

கவர்னர் மாளிகை முன் மறியல் செய்யப்போவதாக பெண்கள் சார்பில் அறிவித்திருந்த டாக்டர். தருமாம்பாள் அவர்களிடம் இதுபற்றி கலந்து பேசினோம். 

"சரி, நிலைமை இதுவானால் சிறிது நாட்களுக்கு மறியலை நிறுத்தித்தான் பார்ப்போமே" என்று கூறினார்கள். 

இதன்படியே மறியல் நிறுத்தப்பட்டது. 

மறியல் நின்ற சில நாட்களுக்கெல்லாம் கவர்னர் அவர்களின் தலையீட்டால்,

"கட்டாய இந்தி நீக்கப்பட்டு விரும்புபவர்கள் மட்டும் படிக்கலாம்" 

என்று தில்லி அரசரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

எனவே, "பெரியார் இராமசாமி அவர்களுக்கும் இந்தி எதிர்ப்புக்கும் எந்தவிதமான நேரடித்  தொடர்பும் இல்லை" என்பதைப் புரிந்துகொள்ள முடியமென்று நம்புகிறேன்.

-ஈழத்து அடிகள் சிவானந்த அடிகள் 25/1/25 (ஆதாரம் இந்தி எதிர்ப்பு அன்றும் - இன்றும் : ஈழத்து சிவானந்தம் அடிகள் நூல்)

இதற்கு பழி தீர்க்கும் விதமாக சாமி சிதம்பரனார் எழுதிய "தமிழர் தலைவர்" எனும் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாற்று நூலில் இந்தி எதிர்ப்பு எனும் பகுதியில் ஈழத்து அடிகளின் பெயரை பத்தோடு பதினொன்றாகக் குறிப்பிட்டு ஈழத்து அடிகளின் பணிகள் அத்தனையும் இருட்டடிப்பு செய்தார் பெரியார் இராமசாமி.

இதனால்தான் "இந்தி எதிர்ப்பு அன்றும் - இன்றும்" எனும் தனி நூலை 1965 ம் ஆண்டு எழுதி வெளியிட்டார் ஈழத்து அடிகள்.

நாவலர் சோமுசுந்தர பாரதி,1937-ஆம் ஆண்டில் இராசகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8 ஆம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் தொடங்கினார்.

1937 செப்டம்பர் 5-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25-ஆம் நாள் கட்டாய இந்திக் கல்வியைக் கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் ச. இராசகோபாலாச்சாரியருக்குத் வெளிப்படை மடல் (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar) ஒன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.
1948-ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கும் மடல் எழுதினார்.


Saturday, January 25, 2025

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களின் குடியரசுத் திருநாள் உரை.

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களின் குடியரசுத் திருநாள் உரை
•••••
தமிழ்நாட்டின் எனதருமை சகோதர சகோதரிகளே, வணக்கம்.  பாரதக் குடியரசு தன்னுடைய நிறைவான பயணத்தின்75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.  இந்த மங்கலமானதருணத்தில் நான் என்னுடைய மனம் கனிந்தவாழ்த்துக்களையும், நல்விருப்பங்களையும் உங்களுக்குத்தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தங்களுடைய உழைப்பாலும், உதிரத்தாலும், வியர்வையாலும்நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அனைத்து உயிர்த்தியாகிகள், சுதந்திரப் போராளிகள் ஆகியோரை நான் ஆழ்மன நன்றியோடுநினைத்துப் பார்க்கிறேன்.  பாபா சாஹேப் அம்பேத்கருக்கும், அரசியல் சாசன சபையின் மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் என்மனம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்து, அவர்களை மட்டற்றநன்றியுணர்வோடு சிந்திக்கிறேன்; ஒரு வளைந்து கொடுக்கும்தன்மையுடைய, எதிர்காலநோக்கு கொண்டதொருஅரசியலமைப்புச் சட்டத்தை இவர்கள் நமக்களித்தமையால்தான், நமது ஜனநாயகம் பாதுகாப்பாகவும், உயிர்ப்புடையதாகவும் இருக்கிறது.  இந்த 75 ஆண்டுகளிலே, நமது அண்டைப்புற நாடுகள் உட்பட, உலகின் பல்வேறுநாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக ஜனநாயகம் நிலைகுலைவதைநாம் பார்த்திருக்கிறோம்; ஆனாலும் கூட, நமது ஜனநாயகம்மேலும் பலமுடையதாகவும், முதிர்ச்சியுடையதாகவும்காலப்போக்கில் வளர்ந்து வந்திருக்கிறது.  ஜனநாயக உணர்வுநமது மக்களிடம் ஊறிப்போயிருக்கிறது.  பாரதம் தான்ஜனநாயகத்தின் தாய்நாடு.  காஞ்சிபுரம் மாவட்டத்தின்உத்திரமேரூரில் உள்ள ஓராயிரம் ஆண்டுக்காலக் கல்வெட்டுகள்இதற்குச் சான்றாக விளங்குகின்றன. 
 
இந்த நாளன்று,  நான் மிகுந்த மரியாதையோடு, அகஸ்தியமுனியின் பூமியான, தமிழ்நாட்டின் புண்ணிய பூமிக்கு என்தலைவணங்குகிறேன்.  இந்த மண்தான், பாரதம் என்றஎண்ணத்திற்கு உரமிட்டு, பல்லாயிரம் ஆண்டுகளாய்அடையாளப்படுத்தி, அதன் அமைவு நோக்கத்தில் வழிகாட்டியது.  இந்த மண்ணின் சான்றோர் கூட்டமான தெய்வீகப் புலவர்கள், புனிதர்களும் சித்தர்களுமான -திருவள்ளுவர், திருமூலர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாயன்மார்கள், ஆழ்வார்களும்; மேலும் பல்லவர்கள், பாண்டியர்கள், மகத்தானசோழர்கள் போன்ற அரசர்களும், ஆன்மீகப் பெரியோரும், சமூகசீர்திருத்தவாதிகளுமான ஸ்ரீ ராமானுஜாச்சாரியார், வள்ளலார், அய்யாவைகுந்தர், ஸ்வாமி ஸஹஜாநந்தர்போன்றோரும், கர்நாடக இசை மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரியும், மாபெரும்சுதந்திரப் போராட்டத் தியாகியான வ.உ.சிதம்பரம்பிள்ளைபோன்றோரும், மகத்தான புரட்சிக்கவியான சுப்பிரமணிய பாரதிபோன்றோரெல்லாம் மிக மேன்மைமிக்க ஆன்மீக, இலக்கிய, கலாச்சார மற்றும் நாகரீகத்தின் மரபினை, நமதுபெருஞ்சொத்தாக விட்டுச் சென்றிருக்கிறார்கள், இது ஒவ்வொருஇந்தியரின் இதயத்தையும் பெருமிதத்தால் விம்மச் செய்கிறது.
 
நமது தேசத்தின் ஆன்மா, காலனியாதிக்கஆட்சியாளர்களால் கருணையே இல்லாமல் காலில் போட்டுமிதிக்கப்பட்ட போது, இதே புண்ணிய பூமியான தமிழ் பூமிதான், சுவாமி விவேகானந்தருக்கு தேசிய விழிப்புணர்வைஏற்படுத்தியது.  பாரதத்தின் ஆன்மீக, கலாச்சார மற்றும்நாகரீகத்தின் மேன்மைமிக்க மரபு குறித்த ஞானத்தை, 1893 ஆம்ஆண்டு சிகாகோவிலே உலகிற்கு அளிக்க, அவருக்குள்விழிப்பையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியது.  இந்தஅறைகூவல் தான் நமது மக்களிடம் விழிப்பினைஏற்படுத்தியதோடு, விடுதலையை நோக்கிய நமது தேசியசுதந்திர இயக்கத்திற்கு ஆற்றல் கூட்டியது.
 
நண்பர்களே, தமிழின் ஆன்மீக, கலாச்சார மற்றும் மொழிபாரம்பரியம் தான் நமது தேசத்தின் பெருமிதம்.  நாம்பெருமைப்பட உலகத்தாரோடு இவற்றைப் பகிர்ந்துகொள்கிறோம்.  மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்திருவள்ளுவர் இருக்கைகள், இலங்கையிலும், சிங்கப்பூரிலும்திருவள்ளுவர் மையங்கள், பிரான்சின் செர்ஜியில் திருவள்ளுவர்உருவச்சிலை, ஃபிஜியின் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள்நியமனம் என உலகம் நெடுக, தமிழின் மகோன்னதத்தைப்பரப்பும் வகையில் பல்வேறு நகரங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் திருவள்ளுவர் மையங்களையும், இருக்கைகளையும் ஏற்படுத்துவதில் மாண்புமிகு பாரத பிரதமர்திரு. நரேந்திர மோடி அவர்கள் முன்னெடுப்புக்களைமேற்கொண்டு வருகிறார்.  பனாரஸ் ஹிந்துபல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கையும், குவாஹாத்தி பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டயப்படிப்பு போன்றநடவடிக்கைகளும், தமிழின் புகழினை நாடெங்கிலும் பரப்பிவருகின்றன.  பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரமாற்றத்தின்கலாச்சாரச் சின்னமாக விளங்கிய, இந்த மண்ணின் புனிதமானசெங்கோல், பாரதத்தின் புதிய நாடாளுமன்றத்தில் முழுகண்ணியத்தோடும், கௌரவத்தோடும் நிறுவப்பட்ட வேளையில், நாடு முழுவதும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் உணர்ந்தது.  கடந்த மூன்றாண்டுகளின் வருடாந்தர விழாவான காசி தமிழ்சங்கமம், பாரதத்தின் ஆன்மீக-புவியீர்ப்பு மையமான காசியோடுதமிழ் மக்களுக்கு இருந்து வரும் பல்லாயிரம் ஆண்டுக்காலபழமைவாய்ந்த கலாச்சாரத் தொடர்பிற்கு, புத்துணர்ச்சிஅளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 
 
நண்பர்களே, இது பாரத தேசத்தின் பொற்காலம்.  இதுஅதன் மறுமலர்ச்சியுகம்.  பத்தாண்டுகளுக்கு முன்னர், பலவீனமான ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கியநாம், இன்று உலகின் 5-ஆவது மிகப்பெரியபொருளாதாரங்களில் ஒன்றாக ஆகியிருப்பதோடு, விரைவில்உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதாரங்களில்ஒன்றாகவும் ஆக இருக்கிறோம். உலகின் மிகவேகமாக வளரும்பொருளாதாரமாக நாம் இருக்கிறோம்.  நெடுநாட்கள்புரையோடிப் போன ஏமாற்றம், மனமுறிவு, அவநம்பிக்கைபோன்ற உணர்வுகளை விட்டொழித்து, அற்புதமானபடைப்புத்திறன், நூதனங்கள் இயற்றல், துணிவாண்மை ஆகியவற்றால் நாம் உலகைப் பிரகாசப்படுத்திவருகிறோம்.  நமது நாட்டின் 25 கோடிக்கும் மேற்பட்ட நமதுமக்கள் ஏழ்மையிலிருந்து, பத்தாண்டுகள் என்றசாதனைக்காலத்தில் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.  இன்று நமதுஇளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் ஆகியோர்தன்னம்பிக்கையோடும், வினைத்திட்பத்தோடும்செயல்படுகிறார்கள்.  மனிதத்துணிவு, விண்வெளி, இணையவெளி, ஆழ்கடல் ஆய்வு, துளிமம் மற்றும் மீநுண்தொழில்நுட்பங்கள், நீடித்த தொழில்நுட்பங்கள், எண்ணியல்பொதுக்கட்டமைப்பு, பொதுநலத் திட்டங்களின் செயலாக்கம், பிணக்குத்தீர்வு, அமைதி போன்ற அனைத்துத் துறைகளிலும்பாரதத்தின் இருப்பு முழக்கமிடுகிறது.  உலகின் தயாரிப்புத்துறை மையமாக பாரதம் வேகமாக உருவெடுத்து வருகிறது.  அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பினைபாரதத்திற்கு இடம்மாற்றி வருகின்றன.  உலகத்தரம் வாய்ந்தஉட்கட்டமைப்புகளான சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள் போன்றவற்றை நாம் கட்டமைத்துவருகிறோம்.  ஆய்வுகள்-புதுமைகள் இயற்றலில் நாம் மகத்தானவீச்சை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  பாதுகாப்புத்தளவாடத் துறையில் நாம் தற்சார்பை நோக்கி முன்னேறிவருகிறோம்.  உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப்சூழலமைப்புகளில் ஒன்றாக நாம் விளங்கி வருகிறோம்.  ஒவ்வொரு முக்கியமான துறையிலும் நமது தேசியகுறிக்கோளான தற்சார்பை எட்டுதல் என்பதை நோக்கி நாம்தன்னம்பிக்கையோடு உழைத்து வருகிறோம்.  
 
நண்பர்களே, மனிதர்களை மையப்படுத்தி, சமச்சீரான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் நமது மாதிரியானது, பிராந்திய மற்றும் உட்பிராந்திய வளர்ச்சி இடைவெளிகளைஇட்டு நிரப்பி வருகிறது. நெடுங்காலம் விடுபட்டுப் போன, நமதுமுன்னேறும் பேரவா கொண்ட மாவட்டங்கள், முன்னேறியமாவட்டங்களுக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகின்றன.  சமச்சீர் வளர்ச்சியை மேலும் பரவலாக்க, முன்னேறும் பேரவாகொண்ட வட்டாரங்களுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும், இந்தமாதிரி நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  தொலைவானஊரகப்பகுதிகளில் வசிக்கின்ற, வாய்ப்புகள் குறைவான நமதுசகோதர சகோதரிகளுக்கும் சமச்சீர் நிலையையும், கண்ணியத்தையும் இது கொண்டு சேர்க்கிறது. 
 
போட்டித்தன்மை வாய்ந்த நமது வாக்கு அரசியலிலிருந்துபெரும்பாலும் விடுபட்டுப்போகும் மிகச்சிறிய சமூகங்களையும், நமது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிமாதிரிஅரவணைக்கிறது.  நாடெங்கிலும் சிதறிக்கிடக்கும், குறிப்பாக பலவீனமான பழங்குடிக் குழுக்களைச் சேர்ந்த நமதுசகோதர சகோதரிகள், வளர்ச்சியின் ஆதாயங்களைப் பெறமுடியாமல் இதுவரை இருந்தார்கள் என்பது கவலையளிக்கும்விஷயம்.  நமது மாநிலத்திலும் கூட, இப்படிப்பட்ட சுமார் 10 இலட்சம் பேர் இருக்கிறார்கள்.  ஜவ்வாது மலைகள், கல்வராயன்மலைகள், நீலகிரி மலைகள் மற்றும் இதர இடங்களில்இருப்போரின் பரிதாபமான நிலையை நான் பார்த்திருக்கிறேன்.  இவர்களில் பல்லாயிரக்கணக்கானோரிடம் தங்கள் இருப்பைநிரூபிக்கும் அடிப்படை ஆவணங்கள் கூட இல்லை.  மற்றவர்களுக்கு இணையாக இந்தக் குறிப்பிட்ட பலவீனமானபழங்குடியின மக்களை உயர்த்தி, அவர்களின் கண்ணியத்தைமீட்டெடுத்து, அவர்களின் அவலநிலையிலிருந்து மீட்கும்பணியை முதன்மையானதாக ஆக்கும் வகையில், போதுமானநிதியாதாரங்களை ஒதுக்கி, பிரதம மந்திரி ஜன்–மன்திட்டத்தைப் பிரதமர் மோடி அவர்கள்அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
 
நண்பர்களே, நமது மக்களின் தொழில் முனைவு காரணமாக, நமது மாநிலம் சிறு-குறு-நுண் தொழில்கள் துறையில் முன்னணிமாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.  ஜவுளி, தோல், வாகனங்கள், பொறியியல் பாகங்கள், மருந்தியல் துறைகளில்நமது மாநிலம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.  விவசாயத் துறையில் நவீன அறிவியல் மற்றும்தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, நமது விவசாயிகள் விரைவாகத்தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள்.  விவசாயத்துறையில் இணைந்து, தங்களுடைய நூதனமான எண்ணங்கள், தொழில் முனைவு காரணமாக அதில் மாற்றங்களை ஏற்படுத்தும்நமது இளைஞர்களுக்கு, நான் என் பாராட்டுக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்.  சிறுதானிய வேளாண்மை, இயற்கை விவசாயம் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையில்விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியிருப்பதும், அவர்கள்வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியைத் தவிர்த்துவருவதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
 
நண்பர்களே, குறிப்பாக ஊரகப்பகுதி மற்றும் புறநகர்பின்புலத்திலிருந்து வரும் நமது தாய்மார்களும், சகோதரிகளும்மிகுந்த வினைத்திட்பத்தோடு இருக்கிறார்கள்.  தமிழ்நாட்டின்சுமார் ஒண்ணரை இலட்சம் கோடி முத்ரா கடன் பயனாளிகளில், கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையினர் பெண்கள் தாம்.  ஊரகமாவட்டங்களுக்கு நான் சென்றிருந்த சிலவேளைகளில், அவர்களில் ஒரு சிலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது.  அவர்களுடைய உற்சாகம், துணிவாண்மை, நூதனங்களை உருவாக்கும் மனம் ஆகியவற்றால் நான் பெரிதும்கவரப்பட்டிருக்கிறேன்.  ஊரகப்பகுதி மற்றும் புறநகர்ப்பகுதிகளைச் சேர்ந்த, வினைத்திட்பம் உடைய நமதுதாய்மார்களும், சகோதரிகளும், நமது தேசத்திலும், பொருளாதாரத்திலும் மாற்ற மேற்படுத்தி வரும் அமைதியானபுரட்சியாளர்கள் என்பதை ஆணித்தரமாக உரைக்கும்நம்பிக்கையை இவர்கள் எனக்கு அளிக்கிறார்கள்.
 
தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்களுடையவியக்கத்தக்க செயல்பாடுகள் வாயிலாக, நமது மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பெருமை சேர்த்த நமது விளையாட்டுவீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் நான் என் நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தனிப்பட்ட ரீதியாகவும், குழுவாகவும் இணைந்து, மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள், ஏழைகள், ஆதரவற்றவர்கள் போன்றோருக்கு, மிகத்தேவையானகவனிப்பும், ஆதரவும் அளித்துவரும் கணக்கேயில்லாதபோற்றப்படாத நாயகர்களுக்கு, நான் என் நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நண்பர்களே, 2047-ஆம் ஆண்டுக்குள்ளாக, முழுமையாகவளர்ச்சியடைந்த, தற்சார்புடையதாக, நமது நாட்டைஆக்குவோம் என்ற மனமார்ந்த உறுதிமொழியை நாம்ஏற்றிருக்கிறோம்.  இதுவே நமது முன்னோர்களின் கனவாகஇருந்தது.  தங்கள் உயிராலும், உதிரத்தாலும், அந்நியஆட்சியிலிருந்து நமக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்த எண்ணற்றஉயிர்த்தியாகிகளின் கனவாகவும் இருந்தது.  இதுவேவ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியின் கனவாகவும் இருந்தது.  இந்த தேசியக் குறிக்கோளில் எந்த சமரசமும் கிடையாது.  இதை நிறைவேற்றிக் காட்டுவது நம் அனைவரின்குறிக்கோளாகும்.  
 
இந்த தேசியக் குறிக்கோளில், நமது மாநிலமானதமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது.  இதன்வளமான திறமைகள்-திறன்களைக் காணும் போது, இதனால்நமது தேசத்தின் வளர்ச்சியின் இயந்திரமாக இருக்க முடியும்.  இப்படிச் செய்ய வேண்டுமென்றால், நமது மாநிலம் அதன்உச்சபட்ச திறமைக்கேற்ப மேம்பட வேண்டும்.  ஆனால் இதுநடப்பது போலத் தெரியவில்லை. முக்கியமான குறியீடுகளின்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.  துரதிர்ஷ்டவசமாக, நமதுமாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
 
இளைஞர்கள் தாம் நமது மிக மதிப்பு வாய்ந்த சொத்துக்கள்.  இவர்கள் தாம் நமது எதிர்காலம்.  தமிழ்நாடு வளரவேண்டுமென்று சொன்னால், மிகச் சிறப்பான கல்வியும், திறன்களும் நமது இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும்.  மொத்த-சேர்க்கை-விகிதத்தில், தமிழ்நாடு முன்னணிமாநிலங்களில் ஒன்றாக இருப்பது மிகுந்த நிறைவைஅளிக்கிறது.  ஆனால் குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களின்கற்றல்-வெளிப்பாடு என்று காணும் போது, இது கடைத்தட்டில்இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது.  நமதுஅரசுப்பள்ளிகளில் இருக்கும் கற்றல் நிலை தொடர்பாக, கடந்தசில ஆண்டுகளின் கல்வி அறிக்கைகளின் வருடாந்தர நிலை, மிகவும் கவலையளிக்கும் ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது.  நமது அரசுப்பள்ளிகளில் இருக்கும் சுமார் 75 சதவீதம்மாணவர்களால், இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகங்களைக்கூட, சரிவரப் படிக்க இயலவில்லை என்பதோடு, 11 முதல் 99 வரையிலான இரண்டு இலக்க எண்களைக் கூட, அவர்களால்அடையாளம் காண முடிவதில்லை.  இரண்டு இலக்ககூட்டல்-கழித்தல்களைக் கூட அவர்களால் செய்யமுடியவில்லை.  அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதாரரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப்பள்ளிகளில்கற்றலில் ஏற்பட்டிருக்கும் இந்த செங்குத்தான சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்குள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்குஇழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும்.
 
நண்பர்களே, உயர்கல்வியைப் பொறுத்தமட்டிலும் கூட, நிலைமை சிறப்பாக இல்லை.  நமது 20 மாநிலபல்கலைக்கழகங்களில், சுமார் 25 இலட்சம் மாணவர்கள்சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  பெரும்பாலானபல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது.  அவைமோசமான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகின்றன, ஆசிரியர்களுக்கு ஊதியத்தைக் கூட அவற்றால் அளிக்கமுடியவில்லை.  கடந்த சில ஆண்டுகளாகவே, மாநிலஅரசிடமிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டியநிதிப்பங்கீடு கிடைக்கப் பெறவில்லை.  இதன் விளைவாக, பலபல்கலைக்கழகங்கள், 50 சதவீதத்திற்கும் குறைவானஆசிரியர்களின் எண்ணிக்கையோடு செயல்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் சேர்க்கைக்குத் தேவையான நிதிபல்கலைக்கழகங்களிடம் இல்லை.   நமது தேசத்தின்பெருமிதமாக விளங்கிய மதராஸ் பல்கலைக்கழகத்தில், 66 சதவீத ஆசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.   அரசாங்க நிதி, தொடர்ந்து கிடைக்காத காரணத்தால், சிலபல்கலைக்கழகங்கள் தங்களுடைய வருமானவரிஅறிக்கைகளில், தங்களை மாநில அரசுசாராபல்கலைக்கழகங்களாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. பத்து பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாகவேபதிவாளர்களும், தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களும் இல்லாமல்இருக்கின்றன. அவை தற்காலிக அடிப்படையில் இயங்கிவருகின்றன.  பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறை எந்தஅளவுக்குத் தீவிரமாக அழிக்கப்பட்டு விட்டது என்றால், அவற்றைபல்கலைக்கழக மாமன்றக்குழு அல்ல, மாநில தலைமைச்செயலகமே அவற்றை நிர்வாகம் செய்கின்றன.  பல்கலைக்கழகக் கல்விக்குழுவின் ஆளுமையின் கீழ்சட்டபூர்வமான வகையிலே வரக்கூடிய பாடத்திட்டத்தைஅமைக்கும் குழு விஷயத்தில், மாநில அரசின் உயர்கல்விக் குழுதயாரித்தளிக்கும் தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தையே பின்பற்றவேண்டிய கட்டாயத்தில் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.  நேர்மையான, அப்பழுக்கற்ற பல்கலைக்கழக அதிகாரிகள், பொய்யான, புனையப்பட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு, காவல்துறையின் அவமானகரமான உளைச்சலுக்குஆட்படுத்தப்படுகிறார்கள்.  துணைவேந்தர்கள் இல்லாமை, பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தின் நேரடிக்கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறது; ஏனென்றால், உயர்கல்வித் துறையின் செயலர் அப்போது நடைமுறையில்துணைவேந்தராகிறார்.  ஏற்கமுடியாத, அற்பமானகாரணங்களுக்காக, துணைவேந்தர்கள் நியமனத்தை நடக்கஇயலாமல் செய்வது என்பது, பின்வாயில் வழியேபல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தைச் சிதைக்கும்தவறான வழியாகும்.  இதனால் நிகர விளைவு கல்வித்தரத்தில்ஏற்பட்டிருக்கும் செங்குத்து வீழ்ச்சி. இத்தகைய வீழ்ச்சிகாரணமாக, மேலும் மேலும் பலபட்டதாரிகளுக்கு வேலைகிடைக்காமை; ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோர்பணிக்கமர்த்தமுடியா நிலையில் உள்ளார்கள்.  ஆய்வுகளின்பொதுவான தர நிலைகள் மிகத் தாழ்ந்த நிலையில்இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நமது பல்கலைக்கழகங்கள்உருவாக்கும் 6,000-த்திற்கும் மேற்பட்ட முனைவர்களில், 5 சதவீதம் பேரால் கூட, தேசியத் தகுதித்தேர்வு-NET, அல்லதுஇளநிலை ஆய்வு மாணவர் நிலை-JRF-க்கான குறைந்தபட்சஆய்வுத்தரத்திற்குத் தேர்ச்சி பெற முடியவில்லை.  பல மில்லியன்மாணவர்களின் எதிர்காலம் அபாயத்தில் இருக்கிறது.
 
நண்பர்களே, கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றி நிலவும்சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் தீவிரமானகவலையை அளிக்கிறது. சர்வதேச போதைப்பொருள்கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, சக்திவாய்ந்தபோதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கிவருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  இளைஞர்களுக்குபோதைப்பொருள் விற்கும் போது, அடிமட்டத்தில் இந்தக்குற்றங்களில் ஈடுபடுவோர், சிலவேளைகளில் அமலாக்கப்பிரிவுகளால் பிடிக்கப்பட்டாலும், போதைப்பொருள்கூட்டமைப்புக்களை இயக்கி வரும் பெரும்புள்ளிகள்தொடப்படுவதில்லை. போதைப்பொருள் கூட்டமைப்புக்களின்முக்கியப்புள்ளிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படவில்லைஎன்று சொன்னால், பெருகி வரும் போதைப்பொருள் அபாயம்,  நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும்.
 
நண்பர்களே, நமது தாழ்த்தப்பட்ட சகோதரசகோதரிகளுக்கு எதிரான, மனிதாபிமானமே இல்லாமல்இழைக்கப்படும் சமூகப்பாகுபாடுகள் பற்றிய செய்திகளை, ஒவ்வொரு நாளும் நாம் படிக்கும் போது, நமது இதயம் குன்றி, தலை அவமானத்தால் தாழ்ந்து போகிறது.  தங்கள்காலணிகளை அணிந்து கொண்டு கிராமத் தெருக்களில் நடக்கஅவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, பொது இடங்களில்அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.  இந்தப் பாகுபாட்டிற்குஎதிராக, அவர்களில் யாரேனும் தட்டிக்கேட்டால், அவர்கள்கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது சிறுநீர்கழிக்கப்படுகிறது, சிலவேளைகளில் அவர்கள் கொலையும்செய்யப்படுகிறார்கள். பள்ளி வகுப்பறைகளில் தாழ்த்தப்பட்டமாணவர்கள் தனிப்படுத்தப்படுகிறார்கள்; தாழ்த்தப்பட்ட மாணவர்யாரேனும் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டால், அவர்தாக்கப்படுகிறார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டசமூகத்தைச்  சேர்ந்த ஒரு பஞ்சாயத்துத் தலைவர் செயல்படஅனுமதிக்கப்படுவதில்லை என்பதோடு, அதிகார பூர்வமானகூட்டங்களில் அவர் நாற்காலியில் அமரக்கூடஅனுமதிக்கப்படுவதில்லை.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானகுற்றங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரானபாலியல் தாக்குதல்கள், தமிழ்நாட்டில் சீராக அதிகரித்துவருகின்றன.  ஒருபுறம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவன்கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கவும்படுகிறது.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களில் குற்றத்தீர்ப்பு, தேசிய சராசரியில் பாதியளவே இருக்கிறது.  2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில், மிகப்பெரிய கள்ளச்சாராய பெருந்துயர்கள், மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.  சுமார் 100 மனிதர்கள்இறந்தார்கள், பலநூறு குடும்பங்கள் கள்ளச்சாராயத்தால்நிலைகுலைந்து போயின.  ஏழை மக்களின் மரணத்திலும், அழிவிலும் இலாபம் அடையும் கள்ளச்சாராயத்தின்பெருமுதலைகள் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில், கீழ்மட்டத்தில் இருக்கும் கையாட்கள் சிலர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.  தங்களுடைய வாழ்க்கையையேசமூகநீதியை நிலைநிறுத்த அர்ப்பணித்த இரட்டைமலைசீனிவாசன் அவர்கள், எம்.சி. ராஜா அவர்களைப் போன்றதாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர்கள் பற்றிப்பெருமிதம் கொள்ளும் மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின்மீது இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.
 
நண்பர்களே, சில ஆண்டுகள் முன்புவரை, தனியார்முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக நமதுமாநிலம் இருந்தது.  ஆனால் இன்று முதலீட்டாளர்கள்தமிழ்நாட்டை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.  2021-22 ஆம் நிதியாண்டில், மாநிலங்களிலேயே அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில்ஈர்த்த 4-ஆவது மாநிலமாக தமிழ்நாடு இருந்ததோடு, 3 பில்லியன்அமெரிக்க டாலர்கள் அளவு முதலீட்டைப் பெற்றது. 2023-24 ஆம்ஆண்டில் நமது மாநிலம் 6-ஆவது நிலைக்கு வீழ்ச்சிகண்டதோடு, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவேமுதலீட்டைப் பெற்றது.  அதேவேளையில், கர்நாடகம் 6.5 பில்லியன் டாலர் அளவும், குஜராத் 7.3 பில்லியன் டாலர் அளவும், மஹாராஷ்டிரம் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவும்முதலீடுகளை ஈர்த்தன.  தெலங்காணாவும், ஹரியாணாவும்ஒருகாலத்தில் நமக்கு அடுத்த நிலையில் இருந்தார்கள்; ஆனால்இப்போது அவர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளிமுன்னேறிவிட்டார்கள்.  குறைந்து வரும் தனியார் முதலீடுகள், தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளின் வேகத்தைக்குறைத்திருக்கிறது.  இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும்.  முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் காரணங்களை நாம்அகற்றியாக வேண்டும். 
 
நண்பர்களே, ஒரு சமூகத்தில் நடக்கும் தற்கொலைகள் தாம்அதன் சமூக மற்றும் பொருளாதாரத் துயரின் அளவுகோல்.  நாட்டிலேயே மிக அதிக தற்கொலை வீதம் உடைய மாநிலமாகதமிழ்நாடு இருக்கிறது.  ஒரு இலட்சம் மக்கள் தொகைக்குசராசரி 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி.  நமதுமாநிலமான தமிழ்நாட்டிலோ, ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு26-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் என்ற நிலை இருக்கிறது.  இது தேசிய சராசரியை விட இருமடங்கிற்கும் அதிகமானது.  நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர்கள் ஒவ்வொரு ஆண்டும்தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  தமிழ்நாடு தான்இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்கிறார்கள் தரவுஆய்வாளர்கள். பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர்இளைஞர்கள், ஏழைகள்.  தீவிரமான சமூக மற்றும்பொருளாதாரத் துயர் நிறைந்த சூழல், வளர்ச்சிக்கும் நீதிக்கும்எதிரானது.  இதில் விரிவான உடனடி இடையீடுதேவைப்படுகிறது.
 
நண்பர்களே, தேசிய புலனாய்வு முகமை-NIA எனும்தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்மத்திய முகமை, நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்செயல்பட்டு வரும் தீவிரவாத வலையமைப்புக்களின்அலகுகளையும், இரகசியமாகச் செயல்படும் தீவிரவாதிகளையும்அவ்வப்போது கண்டுபிடித்து செயலிழக்கச் செய்து வருகிறது.  இவற்றில் சில தீவிரவாத அலகுகள், ஆஃப்கனிஸ்தான், மத்தியகிழக்கு மற்றும் மேற்காசிய நாடுகளில் இயங்கி வரும் சர்வதேசதீவிரவாத வலையமைப்புக்களோடு தொடர்பு கொண்டவை.  தேசிய பாதுகாப்பு பற்றிய மிகமிகத் தீவிரமான கவலையைஅளிக்கும் விஷயம் இது.  இது நமது சமூக நல்லிணக்கத்தைசீர்குலைத்து, நமது பொருளாதாரத்தைக் கடுமையாகத்தகர்க்கக்கூடிய திறன் கொண்டது.  மக்கள் விழிப்போடு இருக்கவேண்டும், அமலாக்க முகமைகள் தீவிரத்தோடு அவர்களைக்களையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே, 2047-லே வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும்பாதையில் நமது தேசம் தன்னம்பிக்கையோடு பயணிக்கும்வேளையிலே, உள்நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி, சிலசுயநலமிகளும், எதிரிசக்திகளும் நமது முன்னேற்றத்தின்வேகத்தைக் குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.  இனம், சமயம், மொழி, சாதிகளின் பெயரால் நமது சமுதாயத்தைப்பிளவுபடுத்தி, அதைச் சிதைக்க முயற்சி செய்கிறார்கள்.  தவறான, எதிர்மறை கூற்றுகள் வாயிலாக, நமது மக்களின்நெஞ்சுரத்தை பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.  நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், அரசியல்சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அமைப்புகளின் மீதும், நமதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில்பொய்யான கருத்துரைகளைப் பரப்பி வருகிறார்கள்.  இத்தகையதேசவிரோதக்கூறுகளுக்கு எதிராக, விழிப்போடு இருக்கவேண்டும் என்று உங்கள் அனைவரிடமும் நான்வலியுறுத்துகிறேன்.

நண்பர்களே, பாரதத்தின் அரசியல் சட்டம்ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆன வேளையை நாம்கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.   இது ஓராண்டுக்காலக்கொண்டாட்டம்.  இதில் அனைவரும் சுறுசுறுப்போடுபங்கெடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  நமது கனவுகள், நமது சிந்தனைகள், நமது இலக்குகள்அனைத்துமே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன.   நமது உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்புச் சட்டத்தில்இருக்கின்றன.  நாம் சென்று சேருமிடமும், திசைகளும்அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன.  ஒவ்வொருஇந்தியருக்கும், அனைத்திலும் மிகமிகப் புனிதமானபுத்தகமாகும் இது.  இது இந்திய மக்களாகிய நம்அனைவருக்கும் சொந்தம்.   இதை நாம் மீட்டெடுப்போம், உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் நாம் கொண்டாடுவோம்.
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நான் எனதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க தமிழ்,
வாழ்க பாரதஅன்னை.
--------------------------------------
ஆளுநர் மாளிகை, சென்னை-22
நாள்: 25.01.2025


Friday, January 24, 2025

ஆதிச்சநல்லூர் #adhichanallur ஆதிச்சநல்லூர் அகழாய்வின்போது இரும்புப் பயன்பாட்டின் தொன்மை

*ஆதிச்சநல்லூர் அகழாய்வின்போது இரும்புப் பயன்பாட்டின்  தொன்மை  மீது இவ்வளவு ஆர்வம் மக்களுக்கு தெளிவாக இல்லை* என்று  ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குனரும் மத்திய தொல்லியல் முன்னாள் கண்காணிப்பாளருமான சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் போது நான் ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில்  இருந்த போது கிடைத்த இரும்புப் பயன்பாடு மிகவும் தொன்மையானது என்பதை உணர்ந்து இருந்தேன்.  ஆனால் அதன் அடிப்படையில் அந்த அகழாய்வு குறித்து நான் எதுவும் எழுதவில்லை. உண்மையில்  அந்த அகழாய்வு  முடிந்தபின் அங்கு இருந்தவர்கள் எதை ஆய்வாக  அரசுக்கு அனுப்பினார்கள் என்றும் எனக்கு தெரியாது! ஆனால்  அம் முடிவுகள்  2900 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்பட்டது.







அதேசமயம் கேரள மாங்காடு பகுதியில்  அகழாய்வு செய்த போது அங்கு கிடைத்த இரும்பின் உபயோகம் ஆயிரத்தில் இருந்து ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் ஆராய்ச்சி முடிவில் தெரிய வந்தது.
நான் ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தபோது இரும்பின் மீது இவ்வளவு ஆர்வங்கள் எல்லாம் அங்கு உண்டாகவில்லை. மத்திய அரசும் அதன் ஆய்வுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பரிசோதிக்கிற திட்டமும் அப்போது இல்லை. ஆதிச்சநல்லூரில்  மறுபடியும் ஆய்வு செய்த போதும் கூட இரும்பின் தொன்மை குறித்த முடிவுகள் வரவில்லை. இன்றைய தொல்லியல்  ஆர்வத்தை விடுங்கள் உண்மையில் ஆதிச்ச நல்லூர் ஆய்வை அப்போது இருந்து முறையாகச் செய்திருந்தால் இன்னும் கூடப் பின்னோக்கிய   தமிழர் சமூகத்தின் பயன்பாட்டில் இருந்து வந்த இரும்பின் காலம் குறித்துச் சிறப்பாக அறிய முடிந்திருக்கும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.  

இந்த ஆய்வு முடிவு ஒருபுறம் இருக்க 
இங்கு சிலர் எல்லாம்  எங்கள் காலத்தில் தான் நடக்கிறது என்று   சொல்லிப் பெருமை பேசும் போது நமக்கு காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான் ஞாபகத்தில் வருகிறது ! ஆதிச்ச நல்லூர் நாகரிகம் முதன்மையானது வையபுரி பிள்ளை போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

இங்கு தாமிரபரணியின் தீராவாச கரையில் சிவகளை. அகழ் பணியில் முதுமக்கள் தாழியிலிருந்து  கிடைத்த இரும்புப் பொருட்களின் காலம் கி.மு. 2953முதல் கி.மு. 3345  ஆய்வுகள் சொல்கின்றன என தகவல். ஆதிச்சநல்லூரில் இரும்புப் பொருட்கள் கிடைத்தன. (காலம்  கிட் தட்டகி.மு. 2522.) இங்கே இரும்பு பயன்பாடு இருந்துள்ளது.

"ஆதி தச்சநல்லூர்" எனும் ஆதிச்சநல்லூர்,உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று. 1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரியவந்துள்ளது.

ஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.
ஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.
•••••••

பழந்தமிழரும் இரும்பும் >> இலக்கியச் சான்றுகள் :- 
     இற்றைக்கு 5200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் இரும்பினைப் பயன்படுத்தியிருப்பதும், தமிழர்களே இரும்பினை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்ற செய்தி வந்திருப்பதும் தெரிந்ததே!  இந்த இரும்புப் பயன்பாடு பற்றிச் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என இப் பதிவில் பார்ப்போம்.  பழந்தமிழர் இரும்புத் தாதுக்களைச் சேகரித்துச் சிறிய களிமண் உலையில் தோல் துருத்தியின் உதவியால் இரும்பை உருக்கி வந்திருப்பதைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகின்றது. உலைக்கலன்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் கொடுமணலில் கிடைத்தள்ளன (முதலாவது படம் காண்க).  இத்தகைய இரும்பு உலைகள் சூடான நிலையில் காணப்படுவதைப் பின்வரும் பாடல்வரிகள் காட்டுகின்றன.
`இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
  தோய்மடற் சின்னீர் போல  `
: நற்றிணை 133 :9-10
தலைவியின் காமநோய் சிறிது தணிவதற்கு உவமையாக `உலைக்கலனில் கொதிக்கும் இரும்பின் மீது நீர் தெளிக்கும் போது சூடு குறைவது` உவமையாகக் கூறப்படுகின்றது. மக்கள் அக் காலப் பகுதியில் நன்கு அறிந்திருந்த ஒன்றினையே புலவர்கள் உவமையாகக் கூறுவர், அவ்வாறாயின் உலைக்கலன்கள் அன்று பழந்தமிழரால் நன்கு அறியப்பட்டிருந்தது என்பதுதானே பொருள்.
அகநானூறு 202 ஆவது பாடலிலும் (அகம் 202: 5-7), அகநானூறு 72 ஆவது பாடலிலும் (அகம் 72: 3-6) உலைக்களத்தில் தீப்பொறிகள் பறக்கும் செய்திகள் சொல்லப்படுகின்றன.  
இரும்பு உருக்கும் இடம் `உலைக்களம்` எனவும் , உருக்கப்பட்ட இரும்பில் இருந்து கருவிகள் செய்யப்படும் இடம்  ‘கொற்றுறை’ எனவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
`பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
 கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்`
: புறநானூறு 95: 4-5

இரும்பு உருக்கும் தொழிலுக்குக் குறடு , துருத்தி ஆகிய கருவிகள்                                                                                                                                                                                                                                                                             பயன்படுத்தப்பட்டமையினைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. துருத்தியும் உலையும் இணையும் இடமானது, அதாவது துருத்தியின் குழாய் முனையானது `குருகு` எனப்படுகின்றது. குருகு எனப்படும் துருத்தியின் குழாய் முனையினை `உலைமூக்கு` எனவும் சொல்வர். இத்தகைய குருகு பற்றிய செய்தி அகநானூற்றுப் பாடலில் உண்டு. 
`நல் இணர் வேங்கை நறு வீ  கொல்லன்    
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி`

அகநானூறு 202 : 5-6

இரும்பின் மூலம் என்னென்ன கருவிகள் செய்யப்பட்டன? வேல், வில், அம்பு, வாள் போன்ற போருக்கான ஆய்தங்களும் அரிவாள், மண்வெட்டி போன்ற உழவுத் தொழிலுக்கான கருவிகளும் செய்யப்பட்ட செய்திகளைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதற்கான தொல்லியல் சான்றுகளை இரண்டாவது மூன்றாவது படங்களில் காண்க  {சிவகளை, ஆதிச்சநல்லூர் தொல்லியல் சான்றுகள்}.

 இரும்பு துருப்பிடிக்காமல் நெய் பூசிக் காக்கும் முறையினை   புறநானூறு 95 ஆவது பாடலில் {  காழ்திருத்திநெய் யணிந்து} காணலாம்.    

 இரும்பிலிருந்து  எஃகு ( Steel ) செய்யப்படுவது தெரிந்ததே!  எஃகு பற்றிய செய்தி நற்றிணையில் வருகின்றது.                      
`நெய் பட்டன்ன நோன்காழ் எஃகின்`
:  நற்றிணை 324-5 

இவ்வாறு எண்ணற்ற  இரும்புப் பயன்பாடு பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன, அவன்றினை இன்று வெளியான தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.
#NewIronAge

#ஆதிச்சநல்லூர்
#adhichanallur
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-1-2025.


பிரபாகரன்- பாண்டி பஜார் சம்பவம்

நேற்றைக்கு முதல் நாள், (22-1-2025) ஆலந்தூர் பாரதி மேடையில் பேசும் போது பிரபாகரனை பெயிலில் எடுக்குமாறு கலைஞர் தன்னிடம் சொல்லி  அவருக்கு பெயில் எடுக்கப்பட்டதாகச் சொல்லியுள்ளார்.
கடைந்தெடுதவர்களின் பொய்கள் இப்படித்தான் சுயலாபம் அடைகிறது!

நாக்கூசாமல்  எப்படித்தான் இப்படிப் பொய் சொல்கிறார்களோ தெரியவில்லை! உண்மையில் நடந்த விபரத்தையும் அக்காலங்களில் நான் அதற்காக எத்தனை முயற்சி செய்தேன் பாடுபட்டேன் என்பதையும் தருகிறேன்.

1986 ல் எனது திருமணம். அதற்கு முன்பு மதுரையில் முதல் டெசோ  மாநாடு நடந்து முடிந்திருந்தது. எனது திருமணத்திற்கு பிரபாகரன் வந்திருந்தார். எனது திருமணத்தில் வைத்து தான் கலைஞர் பிரபாகரனை சந்திக்கிறார்.

அதற்கு முன்பாக 1979 -82களிலேயே பிரபாகரன் தமிழ்நாட்டுக்கு வந்து விட்டார்! என்னுடன் வெகு காலமாக தங்கி இருந்தார் . ஒரு நாள் மாலை பிரபாகரன் என்னை தி. நகர் ராஜகுமாரி தியேட்டரில் படம் பார்க்க போகலாமா என்று அழைத்தார். எனக்கு வேறு சில வேலைகள் இருந்ததனால் நீங்கள் போய் வாருங்கள் என்று சொல்லிவிட்டேன்.அன்று  இரவு பிரபாகரன் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரின் வடக்கு புறச்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த  தான்  தனக்கு எதிரே பிளாட் இயக்கத்தின் தலைவர் முகுந்தன் வருவதை கீதா கபே முன் பார்த்து விட்டார்.  அப்போது  முகுந்தனும் பிரபாகரனைப் பார்த்துவிட்ட நிலையில் வாய் தகராறில் இருவருமே துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். ஒருவருக்கு ஒருவர் சுட அந்தத் தாக்குதலின் இறுதியில் முகுந்தன் தப்பிவிட்டார் எனினும் அந்தக் கலவரத்தின் காரணமாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பிரபாகரனைக் கைது செய்து கொண்டு போய் வைத்திருந்தார்கள்.  அந்த சம்பவத்தின் முதல் தகவல் எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. எம்ஜிஆர் தான் பிரபாகரனை கண்ணியமான முறையில் நடத்துங்கள் என்று சொன்னதன் அடிப்படையில் அவர் நன்கு ஆடை உடுத்தி ஃபேண்ட் சட்டை எல்லாம் போட்டு தான் அங்கு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தார். சிலர் சொல்வது போல ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்டார் என்று சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த  பொய்! கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில்  முகுந்தன் கைதாகி அழைத்து வரப்பட்டார்.

உடனே  இரவு 9.30 மணிக்கு நான் பாண்டி காவல் நிலையத்தில் சென்றேன்.
அங்கு தம்பியை சந்தித்தேன்.
அதன் பிறகு நெடுமாறன் எனக்கு பிரபாகரனை பிணையில் எடுக்கும்படி சொன்னார்.
அதன் பின் ஆகஸ்ட் 1982 வாக்கில் நான் ஆவணங்களை வைத்து அவரை பிணையில் எடுத்தேன். அப்போதும் அங்கு பிரபாகரன் கௌரவமாகத்தான் நடத்தப்பட்டார். அப்போது நான்  திமுகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை! தமிழ்நாடு ( காமராஜர்) காங்கிரஸ் கட்சிபொதுச்செயலாளராக இருந்தேன்.அதன் தலைவராய் பழ நெடுமாறனோடு இருந்தார். விபரம் தெரியாமல் யாரும் பேசக்கூடாது! உண்மையாக நடந்த சம்பவங்கள் அதற்கான ஆவணங்களைப் பார்த்துத் தான் பேச வேண்டும்!. இன்னும் என்னிடம் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் இருக்கின்றன!! மூத்த பத்திரிக்கையாளர் ஜூனியர் விகடன் ராவ் இருக்கிறார் தினமணி பத்திரிகை ஆசிரியர் கே வைத்தியநாதன், இருக்கிறார் கல்கிப் பிரியன், இந்து என். கணபதி, தாராசு ஷ்யாம் போன்றவர்களுக்கு எல்லாம் இந்த விபரம் தெரியுமே ஒழிய மற்ற இன்றைய இளம் பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் அன்று நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை தெரிய வாய்ப்பு இல்லை! இவர்களெல்லாம் என் நண்பர்கள் அவர்களிடம் விசாரித்தும் கூட யாரும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதே சமயத்தில் கலைஞருடன் எனக்கு 1979 முதல் நெருக்கமான உறவு இருந்தது! இப்போது போல் கைபேசி இல்லை. தொலைபேசியில் என்னிடம் அடிக்கடி பேசுவார்!

உண்மையைச் சொன்னால் அந்த பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டுக்கு பின்பு  அப்போது முதல்வராய் இருந்த எம்ஜிஆர் அவர்கள் பிரபாகரனை மூன்று மாதம் சென்னை மத்திய சிறையில் வையுங்கள் அதுதான் அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்! என்று சொன்னார். அதன் அடிப்படையில் சென்னை  சென்ட்ரல் நிலையத்தில் அருகே இருந்த மத்திய சிறைச்சாலையில் பிரபாகரன் இருந்த போது  வைகோவை அங்கே அழைத்துக் கொண்டு போய் சிறையில் பிரபாகரனை நான்தான் சந்திக்க வைத்தேன்.. அப்படித்தான் வைகோவுடன் எனக்கு முதல் பழக்கம் ஏற்பட்டது.

இதுதான் சரியான சுருக்கமான நடந்த உண்மைகள். தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம்.

பிரபாகரன் ஒருபோதும் பெரியாரையோ, திராவிட இயக்கங்களையோ குறை சொன்னதில்லை.

https://drive.google.com/file/d/1t4qPjvchu3mrSmSPbMKeAmrzrlFDPkF1/view?usp=sharing
••••

https://ksradhakrish.blogspot.com/2018/08/blog-post_13.html
••••

https://ksradhakrish.blogspot.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+
••••

https://ksradhakrish.blogspot.com/search?q=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

#பிரபாகரன்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
24-1-2025

Wednesday, January 22, 2025

இன்றெனை வருத்தும்

 இன்றெனை வருத்தும்

இன்னல்கள் மாய்க.
நன்மை வந்தெய்துக
தீதெல்லாம் நலிக....
அவரவர் வாழ்க்கையில்
ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்அந்த
நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்……..
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்..

காங்கிரசைத் தவிர்த்து விட்டு இந்திய கூட்டணிக்கு மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியைத் தலைமை தாங்கச் சொல்லுகிறார்கள்! அதை லாலு பிரசாத் யாதவ் ஆதரித்துள்ளார். சரத் பவார் இந்திய கூட்டணிக்கு காங்கிரஸ்

 காங்கிரசைத் தவிர்த்து விட்டு இந்திய கூட்டணிக்கு மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியைத் தலைமை தாங்கச் சொல்லுகிறார்கள்! அதை லாலு பிரசாத் யாதவ் ஆதரித்துள்ளார். சரத் பவார் இந்திய கூட்டணிக்கு காங்கிரஸ் தேவையில்லை என்ற வகையில் மௌனமாக அதற்கு சம்மதம் அளிக்கிறார்.பல மாநிலங்களைப் பொறுத்தவரையில் ராகுல் காந்தியின் காங்கிரஸ் தலைமை ஏற்கும் தகுதியை இழந்து விட்டது என்கிற மனநிலையில் இருக்கிறார்கள். இந்திரா காந்தியோடு காங்கிரஸ் முடிந்து விட்டது. போக அவர் காலத்திய பழி பாவங்கள் எல்லாம் இன்னும் இருக்கிறது. தமிழகத்தில் நெடுமாறன் போன்றோர் பலர் காங்கிரசை விட்டு நீங்கிய காலத்திற்குப் பிறகு தனது பாதுகாவலர்களாலேயே அவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த படுகொலையை இன்று வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் பல நல்ல தலைவர்களை நாளடைவில் இழந்துவிட்டது. அதுபோல ஈழத்தமிழர் விஷயத்தில் சோனியா குடும்பம் நடந்து கொண்டதும் தவறாகவே முடிந்தது. எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் இருக்கத்தான் செய்யும்! இதெல்லாம் இன்டியூஷன் தியரியைப் பொறுத்த அளவில் நடந்து முடிந்து போன விவகாரங்கள். இவற்றுக்கெல்லாம் இயற்கையாக பதில் சொல்லாமல் காங்கிரஸ் மீண்டும் இந்தியக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்கிற போது பல வகையான அதிருப்திகள் ஏற்பட்டிருக்கின்றன. வாரிசு என்கிற முறையில் கூட ராகுல் தேறுவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது!

இப்போதைக்கு இந்தியக் கூட்டணியின் நிலைமை இதுதான்!

எங்கே போகிறது அரசியல்? l அண்ணன் தமிழருவி மணியனின் அருமையான உரை!

 https://www.youtube.com/watch?v=-tL_bxXe0qs

இதுவும் தமாஷ்தான்… பழைய நடிகர் டணால் தங்கவேலு கூட தோற்று போவார்⁉️

 


The purpose of life is to contribute in some way to make things better,

The purpose of life is to contribute in some way to make things better, so have patience with all things, first of all with yourself. Understand Patience is not simply the ability to wait – it’s how you behave while you're waiting. Learning patience can be a difficult experience, but once conquered you will find life is easier. Know that anything and everything you have experienced has been purposeful; it has brought you to where you are now.....
12-12-2024


*Nothing to do against @actorvijay but for few people’s fear… It is only their own accord*

 *Nothing to do against @actorvijay but for few people’s fear… It is only their own accord*! ‘*சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா

⁉️’ என்பது போல இது*…
11-12-2024.


Tungsten mining #திமுகஅரசு NOC கொடுத்ததா? #ksradhakrishnanquestion?

 Tungsten mining #திமுகஅரசு NOC கொடுத்ததா? #ksradhakrishnanquestion?

இவை இவனால் என் ஆழ்மனதில் அடியிட்ட வார்த்தைகள்.
பயமறியாத் திமிர்
குறையறியா அறிவு
அவன் ஆளுமை.
சமூகம் அவனைப்பார்த்து ஏளனம் செய்யும் போதெல்லாம்
அறியாப்பதர்களுக்காவும் வருத்தப்பட்டுக்கொண்டே வழியொன்று்செய்ய விதியொன்று தேடியவன்.
வாழும்போது வாழ்வை பதிவு செய்!
தோல்வியில் முடிப்பதை விட
வெற்றியில் முடிக்கும் சக்தி உள்ளபோது முடித்துவிடு வாழ்வை.
வரலாறு சொல்லும் பிறப்பை.
பிறப்பொன்று உண்டெனில் உன் கண்ணம்மாவாகப் பிறந்திட வரம் கேட்கிறது உன்மேல் கொண்ட காதல்.

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*... ( *நான் பார்த்த அரசியல்*)

*தப்பு நடந்தா தலைவனிடம் முறையிடலாம்... ஆனா,அந்த தலைவனே தப்பு செய்தால் யாரிடமா போய் முறையிடுவது*...  ( *நான் பார்த்த அரசியல்*) " நாம் ஒர...