Tuesday, May 13, 2025

AP Dy Chief Minister’s concerned about Tamilnadu fisherman issue

 AP Dy Chief Minister’s concerned about Tamilnadu fisherman issue

தமிழக மீனவர்கள் இன்னலகள் குறித்து
ஆந்திரா துணை முதல்வர் பலன Pawan Kalyan garuஅறிக்கை
———————————————————-
சமீபத்தில் 5 வெவ்வேறு சம்பவங்களில், 24 இந்திய மீனவர்கள் இன்னல்களுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக நாகபட்டினத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி, காயமடைந்து, வாழ்க்காதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையே உள்ள இராஜாங்க நல்லுறவுகளை அடிப்படையாக கொண்டு, இது போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, நமது இந்திய வெளியுறவுத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், இரு நாடுகளும் இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வகையில் துரிதமான தீர்வை காண வேண்டும். எல்லைகள் மதிக்கப்பட வேண்டும். அதே வேளையில், இரு நாடுகளின் மீனவர்களின் கண்ணியமும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, நல்லிணக்கத்தின் மூலமும், பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சனைக்குப் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் - @PawanKalyan


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்