Tuesday, May 13, 2025

கனடாபொதுத்தேர்தலில்மார்க்கார்னிபிரதமர்

 #கனடாபொதுத்தேர்தலில்மார்க்கார்னிபிரதமர்

———————————————————-
ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற கனடா பொதுத் தேர்தலில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த லிபரல் பார்ட்டியே அதிக இடத்தில் வென்றிருக்கிறது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிக் கட்சியின் பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவைப்படுவதால் அங்குள்ள மற்ற சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து லிபரல் பார்ட்டி பெரும்பான்மையுடன்
ஆட்சி அமைக்க இருக்கிறது! அந்தக் கட்சியின் தலைவர் மார்க் கார்னி பிரதமர் அரியணையில் ஏற இருக்கிறார்!
2013 முதல் லிபரல் பாட்டியை வழி நடத்திய ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாவது முறையாகப் பிரதமர் அரியணையில் ஏறிய பிறகு அவரது நகர்வு மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கியது. பொருளாதார மந்த நிலை வெளியுறவுக் கொள்கைகளில் சொதப்பல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சொந்தக் கட்சிக்குள்ளாகவே கடும் எதிர்ப்பைச் சந்தித்தார் ட்ரூடோ! இதனால் தன் பிரதமர் பதவியையும் கட்சித் தலைவர் பதவியும் ராஜினாமா செய்திருக்கிறார்!
ஏற்கனவே நான் பலமுறை கூறியதுபோல கனடா வாழ் சீக்கியர்கள் பிரச்சினையில் இந்தியாவுடன் மோசமான உரசலை உண்டாக்கி இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டதற்கு இவர் தான் காரணமாக இருந்தார்! இவரது ராஜினாமாவிற்குப் பிறகு லிபரல் கட்சித் தலைவருக்கான தேர்தலிலும் அமோகமாக மார்க் கார்னி வெற்றி பெற்றார். அதையடுத்து இடைக்காலப் பிரதமராகவும் பணியாற்றினார். இப்போதான பொதுத் தேர்தலில் மக்களிடமிருந்து பெருவாரியான ஆதரவைப் பெற்று கனடாவின் புதிய பிரதமராகவும் மார்க்கார்னி பொறுப்பேற்கிறார்!
1965 ஆம் ஆண்டு கனடாவின் ஃபோர்ட் ஸ்மித் நகரில் பிறந்த மார்க் கார்னி ஆக்ஸ்போர்ட் ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர் !2008இல் கனடா பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து கொண்டு இருந்த போது மத்திய வங்கியின் தலைவராக பொறுப்பேற்ற கார்னி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சில திட்டங்களை வகுத்தார்! 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மத்திய வங்கி ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்! இந்தப் பொறுப்பை வகித்த பிரிட்டன் குடிமகன் அல்லாத முதல் நபர் கார்னி தான். அப்போதைய பிரதமர் ட்ருடோவுக்கு ஆலோசகராகவும் இவர் செயல்பட்டார்.
இன்றைய கனடாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதும் தான் கார்னியின் முதல் சவால்! தனது வெற்றி உரையில் “கனடா மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் நம்மைச் சீண்டிப் பார்க்கிறார். அவர் நினைப்பது ஒருபோதும் நடக்காது” என்று சொல்லி இருக்கிறார் கார்னி!
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் டிரம்பின் முயற்சிக்கு எதிராகக் கனடா மக்கள் ஒன்றிணைந்து கார்னிக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் கடந்த தேர்தலில் 25 இடங்களில் வென்ற நியூ டெமாக்ரடிக் பார்ட்டி இந்த முறை வெறும் ஏழு இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது! அந்த கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் என்பவர் தான் போட்டியிட்ட தொகுதியிலேயே தோல்வி அடைந்திருக்கிறார். இது கனடா மீதான இந்திய வெறுப்பாளர்களான சீக்கியர்களின் ஆதிக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது . கனடாவைப் பொறுத்தவரை 12 இடங்களில் வென்ற கட்சிக்கு மட்டுமே தேசிய அந்தஸ்து வழங்கப்படும்! எனவே இந்தப் படுதோல்விக்குப் பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார் ஜக்மீத் சிங்!
காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இருந்தார்! இந்திய அரசு மீது ஆதாரமின்றி அவதூறுகளைப் பரப்பிய அவரும் அவரது கட்சியினரும் கனடா தேர்தலில் படுதோல்வி அடைந்திருப்பது இந்தியாவிற்கான நற்செய்தி! என்கிறது மத்திய அரசு வட்டாரம்.
இதுகுறித்து நான் இரண்டு மூன்று முறை ஏற்கனவே எனது பதிவில் எனது காணொளிகளில் பேசி இருக்கிறேன். ட்ரூடோ இந்தியா வந்தபோது அவர் நடந்து கொண்ட விதம் பற்றியும் அவர் எவ்வாறு இந்திய விரோதப் போக்கை கையாளுகிறார் என்பதையும் தொடர்ந்து நான் பேசி வந்திருக்கிறேன். இதே காலிஸ்தான் ஆதரவாளர்களின் ஓட்டு வங்கியை தனக்குப் பயன்படுத்திக்கொள்வதில் தான் கவனமாக இருந்தாரே ஒழிய இரண்டு பெரிய நாடுகளின் உறவுகள் பற்றி அக்கறையற்றவராக ட்ரூடோ இருந்தார்! அவர் பிரதமராக இருந்தபோது காலிஸ்தான் ஆதரவாளரான ஹாதீப் சிங் நிஜ்ஜார்
கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருக்கிறது! என்று ஆதாரங்கள் ஏதுமின்றி குற்றச்சாட்டுகளை வைக்க இந்தியா கனடா உறவில் பெரும் விரிசல் உண்டானது!. இந்த உறவைச் சரி செய்ய முயற்சி எடுக்கப்படும் என இடைக்காலப் பிரதமராக இருந்தபோதே கார்னி தெரிவித்திருந்தார்! தனதுபிரச்சாரத்திலும் உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில் இந்தியா உட்பட ஒத்த கருத்து கொண்ட நாடுகளுடன் கனடாவின் உறவை மேம்படுத்துவது அவசியம் என்றும் கார்னி பேசி இருந்தார். தனது வெற்றிக்குப் பின்னர் “இந்தியாவுடன் உறவு கனடாவுக்கு மிக முக்கியமானது” என்று குறிப்பிட்டு இருக்கிறார் கார்னி. கார்னிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடியும் “நமது உறவை மேம்படுத்தவும். இரு நாட்டு மக்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்! மார்க் கார்னி புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் இந்தியாவுடனான கனடாவின் உறவு மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பும் என்று கணிக்கிறார்கள் சர்வதேச அரசியல் நிபுணர்கள்! கார்னியின் சர்வதேசப் பொருளாதாரப் பின்புலமும் அது சார்ந்த அறிவுப்புல நுட்பமும் கனடாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என்றே எனது அபிப்ராயமும் இருக்கிறது.இந்த மாற்றம் இந்தியாவைப் பொறுத்த அளவிற்கு சிறப்பானது! மேலும் இந்திய விரோதப் போக்கைக் கையாலும் அந்நிய நாடுகளில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கார்னி பிரதமர் ஆனது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கிறது என்பதும் உண்மை! இருநாட்டு பிரதமர்களுக்கும் இந்திய மக்களின் சார்பாக எனது வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்