Monday, May 12, 2025

தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டு தொடங்கி இருக்கிறது!

 


தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டு தொடங்கி இருக்கிறது!

Started in 1927 by Kalathi Mudhaliyar, this pocket-sized retail shop’s legacy has been the rose milk. This corner shop is nearly a century old and has been run by the same family for three generations. What started as a kutti kadai selling newspapers is now an iconic food spot attracting residents from across the city. Kalathi Rose Milk Shop has stood the test of time offering preservative-free, refreshing rose milk through the years and over time has gathered a huge fan following. — at Kaalathi Rose Milk.
என் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கிச் செல்கின்றன! 1980 84 85 களில் தம்பி பிரபாகரன் சென்னையில் தங்கியிருந்த நாட்களில் நானும் அவரும் சித்தரை வருடப்பிறப்பு அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வருவோம். பிறகு கேசவ பெருமாள் கோயில் சென்று விட்டு திரும்புவது வழக்கம்!
வழியில் இருக்கும் #காளாத்திகடையில் கிடைக்கும் சென்னையின் பிரசித்தி பெற்ற ரோஸ் மில்க்கை வாங்கிச் சாப்பிடுவோம். அவர்கள்தான் சாலைத் தெருவில் என் வீட்டிற்கு தினசரிப் பத்திரிக்கைகள் கொண்டு வந்து போடுவார்கள். இன்றைக்குத் தமிழ்ப் புத்தாண்டு!அந்தப் பகுதிக்குச் சென்றபோது பழைய நினைவுகள் வந்தன. காளத்தி கடையில் இறங்கலாம் என்றால் கூட்டம் அதிகமாகவும் இருந்தது. ரோஸ் மில்க் இருக்கிறதா அல்லது பன்னீர் சோடா இருக்கிறதா என்று கேட்டு டிரைவரை அனுப்பி ஒரு பன்னீர் சோடா மட்டும் வாங்கிக் குடித்துவிட்டு வந்தேன். காலங்கள் ஓடினாலும் நினைவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்