#அம்பேத்கர்அவர்களின் 135வதுபிறந்த நாள் இன்று நாடு முழுக்கக் கொண்டாடப்படுகிறது.. அவரை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள்! உத்தமர் காந்திக்கு இணையாக வைத்து இன்று அம்பேத்கர் பேசப்படுகிறார்.! சரிதான்!
அம்பேத்கர் சொன்ன “#பொதுச்சிவில்சட்டத்தில் காஷ்மீர்க்கான அரசியல் சாசனத்தின் #370பிரிவை #Art370நீக்க வேண்டும். அங்கே அது அவசியம் இல்லை.
#வலுவாமத்தியில்அரசு #strongcentreஅமைய வேண்டும். அதுபோக அவர் கூறிய ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த அரசியல் சாசனம் காலத்தில் பயன்படவில்லை எனில் அதைத் தூக்கி எறியலாம்!” இப்படி எல்லாம் சொன்னவர் தான் அம்பேத்கர். இப்போது அவரைக் கொண்டாடுகிறவர்கள் அவர் சொன்ன இந்தக் கருத்துக்களை மட்டும் ஏன் பரிசீலிக்க மாட்டேன் என்கிறார்கள். இது ஒரு விவாதிக்கப்பட வேண்டிய பொருள் என்பது தான் என்னுடைய கருத்து!
அதேபோல் “இந்துவோ கிறிஸ்துவோ புத்தமதமோ இஸ்லாமோ சீக்கியமோ எல்லா மதமும் சமம்தான்!. என்று அவர் சொன்னதும் உண்மை! இப்படி பல…. ஆனால் இதை எல்லாம் மக்கள் இன்று எப்படிப் பார்க்கிறார்கள் என்பதோடு மேற்கொண்டு இவை குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அவருடைய பிறந்த நாளுக்கு நாம் செய்யும் உண்மையான கடமையாகும்!

No comments:
Post a Comment