#நாளைசட்டமன்றத்தில்_மாநிலசுயாட்சிதீர்மானம் வருகிறது என தகவல்கள்… மகிழ்ச்சி….
1969 இல் இருந்து திமுக , மாநில சுயாட்சி மாநில சுயாட்சி என்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் திமுக 18 வருடங்களாக மத்தியில் அமைச்சரவையில் பங்கெடுத்தும் அங்கே போய் இந்த மாநில சுயாட்சி விவகாரத்தைப் பேச மாட்டேன் என்கிறீர்கள். அந்தப் 18 வருடங்களாக பல்வேறு வகையான சால்ஜாப்களைப் பண்ணிக்கொண்டு இருப்பது!
மத்திய-மாநில உறவுகளை ஆராய 1969இல் தமிழக அரசால் நிறுவப்பட்டது
கடந்த 1971 இல் இதன்அறிக்கையை சமர்ப்பித்தது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக அரசு பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஏ.லெட்சுமண முதலியார் மற்றூம் ஆந்திராவின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சந்திரா ரெட்டி ஆகியோரும் இதில் அங்கம் வகித்தனர்.
இதன் முக்கிய பரிந்துரைகள்:
நிதி ஆணையத்தை நிரந்தர அமைப்பாக மாற்றுதல்
திட்ட குழுவினை கலைத்தல்
அனைத்திந்திய பணிகள் கலைப்பு
சரத்து 356 மற்றும் 365 நீக்கம்
மத்திய பட்டியலில் உள்ள சில பகுதிகள் மாநில பட்டியலில் மாற்றம்
எஞ்சிய அதிகாரங்கள் மாநில பட்டியலில் சேர்ப்பு
கவர்னரின் விருப்பம் உள்ளவரை மாநில அமைச்சரவை பதவி வகிக்கலாம் என்ற வாக்கியம் நீக்கம்…என பல
பிறகு ஏதாவது பிரச்சனை சிக்கலகள் அல்லது தேர்தல் காலம் நெருங்கும் போது மட்டும் மாநில சுயாட்சி மாநில சுயாட்சி என்று பேச ஆரம்பித்து விடுவது. இதுதான் இத்தனை காலமாக திமுக ஆடும் கபட நாடகம்!



No comments:
Post a Comment