Monday, May 12, 2025

ஒரு மனப்பிறழ்வாள சநாதனியுடன்


 ஒரு மனப்பிறழ்வாள சநாதனியுடன்

விருப்பமின்றியே ஓர் உரையாடல்.
பொதிய வெற்பன் என்னும் பெயரன்
உபய குஷோலோபரி.
---
தமிழ் எழுத்துலகம் கேனையன்களை
க்கொண்டது என்ற அபத்தத்தை சதா
வாந்தியெடுத்துக்கொண்டிருக்கிற தடி
த்தனம் பற்றி என்ன பேசுவது? பொதி
யவெற்பன் என்கின்ற சண்முகசுந்தர
நேதாஜிஎன்ற பொதிகைச்சித்தர் என்ற
பொதி மூட்டையை ஏறத்தாழ50 ஆண்டு
நெருக்கத்தில் தெரியும். இந்தக் கூடா
நட்பு இப்போதுவரை ஏன் தொடர்கிறது
புதிர்தான்.பலரும் இப்படி அவஸ்தையி
ல் நெளிந்து கொண்டிருப்பதையும் அறிவேன்.
'பொதி" ஒரு பத்தி எழுதியிருப்பதாக அனுப்பியிருந்தார் நண்பரொருவர்.
அதன் சாராம்சம் கீழே‌:
க.நா.சு வின் வால் தஞ்சை ப்ரகாஷ்.
ஆசனவாய்: நா.விச்வநாதன்.
மீள் அவதாரம்: காலசுப்ரமணியம்
விரியன் நச்சுக்குட்டி.ராணி திலக்
அடிப்பொடிஆழ்வான்.சு.வேணுகோபால்.
இப்படி வரிசையாக இன்னும் இருக்க
லாம்.ஏனெனில் இவரது பேனாவில்
எப்போதும் கழிவுநீரை நிரப்பிக்கொ
ண்டிருப்பார். தன்னைத்தவிர வேறு
எவரையும் விட்டு வைத்திருக்க வாய்ப்
பில்லை.தானே மிகச்சிறந்த "பிரிமியம்"
ரைட்டர்.அப்புறம் தரம்,உயர்தரம்,அதி
உயர்தரம் ஸ்பெஷல் உயர்தரம்,மிக
உயர்தரம் என்று பழனி ஆண்மைக் கு
றைவு சித்த வைத்தியசாலை ரேஞ்சுக்
கும் சொல்லலாம்.இது ஒரு நோய்மைக்
குறியீடு உரிய அங்கீகாரம் கிடைக்க
வில்லை என்ற அரிப்பின் வெளிப்பாடு.
அங்கீகாரம் பெற வேண்டுமானால் அர்ப்பணிப்போடு எழுதவேண்டும்.
நன்றாக எழுதவுண்டும் என்கின்ற
அடிப்படை ஞானம் வேண்டும்.
"மதமரபின் அந்தங்களின் அரசியலும்
எதிர்மறையினர் சிறப்யபு அறியவொ
ணாத் தாரை வார்ப்பும் எங்கே சமயம்
முடிகிறதோ அங்கே ஆன்மிகமான
சமயத்தன்மையே சித்தரியமாம்......."
இது பொதி தமிழ்.மருட்டுகிற எழுத்தை
வைத்துக்கொண்டு போர்க்களத்தில்
நிற்பதாக எண்ணம்.இவர் தமிழுக்காக
என்ன போராடி இருக்கிறார் அல்லது
சமூக அவலங்களை எதிர்த்து என்ன
போர் புரிந்திருக்கிறார்.அறியேன் பரா
பரமே. நண்பர் தன் மகளுக்கும் மக
னுக்கும் அலைந்து திரிந்து கச்சிதமாக
தம் சாதியிலேயே மணமுடித்த கதை
சுவாரசியமானது.இதற்காகக் கூச்சப்
படுவதே இல்லை. இது அவருக்குப்
பிழையாகவும் தோன்றாது.அவர்‌பிள்
ளை பெரியவாச்சான் மாதிரி.
தாங்களே தங்களுக்கு விருது அறிவித்
துக் கொள்ளும் அவலம் விண்ணப்பி
த்து விருது வாங்குவது குறித்து வாய்
கிழியப் பேசிவிட்டு தானே சில ரகசிய
ஏற்பாடுகளைச் செய்து விருது முடிந்
து கொண்டதை அறிவோம்.
"போலிகளின் நரி முகத்தை பொய்மை
களின் அறிமுகத்தை தோலுறித்துக்
காட்ட வந்தேன் " என்ற உங்களுடைய
ஆவேச அறிவிப்பு சரி.அப்படியே கண்
ணாடிமுன் நின்று உங்களையே பாரும்
நண்பரே.உங்களது ஒன்றல்ல ஏராள
மான பொய் முகங்கள் தென்படும்.பொ
ய்களில் இரண்டு விதங்கள் இருக்கி
ன்றன ஒன்று மேலும் மேலும் பொய்க
ளுக்கு வழிநடத்திச்செல்லும்.மற்றொ
ன்றுபொய்களுக்கு அப்பால் இட்டுச்
செல்லும்.இதில் நேற்றுவரை உற்ற
நண்பராக இருந்த பொதி யோசிக்க
வேண்டும்.
தஞ்சை ப்ரகாஷ் க.நா.சுவின் வால்.
நா.விச்வநாதன் க.நா.சுவின் ஆசன
வாய்.....என்பது உம் கருத்து வக்கிரம்.
தஞ்சைக் கூட்டங்களில் க.நா.சுவை
ஆஹா ஓஹோ என்று பேசிய பொதி
யை நண்பர்கள் அறிவர்.மார்க்சியத்
திற்கும் அஃதே துணை என்று அந்தப்
பேராசானையே ஒன்றும்தெரியாதவரா
க எழுதியது துணிச்சலல்ல புகழ் அரிப்
பு. இப்போது சொறிந்து விட யாரும்
இல்லை என்ற வருத்தமும் புரியுது.
"சற்சூத்திர நாஞ்சில் நாடனின் சனாத
ன அகமலம்" ன்னு ஏதோ புத்தகம் போட்
டிருக்கிறீகள்களா அல்லது வேறுஏதே னும் கட்டுரையா? இப்படி நிறையப்
போட்டிருந்தால் குறிப்பிடுக.வாசிக்க
வேணும் . இந்த லிஸ்டில் வேறு யாரும்
உண்டா?
மகளுக்குத் திருமணம் என்று கூறி
வசூலித்தீர்கள் பிழையன்று.உள்ளது
தான்.அதன்பிறகு வசதி வந்தபிறகு
திருப்பிக் கொடுப்பதுதான் அறம் என்
பதை உணரவில்லை.தஞ்சாவூரை
விட்டுப்போகும்போது யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல்தானே கிளம்
பினீர்கள்.கும்பகோணத்தில் நண்பரும்
இசைவிமரிசகர் SBI யில் கடன்தொகை
வாங்கித் தந்தாரே.அதைத் திருப்பித்தந்
துவிட்டீர்களா.இதன் காரணமாக நண்
பருடன் சண்டை.பாவம் அந்தக் கலை
விமரிசகர் தானே கடனைக் கட்டிவிட்டு
பெரியமனஉளைச்சலுக்கு ஆளானாரே
தெரியுமா?. அடிப்படை அறம் என்ற
ஒன்றிருக்கிறது அறிவீரா நண்பரே?
உங்கள் வீட்டுத்திருமணத்தை கச்சித
மாகத் திருநெல்வேலிப் பிள்ளைமார்
உட்பிரிவு உட்படக் கவனமாகப் பார்த்து
ஏற்பாடு செய்ததை அறிவோம்‌.இதை
மீண்டும் மீண்டும் சொல்லவேணும்.
சந்துகளில் நின்று வசைபாடும் பழக்
கம் போகவில்லையா? முதுமை அழகு
கனிந்திருக்கவேண்டும்.உங்களுடைய மொழிநடைபோல நீங்களும் கரடுமுர
டாக இருக்கக்கூடாது.உங்கள் தமிழை
ஓர் ஆள் வைத்துத்தான் மொழிபெயர்
த்துப்புரிந்துகொள்ளவேண்டியிருக்கி
றது.ஒரே விளையாட்டைப் புதுப்புதுப்
பெயருடன் விளையாடக்கூடாது.தமி
ழுக்கு தங்கள் பங்களிப்பு என்ன ?
ஏராளம் என்று நீங்களே அறிவிப்பது
பிழையன்றோ? இது உங்கள் பிரமை.
இதிலிருந்து விடுபட வேண்டும் பொதி!
வசை இலக்கியத்தில் பிஎச்டிக்கு சற்று
முயலுக‌.
நான் எப்போதும் உங்களிடம் அதீதக்
கருணையுள்ளவன்தான் என்றறிவீர்.
உடனே அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ்
ஜே.கிருஷ்ணமூர்த்தி பிரமிள் ஆத்மா
நாம் என்று பயமுறுத்தாதீர்கள்.பாப்பா
ரப்பயல் என்ற வழக்கமான சொல் ஏது
ம் வேண்டாம்.அவர்களே என்னைத் தன்
னோடு சேர்த்துக்கொள்வதில்லை.இப்
போதும் தலித் ஆலயப்பிரவேசத்தை
முன்னெடுத்ததற்காக ஊர்விலக்கத்
தில் இருக்கிறேன் என்றறிக.என் பணி
எழுத்து மட்டுமல்ல "களம்" எங்கள்
வீட்டிலேயே சாதி மறுப்புமணம் உண்டு.
உங்களிடம் பேசுவதற்கு என் மனதைப்
பயன்படுத்தியாக வேண்டும்.இந்த
நோய் உங்களிடம் இருந்துகொண்டே

இருக்கிறது.முதுமைக்காலத்தில் கோ
யில் குளம் தீர்த்த யாத்திரை போவது
மரபுதான்.இதில் பிரச்சனை இல்லை
உங்கள் வீட்டு விசேஷங்கள் அனைத்
துமே வைதிகச் சடங்குகளோடுதான்
நடந்தன;நடக்கப்போகின்றன.
தஞ்சாவூருக்கு வரும்போது தெரிவிக்க
வேண்டுகிறேன்.நல்ல ஃபில்டர் காபி
அருந்தி உரையாடுவோம். க்ஷேமம்.
இப்படிக்குக் கீழ்ப்படிதலுள்ள.
க.நா.சுவின் ஆசனவாய்.
நா.விச்வநாதன்.
--

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...