Thursday, May 8, 2025

சாகர் வியூஸ் & ரிவியூஸ்'ன் நாளைய செய்தி...

 





சாகர் வியூஸ் & ரிவியூஸ்'ன் நாளைய செய்தி...

திமுக தான் தொடர்ந்து ஆட்சியிலிருக்க, அஇஅதிமுக தற்போதைய அரசுக்கெதிரான அதிருப்தி அலையில் இயற்கையாக தனது வாய்ப்பினை பெற்றிடாதிருக்க, தனது ஒட்டு மொத்த அம்புகளையும் பல விதமாக பலப்பல யுக்தியாளர்களைக்கொண்டு முன்னெடுப்பது வழமையே.
அதில் இப்படியான மனச்சலவைகள் அதிமுகவிற்கான ஆதரவு வாக்குகளை குழப்பிடுவதிலும் சலனத்தினைக் கொள்வதிலும் வழி வகுக்குமென்பதால் பாஜக ஆதரவு ஊடக விற்பன்னைர்களும் சிரமேற்கொண்டு எஜமானர் விசுவாசத்தில் சமூகவலைத்தள கருத்துத்திணிப்பினை முன்னெடுக்கின்றனர்.
நம்மைப் பொறுத்தவரை தவெக என்பது திமுகவின் மூன்றாவது தத்துப்பிள்ளை. வருகின்ற 2029 பாராளுமன்றத் தேர்தல் வரை பளபளக்கும்.. அதன் பின்பு பல்லிளிக்கும்.... இரண்டாவது பிள்ளை போல்.
திமுகவின் பட்டத்து இளவரசர் மற்றும் எதிர்காலப் பட்டத்து இளவரசர்க்கு நேரடிச் சவாலானவர்களை ' என்றும் ' வளரவோ, வளர்த்துவிடவோ அக்கட்சி கற்பனையிலும் துணியாது.
ஆகையால் சுயக்காலில் ஆட்சிக்கு வரக்கூடிய அஇஅதிமுகவிற்கு தவெக எனும் ஊன்றுகோலை எப்படியாவது திணித்துவிட தங்களது இராஜதந்திரங்களை சாணக்கியத்தனத்தோடு பலர் செயல்படுவதை அஇஅதிமுக தலைமை(கள்) புரிந்து கொண்டு அவர்கள் விரிக்கும் வலைகளில் சிக்கி படுகுழியில் விழாதிருக்க....
அந்த பொன்மனச்செல்வரும் பொன்மனச்செல்வியும் தான் துணையிருக்க வேண்டும்.
வலிமையான இந்தியா.. வளமான தமிழகத்திற்கு பிள்ளைப்பூச்சியான அஇஅதிமுகவின் கரங்கள் என்றும் உயர்ந்திருப்பதே நம்மைப் போன்ற சாமானியர்களின் கட்டக்கடைசி நம்பிக்கையாகும்.
நாளைய செய்திக்காக...
நடுவை வெ. பிரேம் சாகர்
நிறுவனர்-ஹிந்துக்கள் ஒருங்கிணைப்பு மையம்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்-தமிழக மக்கள் கட்சி

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்