விசுவாவசு ஆண்டு நன்கு பிறந்துவிட்டது.
வெற்றியும், நலமும், நல் ஊக்கமும் தருகிற புத்தாண்டாய் இது பொலியட்டும்
மனம் நிறைந்த #தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் . மேஷ ராசியில் சூரியனின் பிரவேசம் என்பதும் நமக்கு வசந்தம்தான் . பூக்களால் காய்களால் கனிகளால் விதைகளால் நிறைந்த மாதம் . சிறு வண்டு பறவைகள் யானை என அனைத்துயிர்களுக்கும் வசந்தம் . சூரியன் தனது உச்ச வீட்டில் வந்து சேர்ந்துவிட்டது. இன்னும் முப்பது நாட்கள். நம் மலைத்தொடர்களெங்கும் பூத்துக் குலுங்கும் காடுகள். வாகை, பலாசு , நீர்மருது, சரைக்கொன்றை , மந்தாரை என இலட்சக்கணக்கான மலர்கள் பல வண்ணங்களில். நிறைய நிறைய வெயில் பழுத்த இனியப் பழங்கள் மா, பலா வாழை, நாவல் , என நூற்றுகணக்கானவை. வயல்களில் நீர்ச்சத்துகொண்ட கொடிகளில் விளையும் வெயில் கருக்கொண்ட பல்வேறு காய்கறிகளும் பழங்களும்.. அம்மம்மா என்ன ஓர் அதிசயம். நம் சகயாத்ரி மேற்கு மலைகளின் மாயாஜாலம். சுட்டெரிக்கும் சூரியனைக் கூட காடுகள் எவ்வளவு அழகாக மாற்றுகின்றன . நம் முன்னோர்கள் இதைப் புரிந்துகொண்டு கொண்டாடத் தொடங்கியது அவர்களின் இயற்கையை இரசிக்கும் விதத்தையும் அறிவையும் அழகாக உணர்த்துகிறது .
கலாச்சாரம் பிரபஞ்ச இயக்கம் முக்கியமாக சூரிய மண்டலத்தில் கோள்களின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டு நாம் எப்படி பேணவேண்டும் மனதை எப்படி ஒருமுக படுத்த வேண்டும் , பஞ்சபூத
தத்துவத்தோடு எப்படி இயங்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டது ..
அகஸ்தியர் .. திருமுலர் மிக அழகாக இப்படி ஒரு வாழ்வியலை வகுத்து வைத்துள்ளார்கள் மற்றும் , நம் சித்தர்கள் தாங்கள் உணர்ந்ததை .. அறிந்ததை தெளிவான சித்தாந்ததமாக நமக்கு வழங்கியுள்ளனர்.
இந்த தமிழ்மண்ணில் பிறந்து வாழ்வதில் இந்த கலாரத்தை பின்பற்றுவதில் ஆனந்தம்!
புது விடியல்,
பொற்கதிர் தீபம்,
மஞ்சள் குங்குமம்,
மணம் மலர்ச்சி,
கனிக் காண
கண்ணின் கனவுகள்,
வாசல் தோரணம் - வாழ்வின் நிதர்சனம்...
பழைய வேதனை
பனிப்போல் நீங்கி,
நண்பர்களுக்கும் இப்புத்தாண்டில் சித்திரையின் அன்பான இனிமை, புதுமை, வளமை என சகல செல்வங்களும் செழிக்கட்டும் 

No comments:
Post a Comment