Saturday, May 3, 2025

இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும்

 இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில் ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலக அளவில் தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் 45 என்பவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்! அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சிறை அதிகாரிகளை எதிர்த்துக் கேள்விகள் கேட்டேன். அதற்கு பலி வாங்கும் விதமாக என்னைக் கடுமையாக அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர் என்று முறையிட்டுள்ளார்.
மேற்கண்ட வழக்கை விசாரிக்கும் போது தான் தமிழ்நாட்டில் போலீஸ் அராஜகம் அதிகமாக இருக்கிறது என்கிற முறையில் பொதுவாக நாட்டில் வகைத்தொகை இல்லாமல் நடக்கும் ஊழல்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற முறையில் நீதிபதிகள் தங்கள் கருத்தை வன்மையாகத் தெரிவித்துள்ளார்கள்.
இரும்பு காலம் இருக்கட்டும்! உங்கள் ஆட்சி பொறுப்பான காலத்தில் இருக்கிறதா? என நீதபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இன்றைய ஆட்சியை கேட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன ⁉️என்ன #திராவிடமாடல்❓

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...