Saturday, May 3, 2025

இதெல்லாம் என்ன வேடிக்கையென்றே புரியவில்லை!

 இதெல்லாம் என்ன வேடிக்கையென்றே புரியவில்லை!

#அரிட்டாப்பட்டியில்டங்ஸ்டன்ஆலை வருவதாக முறையிட்டு அதைத் தடுத்து நிறுத்தச் சொல்லியதாகவும் அதன்படியே மத்திய அரசு அதை வாபஸ் வாங்கி விட்டதாகவும் அப்படித் தடுத்து நிறுத்திய பெருமைக்காக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நாளை மதுரையில் பாராட்டு விழா எடுக்கிறார்களாம்!
முதன் முதலாக இந்த டங்ஸ்டன் ஆலையை நிறுவுவதற்கு இதே தமிழக அரசிடம் என் ஒ சி அனுமதி பெற்று தான் அந்த அறிவிப்பும் அதற்கான இடங்களும் வரையறை செய்யப்பட்டது.
இதே போல்தான் எனது கிராமத்தில் #குருஞ்சாக்குளத்தில் அமையவிருந்த #கிராபைட் தொழிற்சாலைக்கும் தமிழக அரசு என்ஓசி வழங்கியிருந்தது. என்னுடைய கிராமத்தில் ஏறக்குறைய 18க்கு மேல் ஆன கிராமங்களில் விவசாயி மக்களும் இந்த பாக்ஸைட் தொழிற்சாலையால் பாதிக்கப்படுவார்கள் என்று மக்களை திரட்டி நான் போராடியது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அதற்கான தடையுத்தரவை ஆறு மாதங்களுக்குள் பெற்று அந்த கிராபைட் தொழிற்சாலைத் திட்டத்தை வாபஸ் பெறச் செய்தேன்!
அப்படியெல்லாம் செய்ததற்கு எனக்கு விழா ஒன்றும் இல்லையே!
அதை நான் கேட்கவும் இல்லை! நான் எம் பியோ மந்திரியோ கிடையாது! வெகு சாதாரணமான அடியேன்! மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்கும் கடமையைத்தான் செய்தேன்!
உண்மையில் இந்த அரிட்டாபட்டி விவாகரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் அமர்ந்து இந்த நற்காரியத்தை முடித்துக் கொண்டு வந்தார். அவருடைய முழு முயற்சியின் பெயரால் தான் அத்திட்டம் வாபஸ் வாங்கப்பட்டது என்பதைக் கூட ஒப்புக் கொள்ளாமல் எல்லா புகழும் எனக்கே என்று ஸ்டாலின் புகழ் கூட்டம் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்!
செய்தவர்கள் இருக்க இதில் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா திமுகவிற்கு பாராட்டு விழா என்று பெருமை அடிப்பதில் என்ன இருக்கிறது? இதற்கு முன்னால் இந்த திட்டங்களுக்கு என்ஓசி கொடுத்து அதை வரவேற்று விட்டு இப்பொழுது நான்தான் தடுத்தேன் என்று பாராட்டுக்கு நின்றால் என்ன அர்த்தம்!
ஊர்ல கல்யாணம்னா மார்ல சந்தனம் என்பார்கள் போலிருக்கிறது. உண்மையில் மக்களுக்குப் பாதிப்பான திட்டங்களை தடுத்தவர்கள் யாரோ இருக்க நாங்கள்தான் அனைத்தையும் செய்தோம் என்று வெற்றுப் பெருமை பேசுவது திமுகவினருக்கு வழக்கமானதுதான்! இப்படித்தான் எடுத்தவன் நான் இருக்க பிரபாகரனைப் பெயில் எடுத்தோம் என்று கதை விட்டார்கள்.

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...