‘அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்டக் கோழைக்கு இல்லம் எதற்கு? கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு?’
எங்களைப் போல அரசியல் அனுபவமும் சுயமரியாதை உள்ளவர்களையும் அவருடன் இருக்க முடியாது . அவரது போக்கால் நிகழ்வது என்னவென்றால் அவர் தள்ளிவைத்த அல்லது விலக்கி வைத்த விட்ட அந்த சுயமரியாதைக்காரர்களும் அரசியல் திறமையோடு அனுபவம் உள்ளவர்களும் முதல்வரது போக்கை நாமும் மதிக்க வேண்டியதில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அறிதலும் புரிதலும் இல்லாதவர்கள் அருகில் இருக்க ஓட்டுக்குப் பணம் கொடுத்து வாக்கு வாங்கிவிடலாம் என்ற நினைப்பில் பணத்தை வைத்துக்கொண்டு ஊடகங்களில் திமுகவை பரப்புரை செய்வது போன்றவை தான் தொடரும் எனில் இந்த நிலைமை அதிக காலம் நீடிக்காது.
அண்ணாவும் கலைஞரும் திமுகவை வடிவமைத்த விதத்தில் அதைக் காப்பாற்றிக் கொண்டு போகாமல் ஜெயலலிதா போல கட்சிக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அல்லது கட்சிக்குள் கோட்பாடு அரசியல் தெரியாதவர்களை அனுமதித்தால்
திமுக தன்னிலை இழக்க வேண்டிய வரும் என்பதற்கு ஆன சகுனங்கள் தெரிகின்றன. வருமுன் காத்துக் கொள்வது நலம்! ஓட்டுக்கு பணம், கைவசம் ஊடகங்கள், தின ஏடுகள்
என்ற தைரியம் மட்டுமே திமுகவுக்கு…

No comments:
Post a Comment