Saturday, May 10, 2025

வக்புசட்டதிருத்தம்

 #


வக்புசட்டதிருத்தம்

#Waqf (#Amendment) Bill, 2025,
———————————-
முதல்வர் ஸ்டாலின் அவர்களே!
நேற்று சட்டமன்றத்தில் வஃக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்குத் தொடர்வேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்! உங்கள் ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி!
A waqf (Arabic: وَقْف; [ˈwɑqf], plural awqaf أَوْقَاف), also called a ḥabs (حَبْس, plural ḥubūs حُبوس or aḥbās أَحْباس), or mortmain property, is an inalienable charitable endowment under Islamic law for Islamic poors. It typically involves donating a building, plot of land or other assets for Muslim religious or charitable purposes with no intention of reclaiming the assets. A charitable trust may hold the donated assets. The person making such dedication is known as a waqif ('donor') who uses a mutawalli ('trustee') to manage the property in exchange for a share of the revenues it generates. A waqf allows the state to provide social services in accordance with Islamic law while contributing to the preservation of cultural and historical sites. Although the waqf system depended on several hadiths and presented elements similar to practices from pre-Islamic cultures, it seems that the specific full-fledged Islamic legal form of endowment called waqf dates from the 9th century AD
அண்ணாவின் காலத்தில் அன்றைக்குத் தேவையான இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மாநில சுயாட்சிக் கோரிக்கைகள் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது திராவிட நாடு என்றெல்லாம் பேசிய தொனியிலேயே இன்றைக்கும் நீங்கள் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அதையே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்! இதற்கிடையில் அந்த அண்ணா குடும்பத்தையும் மறந்து விட்டீர்கள், உங்கள் குடும்பத்தை மட்டும் அரசு பதவிகளில் நிலைநாட்டிக் கொண்டு விட்டு மீண்டும் பழையபடி அண்ணாவின் பேச்சையே துவக்கி துவக்கிப் பேசுகிறீர்கள்!
இன்றைக்கு உலகமயம் தாராளமயம் என்றெல்லாம் உருவாகிவிட்டது. நீங்களும் துபாய் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குச் சென்று அந்நிய முதலீடுகளைத் தமிழ்நாட்டுக்கு என்று கொண்டு வருகிறீர்கள்! அதனால் தமிழகம் என்ன பயன் பெற்றது என தெரியவில்லை இன்று வரை. இது வேறு விடயம். இருக்கட்டும். இதையெல்லாம் அண்ணாகாலத்தில் ஒரு செயலாக்கமாக கூடப் பார்க்க முடியாது! இவ்வளவு உலகமயமாக்களுக்கு பிறகு பன்னாட்டு மூலதனமா அதுவும் வேண்டும் அண்ணா சொன்ன இதுவும் வேண்டும் என்று இந்தித்திணிப்பு இந்தி திணிப்பு என்று எதையும் திணிக்காத ஒன்றைச் சொல்லிச் சொல்லியே பழைய குருடி கதவைத் திறடி என்கிற கதையாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்தையும் உங்களது சுயநலமாக மாற்றிக் கொண்டு மேலும் கீழும் ஆடியபாதமாக இருக்கிறீர்கள்! இன்னும் முறையான அறிவிப்பு வராத சூழ்நிலையில் தொகுதி மறு சீரமைப்பு பற்றி எதிர்ப்புத் தெரிவிப்பதாக மக்களிடம் பிரச்சாரம் செய்கிறீர்கள்.
நேற்று நாடாளுமன்றத்தில் வஃக்பு போர்டு மசோதா நிறைவேறி உள்ளது! சட்டமாகும்‌!
உண்மையில் வஃக்பு வாரியத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள்! தங்களுக்குச் சொந்தமான இந்த இடங்கள் உண்மையில் வறுமையில் வாடும் ஏழை முஸ்லிம்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்! என்பதைத்தானே நோக்கமாகச் சொல்லுகிறார்கள்! அதைவிடுத்து அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது பிற மதத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் இந்த வஃக்பு போர்டு சொத்துக்களை அபகரிக்கிறார்கள் என்றெல்லாம் இருக்கிறதே அதை முதல்வர் அவர்களே! நீங்கள் அனுமதிக்கிறீர்களா! அதேபோல் அதன் சட்டத்தில் அடுத்தமதத்துக்
கார்கள் இந்தச்சொத்துக்களை வாங்க கூடாது முடியாது என்ற ஷரத்தும் இருக்கிறதே! இதில் என்ன தவறு இருக்கிறது! ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முஸ்லிமாக இருந்தால் அவர் தனது சொத்துக்களை வஃக்பு வாரியத்திற்கு தானமாக வழங்கலாம்.. அதேபோல் ஷன்னி ஷியா அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக வஃக்பு வாரியம் இருக்கும். அதன் மத்திய கவுன்சிலின் படி 22 பேர் முஸ்லிம்களாகவும் அதற்குள் நான்கு பேர்தான் பிற எந்த மதத்தை சார்ந்த மூன்று பார்லிமென்ட் உறுப்பினர்களும் இருப்பார்கள். அதில் இரண்டு பெண்களும் உறுப்பினர்களும் இருப்பார்கள். மேற்ச் சொன்ன வஃக்பு வாரியத்தின் சட்டதிட்டங்களின் அடிப்படையில் குறிப்பாக ஏழைகள் தான் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற சரியான காரணங்களோடு தானே இந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் மேற்க்கொள்ளப்படுகிறது.
பார்க்கப் போனால் தேச விரோதிகள் இந்தச் சொத்துக்களை அபகரித்து அதில் கட்டடங்களைக் கட்டி அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகக் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை தவறு என்று சொன்னால் நீங்கள் பொது வாழ்க்கைக்கு லாயக்கில்லை என்று தான் அர்த்தம்!. இல்லை உங்களை அறியாமலே மேற்ச் சொன்ன அநியாயத்திற்குத் துணை போகிறீர்களா? நூற்றாண்டு காலங்களாக வஃக்பு போர்டு சொத்துக்களைப் பிற மதத்துக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு அதில் கொழித்துக் கொண்டிருப்பதெல்லாம் நியாயம் என்று சொல்கிறீர்களா?
குறிப்பாக வஃக்பு போர்டு சொத்துக்கள் சிறுபான்மை மக்களான ஏழை எளியவர்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும்! அதுதானே சட்ட திருத்தத்தின் நோக்கம்! அதை விடுத்து மதவாதம் மதவாதம் வந்துவிடும் என்றெல்லாம் சொன்னால் இங்கு எங்கே மதவாதம் இருக்கிறது! இந்தியாவில் உள்ளவர்கள் எல்லாம் இந்து மதத்தில் சேருங்கள் என்று வற்புறுத்துகிறார்களா? இல்லை அதைத் திணிக்கிறார்களா?
இந்தியாவில் கிறிஸ்துவராக இருப்பவர்கள். சர்ச்சில் மணியோசையோடு ஜெபங்கள் நடத்துகிறார்கள்.! இஸ்லாமியர்கள் மசூதிகளில் பாங்கோசையோடு தொழுகை நடத்துகிறார்கள்! இந்துக்கள் ஆலயங்களில் வழிபாடு நடத்துகிறார்கள்! சீக்கியர்கள் தங்களது பொற்கோவிலில் கிரந்தம் வாசிக்கிறார்கள்! பௌத்தர்கள் மடாலயங்களில் தியானம் செய்கிறார்கள். அவரவர் உரிமைகளில் யாருக்கு என்ன தடை இருக்கிறது! இதன் பெயர்தானே மதநல்லிணக்கம்! இத்தனை மதங்கள் தங்களது வழிபாட்டு உரிமைகளோடும் அதன் நம்பிக்கைகளோடும் வாழும்போது மதச்சார்பற்ற நாடு என்று சொல்வது தவறு தானே! மதன் நல்லிணக்கம் என்று தான் சொல்ல வேண்டும். Not secularism but communal harmony.
இதன் அடிப்படையில் பேசாமல் சுற்றி உள்ள ஆட்கள் எழுதிக் கொடுப்பதைப் பேசுவது அல்லது எழுதிக் கொடுக்கும் அவர்களுக்குத்தான் இதெல்லாம் தெரியாதா! எதிர்ப்பு அரசியல் என்பது அறிவும் ஆற்றலும் உடையதாக இருக்க வேண்டும்! எகத்தாளமாக நேர்மறையாக இருக்க கூடாது!
50 60 ஆம் வருடங்களில் நடந்த பழைய பஞ்சாங்கங்களையே நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் இன்றைய கால மாற்றங்களை கவனிக்க தவறுகிறீர்கள் என்று தான் அர்த்தம்! இன்றைக்கு நீங்கள் சூட் கோட் போட்டு கொண்டு வெளிநாடுகள் எல்லாம் சென்று முதலீடுகளுக்காக அலைகிறீர்களே இதெல்லாம் 50 60களில் நினைத்துக் கூடப் பார்க்க முடியுமா! மாற்றங்கள் குறித்து எல்லோரும் தான் சிந்திப்பார்கள்! இந்தியக் கான்ஸ்டியூசன் பிரச்சனைகள் இந்த மாபெரும் தேசத்தில் கவனமாகத்தான் பரிசீலிக்கப்படுகின்றன. தாங்கள் தான் அதற்கெல்லாம் அத்தாரிட்டி என்பது மாதிரி நடந்து கொள்ளாமல் மாறும் நிலவரங்களோடு சேர்ந்து யோசியுங்கள்! வெறும் தேர்தல் கால முரண்பாடுகளை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்த வேண்டாம். உலகமே குளோபல் வீடாகி விட்டது. புதிய தலைமுறைகள் வந்திருக்கிறார்கள். பழைய பஞ்சாங்கங்களை விட்டு நன்மைகளுக்கான வழிமுறைகளை யோசியுங்கள்!
// கேரள சர்ச்சுகள் கூட்டமைப்பு அறிக்கை :
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை முன் வந்துள்ள மத்திய அரசு நடவடிக்கையை கேரள சர்ச்சுகள் கூட்டமைப்பு ஆதரிக்கிறது.
ஏற்கனவே நடைமுறையில் இருந்த வக்பு சட்டம் அடிப்படை இயற்கை நீதிக்கும் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள சிறந்த விழுமியங்களுக்கும் எதிரானதாக இருந்தது.
நாட்டின் மதசார்பின்மைக்கு எதிராக இருந்த இச்சட்டத்தின் பிரிவு 40 மற்றும் பிரிவு 108 A ஆகிய மனிதத்தன்மையற்ற பிரிவுகளை நீக்க தற்போதைய மத்திய அரசு முன்வந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
கண்ணீர் வடிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் துயர் துடைக்கும் வகையில் இச்சட்ட திருத்த மசோதாவை இயன்ற அளவிற்கு விரைவாக நிறைவேற்ற வேண்டும்.
சட்டத்திருத்தம் மட்டுமே (தங்கள் வாழ்விட உரிமை கேள்விக்குறியாகி )கண்ணீர் வடிக்கும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த வக்பு சட்ட திருத்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றும் வகையில் அனைத்து கட்சி எம்பிக்களும் இதனை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.//

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...