Thursday, May 8, 2025

நெல்லை சீமையின் தலைநகரம் திருநெல்வேலி !



 நெல்லை சீமையின் தலைநகரம் திருநெல்வேலி !

117 ஆண்டுகளுக்கு முன் இதே நாள் !
தாமிரபரணியில் செந்நீர் ஓடியது,,,,
அதுபற்றியெல்லாம்,,,
எந்த திராவிடனும், படமெடுக்கல,,,,?
1908 ஆம் ஆண்டு சுதந்திர வேள்வி இந்தியத் திருநாடெங்கும் எழுந்து கொண்டிருந்த காலகட்டம் !
அதே 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் நாள் வங்கத்து சிங்கம் விபின் சந்திர பால் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். !
சுதந்திர போராட்ட வீரர் விபின் சந்திர பால் விடுதலை செய்யப்பட்ட தினத்தினை .வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும், கொண்டாடும் விதமாக பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டி சுயராஜ்ய நாளாக அறிவிக்கிறார்கள் !
அதே மார்ச் மாதம் 9 ம் நாள் தாமிரபரணி நதிக்கரையிலே தைப்பூச மண்டபத்தின் அருகிலே பொதுக்கூட்டம்,,நடைபெறுகிறது !
அடிமைகளாக இருக்கிற மனிதர்களுக்கு எதற்கடா ? சுயராஜ்ய நாள் கொண்டாட்டம் ? என
பொதுக்கூட்டத்திற்குத் தடை விதிக்கிறார்கள்,,,! ஆங்கிலேய அரசு அதிகாரிகள்.
தடையை மீறி பொதுக்கூட்டம் நடைபெறும்,,,
ஆமாம்,,, எவர் தடுத்தாலும் கூட்டம் நடைபெறுமென்று அறிவித்து,, பொதுக்கூட்டம் ஆரம்பமாகிறது.
பத்மநாப ஐயங்கார் பேசுகிறார் !
தீப்பொறி கிளம்புகிறது !
வ.உ.சிதம்பரம் பிள்ளை பேசுகிறார்,,,
அனல் பறக்கிறது !
சுப்பிரமணிய சிவா பேசுகிறார்,,,
அனலாய் பறந்த தீ கொழுந்து விட்டு எரிகிறது !
பதின்மூன்றாயிரம் மக்கள் அன்று தாமிரபரணி நதிக்கரையிலே கூடியிருக்கிறார்கள் !
தாமிரபரணி ஆற்றிலே வெள்ளம் ஓடுகிறது !
அதே தாமிரபரணி ஆற்றின் கரையிலே சுதந்திர வேள்வி நெருப்பாறாக ஓடுகிறது !
சுதந்திரத் தீப் பற்றிக் கொள்கிறது ! நெல்லைச் சீமை மக்களிடம்,,,
நெல்லையப்பர்த் தேர்த் திருவிழாவுக்கு கூடிய கூட்டத்தை விட அதிக கூட்டமென செய்திகள் சொல்கிறது !
கும்பினியான் அச்சமுறுகிறான்.
திருநெல்வேலி பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு அடுத்த நாள் திருமந்திர நகரென்னும் தூத்துக்குடியிலேயும்,,பொதுக்கூட்டம் நடைபெறுகிறது !
இரு பொதுக்கூட்டங்களையும், முடித்து விட்டு திருநெல்வேலிக்குத் திரும்புகிறார்கள்,,, வ.உ.சியும். சுப்பிரமணிய சிவாவும்,,பத்மநாப ஐயங்காரும்,,,
மார்ச் 12 ஆம் நாள் ஆங்கிலேயர்களின் ஏவல் படை மூவரையும், கைது செய்கிறது !
சிறையில் அடைக்கிறது !
சிறைக் கொட்டடி அவர்களை வரவேற்கிறது !
இன்றைக்கு 116 ஆண்டுகளுக்கு முன்னால்,,,,
1908 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 13 ஆம் நாள் திருநெல்வேலி நகரமே தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது போல எழுகிறது !
மக்கள் கூட்டம்,,,விழித்துக் கொள்கிறது,,,!
இனி பொறுப்பதில்லை தம்பீ !
எரிதழல் கொண்டு வா ! என்று கேட்பது போல எதிர்க்குரல் கேட்கிறது,,,
அதுவரை,,போராட்டமா ?
அது எதற்கு நமக்கு ,,,,, ?
வேண்டாத வேலை,,,, !
ராமன் ஆண்டாலும் சரி !
, ராவணன் ஆண்டாலும் சரி !
, கூட இருந்த குரங்கே ஆண்டாலும், சரி ,,,, நமக்கு சொதிக் குழம்பும், சோறும், அவியலும் போதுமென்றிருந்த,,,
ஆமாம் என்றிருந்த நெல்லை மாவட்டத்து சைவப்பிள்ளைமார்கள் கூட போராடத்துணிந்து வீதிக்கு வந்தார்கள் !
அவர்களை விட அதிகமாக,,,
எங்க வக்கிலை சிறையிலடைத்து விட்டார்களென,,
ஏழை எளிய, தொழிலாளி வர்க்கத்து மக்கள் எல்லாம்,,,வீதிக்கு வந்து போராட,,,,வந்து விட்டார்கள்,,,, ,
நெல்லையில் இயங்கி வந்த ம.தி.தா.இந்துக்கல்லூரி மாணவர்களும்,,,
இந்த போராட்டக் களத்திலே இறங்குகிறார்கள்,,,
நெல்லைச் சீமையில் சுதந்திர வேள்வி பற்றி எரிகிறது,,,
பற்றி எரிந்த தீயில்,,,காவல் நிலையங்களும் தப்பவில்லை,,,
நகராட்சி அலுவலகம்,தபால் நிலையங்களும்,
அரசு அலுவலகங்களும்,,பற்றி எரிகிறது,,,
பற்றி எரிந்த தீயில்,,,,
திருநெல்வேலி நகரமே எழுச்சி நாள் கொண்டாடியது,,,
அப்போது ஆங்கே உதவி கலெக்டராக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துப்பாக்கியால் சுடுகிறான் !
ஒரு பச்சிளம் பாலகன் செத்து மடிகிறான் !
காவல் துறை சுடுகிறது !
மேலும் மூன்று பேர் செத்து மடிகிறார்கள்…
நெல்லையிலே இருந்து,,,,
தச்சநல்லூர் வரை மக்கள் கிளர்ச்சியின் முன்னால் ஆங்கிலேய படை பயந்து பின் வாங்குகிறது…
பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது !
மக்களின் கிளர்ச்சியினை,,,,கலக்கத்துடன் திருநெல்வேலி கலகம் என்று தன் குறிப்பேட்டில் பதிவு செய்கிறது,,
பிரிட்டிஷ் பாராளுமன்றம்,,!
சுதந்திர போராட்ட காலத்தில்,,,
நடைபெற்ற முதல் வேலை நிறுத்தம், இது !
மக்கள் திரண்டெழுந்த , முதல் கிளர்ச்சி இதுதான்,,,!
ஆனால்,,,
இந்தத் திருநெல்வேலி கலகம் என்கிற திருநெல்வேலி எழுச்சி நாளினை ,,,
இன்று இன்றைக்கு 116 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த நாளினை நம்மில்,,,
எத்தனை பேர் அறிவோம்,,,??
இந்தக் கிளர்ச்சியின் விளைவென்ன தெரியுமா ?
இந்த கலகத்தின் அடிப்படையிலே தான்,,
வ.உ.சிதம்பரம்பிள்ளைக்கு ,,,
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது,, சுப்பிரமணிய சிவாவுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது..
தென் தமிழகத்தின் மக்கள் போராட்டம்,,, !
அன்றும்,,அறிய வைக்கப்படவில்லை,,,
இன்றும்,,கூட,,
அப்படித்தான்,,,
உண்மைகள் மறைக்கப்பட்டே வந்திருக்கின்றன !
இந்தியா முழுவதும்,
வாய்ப்பூட்டு சட்டம் இருந்த கால கட்டத்தில்,,
தென் தமிழ் நாட்டில் எழுந்த சுதந்திர போராட்டம்,,, !
இது என்பதனை உரக்கச் சொல்கிறேன்,,
116 ஆண்டுகளுக்குப் பின்,,,
மார்ச் 13 அதே நாளில்,,,,
அதே பரணி நதிக்கரையிலிருந்து,,,,
உண்மையினை உரக்கச் சொல்கின்றேன் !
உங்களுக்குக் கேட்கிறதா ? மக்காள்
கை விலங்கொடு வ. உ. சிதம்பரம் பிள்ளை... ஓவியம் Jeeva Nanthan அண்ணா

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்