Monday, May 5, 2025

#ஒருசொல்


 #ஒருசொல்

தமிழக அரசியல் வாதிகள் 'ஜாதியை' வைத்து அரசியல் செய்கிறார்கள்!
தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த பாகுபாடும் இன்றி கல்வி கற்கிறார்கள்!
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் பணிபுரிவோர் எந்த பாகுபாடும் இன்றி பணிபுரிகிறார்கள். அவர்கள் குடும்பங்களில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் அழைக்கப் படுகிறார்கள். அனைவரும் நன்கு உபசரிக்கப் படுகிறார்கள், மதிக்கப் படுகிறார்கள். ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.
அரசு மற்றும் தனியார் போக்கு வரத்துகளில் பயணிக்கும் போதும், இரயில் பயணங்களின் போதும் எல்லா ஜாதியைச் சேர்ந்தோரும் பாகுபாடின்றி பயணிக்கின்றார்கள்! ஒருவருக்கு ஒருவர் பயணத்தின் போது உதவுகிறார்கள்!
நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வெவ்வேறு ஜாதிகளைச் சார்ந்த மக்கள் எந்த பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் உதவுகிறார்கள்!
கோயில்களில் வழிபடச் செல்லும் பலதரப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மக்களும் எந்த பாகுபாடும் இன்றி பெரிய நெரிசல்களிலும் யாருக்கும் எந்த இடையூறும் இன்றி வழிபடுகிறார்கள்!
பெற்றோர் சம்மதத்துடன் பலர் கலப்புத் திருமணம் செய்தும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்‌!
மொத்தத்தில், மக்கள் அனைவரும் எந்த ஜாதி பாகுபாடும் இன்றி ஒற்றுமையாக தமிழகத்தில் வாழ்கிறார்கள்!
ஆனால், இந்த அரசியல் வாதிகள் போட்டி போட்டு ஒவ்வொருவரும் தமிழகத்தில் ஜாதியை ஒழித்து விட்டதாக பெருமையடித்துக் கொள்கிறார்கள்!
அதோடு நிறுத்துவதில்லை!
மக்கள் வரிப்பணத்தில், 'சமத்துவபுரம்' கட்டி ஜாதியை ஒழிப்பதாக பெருமையடித்துக் கொள்கிறார்கள்! வெறும் அரசியல்!
ஜாதியை ஒழித்ததாக பெருமையடித்துக் கொள்பவர்கள் பிராமணர் வெறுப்பை மட்டும் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்!
இவர்கள், ஜாதிவாரி கணக்கெடுப்பு கேட்டுக் கொண்டே இருப்பார்கள்!
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பதை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்!
ஜாதி அடிப்படையிலான கட்சிகளுடன் சுயநலம் கருதி கூட்டணி வைத்திருப்பார்கள்!
தங்களது கட்சிகளில் உள்ள கட்சிப் பதவிகளில் ஜாதி அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்வார்கள்‌!
தேர்தல்களில் போட்டியிட ஜாதி அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்கள்.
அரசு அலுவலகங்களில் ஜாதிச் சங்கங்களை அமைத்துக் கொள்ள அனுமதி தருவார்கள். ஜாதி அடிப்படையில் நடக்கும் போராட்டங்களில் கலந்து அவற்றை ஊக்குவிப்பார்கள்.
தேவைப்படும் போதெல்லாம் பிராமணர் வெறுப்பை விதைக்க ஒருபோதும் தயங்க மாட்டார்கள். அத்தனை நல்ல எண்ணம்!
மக்கள், ஜாதி, மத, இன, மொழி பாகுபாடு இன்றி வாழ விரும்புகிறார்கள்! அரசியல்வாதிகள் அப்படி வாழ மக்களை அனுமதிப்பதில்லை!
மக்களின் ஜாதி உணர்வைத் தூண்டி அரசியல் லாபம் காண்கிறார்கள் அரசியல்வாதிகள்!
'ஜாதியக் கொடுமை', 'கலப்பு திருமணம்', 'ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு' ஆகிய பொருட்களில் மணிக்கணக்கில் மேடைகளில் அடுக்கு மொழியில் பேசுவார்கள். ஆனால், தங்களது தனிப்பட்ட வாழ்வில் இவை எதையுமே பின்பற்ற மாட்டார்கள். ஜாதி உணர்வின் மொத்த வடிவமாகத் திகழ்கிறார்கள் இவர்களில் மிகப் பலர்!
அரசியல் வாதிகளால் தான் சமுதாயத்தில் ஜாதிய குழப்பங்கள் அதிகமாகின்றன. பிரிவினை வளர்கிறது! ஜாதிய எண்ணங்கள் வளர்கின்றன!
பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக கலப்புத் திருமணம் செய்யுமாறு இளைஞர்களைத் தூண்டிவிட்டு சமுதாயத்தை அழிக்கிறார்கள்! இதனால் பல கொலைகளும், தற்கொலைகளும் நடந்தேறுகின்றன!
இப்படித்தான் இவர்கள் ஜாதியை ஒழிக்கிறார்கள்!
சமுதாயத்தில் மக்கள் ஒற்றுமையாக வாழ முடியாத சூழ்நிலையை அரசியல்வாதிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்த உண்மை!
யார் இவர்களுக்கு இந்த உரிமையைக் கொடுத்தது?

No comments:

Post a Comment

ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்...

  #ராஜாஜியினசுதாந்திரா #காங்கிரஸ் ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்... சந்தைப் பொருளாத...