#Bostonteaparty_அமெரிக்கா_பிரிட்டன்_ஐரோப்பியநாடுகள்
———————————————————
#உக்ரைன் அதிபர் #ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி #ட்ரம்புடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒப்பந்தங்கள் ஏதுமில்லாமல் அது முடிந்து விட்டது.
உக்ரைன் அதிபர் உடனே அங்கிருந்து புறப்பட்டு லண்டன் வந்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸடார்மரைச் சந்தித்துள்ளார். இங்கிலாந்தும் பிரிட்ட னும் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும் என்று கெய்ர் சொல்லி உள்ளார். என்னதான் வெள்ளையர்களாக இருந்தாலும் அமெரிக்கா மீது ஐரோப்பியர்களுக்கு வெளியே காட்டி கொள்ளத மிகுந்த மன வருத்தம் எப்போதும் இருக்கிறது.
கடந்த 1850 களிலேயே அல்லது Boston tea party பாஸ்டன் தேநீர் விருந்தில் இருந்து இங்கிலாந்துடன் சண்டை பிடித்து அதன் கட்டுப்பாட்டில் இருந்து விலகிச் சுதந்திரம் வாங்கிக் கொண்ட அமெரிக்கா மீது அந்த வெறுப்பும் வருத்தமும் இருக்கத்தானே செய்யும்! ஒரு வகையில் ஐரோப்பிய நாடுகள் கம்யூனிசத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து கொண்டால் ஒழிய ஆதியில் இருந்த பகை உணர்ச்சி இன்று வரை அவர்களுக்கு இடையில் மாறாமல் தான் இருக்கிறது.
No comments:
Post a Comment