Monday, May 12, 2025

Pahalgam

 தமிழ்நாட்டில் சில அறிவிலிகள் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்ட துயரத்திற்கு பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர்அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என்று பதிவுகள் செய்கிறார்கள். இதை இந்திய ராணுவ வீரர்கள் வேஷம் போட்டு சுட்டார்கள் என்று வாய் கூசாமலும் கூச்சலிட்டனர் சில பிரகஸ்பதிகள்.

சரிதான். உங்களது தமிழ்நாட்டு முதல்வர் கள்ளச்சாராயச் சாவில் எத்தனையோ பேர் இறந்த போது அது நடந்த கள்ளக்குறிச்சிக்குச் சென்று விசாரிக்கவில்லை! இன்றைக்கு பேசுபவர்கள் அத்தனை மரணத்திற்குப் பின்பு அன்றைக்கு அவரைப் பதவி விலகச் சொல்லி போராடி இருக்கலாமே!
“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக
ஆசைப்பட்டானாம்” என்கிற கதையாக
இந்த வெற்று வாய்ச்சவடால் வீரர்கள் ஏதோ ராணுவமே இசுலாமியர்களாக வேடம் போட்டு வந்து இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்றெல்லாம் அதிமேதவிகள் மாதிரி பேசுகிறார்கள். இப்படியா மானங்கெட்டு எதையாவது சொல்லுவது.! தகவல் அடிப்படைகள் நெறிமுறைகள் தெரியாமல் வாய்க்கு வந்ததை உளறி வைத்து மக்களிடையே பிரச்சினையைக் கிளப்புவது இவர்கள்தான். இவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகள் பேட்டி எடுத்து டிஆர்பிஐ கூட்டிக் கொள்கின்ற கொடுமைவேறு.
கடந்த காலங்களை யோசிக்கும் போது இது வள்ளலாரும் வஉசியும் ,பாரதியும் பிறந்த மண்தானா? என்ற கேள்வி எழும்புகிறது!எத்தனை ஆன்மீகப் பெரியோர்கள் தத்துவவாதிகள் பிறந்து உலகத்துக்கே வழிகாட்டிய நம் இந்தியச்சமூகத்தை தோள் கொடுத்தும் இணைந்தும் அதைப் பாதுகாக்க வேண்டிய உறுதிப்பாட்டைப் பற்றி பேசாமல் இந்த அறிவிலிகள் வாய்க்கு வந்ததைப் பேசியே இந்திய இறையாண்மையைச் சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்கள். வாய்மையே வெல்லும் என்பது தான் தமிழ்நாட்டு அரசின் சின்ன திருவாசகம்! பொய்மை தான் வெல்லும் என்பதாகக் கடந்த 30 ஆண்டுகளைக் கடத்திவிட்டார்கள். வெட்கமற்று மத்தியில் கூட்டாட்சித் தத்துவம் வேறு பேசுவார்கள் இவர்கள்! எது பொய்யோ அது திட்டமிட்டப்பட்டு நடத்து உண்மையாகி விடுகிறது. எது உண்மையோ அது மறக்கடிக்கப்பட்டு இருளுக்குள் சென்று விடுகிறது. நியாயங்களோ நிராயுத பாணியாக இருக்கின்றன!
வேறு என்ன சொல்ல செய்ய இருக்கிறது!.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்